தித்திப்பான பேரீச்சம்பழ பாயசம் (Dates payasam)
ஏராளமான சத்துக்களைக் கொண்ட பேரீச்சம்பழம் பயன்படுத்தி பாயாசம் (Dates payasam) செய்யும் முறையைப் பார்ப்போம்.
ரம்சான் நோன்பின் போது, நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்து , இஸ்லாமிய மக்கள் மாலை வேளையில் இரண்டு பேரீச்சம்பழத்தை முதலில் சாப்பிடுவார்கள்.இது ஏன் என்று அறிவீர்ர்களா?
காரணம் ஏனெனில் வெறும் வயிற்றில் அதிகச் சத்துள்ள பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதால், நம் உடல் முழுச்சத்துக்களையும் ஒரு சிரமமும் இல்லாது ,இலகுவாக கிரகித்துக்கொள்ளும். அதோடு உணவை அதிக அளவு சாப்பிட வேண்டும் வேண்டிய அவசியம் இல்லாமல் , ஒரு நிறைவுத்தன்மை கிடைக்கின்றது.
பேரீச்சம்பழ பாயாசம் (Dates payasam) செய்யும் முறையைப் பார்ப்போம். மிக அருமையாக இருக்கும்.
நாள் ஒன்றுக்கு மூன்று பேரீச்சம்பழங்களாவது சாப்பிட வேண்டும்’ என்று சிலர் கூறுவதை நாம் கேட்டிருப்போம். காரணம், அந்த மூன்று பேரீச்சையே நமக்கு அதிக ஆற்றலைத் தரக்கூடியது. பேரீச்சம்பழம் ரத்தசோகையைப் போக்குவதற்கும், முடி உதிர்வைத் தடுப்பதற்கும் உதவக்கூடியது. உடற்கழிவுகளை சீராக வெளியேற்றிவிடும். மலச்சிக்கல் பிரச்சனை இருக்கவே இருக்காது.
பேரீச்சம்பழ பாயசம் (Dates payasam) செய்ய தேவையான பொருட்கள்
கொட்டை நீக்கியபேரீச்சம்பழம் – 1 கப்
தேங்காய்ப் பால் – 1 கப்
நறுக்கியவெல்லம் – 1/4 கப்
ஏலக்காய்த் தூள் – 1 சிட்டிகை
பச்சைக் கற்பூரம் – 1 சிட்டிகை(விரும்பினாள் )
உப்பு – 1 சிட்டிகை
செய்முறை
கொட்டை நீக்கிய பேரீச்சம் பழத்தை பொடிப் பொடியாக அரிந்து தேங்காய்ப்பால் சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும் .
வெல்லத்தை சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு கொதிவிட்டு கரைந்ததும், ஒரு உலோக வடிகட்டியில் தூசி நீங்க வடிகட்டிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் அல்லது நான்ஸ்டிக் தவாவில் தேங்காய்ப்பாலுடன் சேர்த்து அரைத்த பேரீச்சம்பழம் மற்றும் வெல்ல நீரை சேர்த்து ஒரு கொதி விடவும்
ஒரு சிட்டிகை பச்சை கற்பூரத்தை கட்டைவிரல் மற்றும் ஆட்காட்டி விரலுக்கு மத்தியில் வைத்து நன்கு நெரித்து கொதிக்கும் பாயசத்தில் விரும்பினால்போடலாம்.
பின்னர் ஏலக்காய்பொடி தூவி ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலந்து பின் பரிமாறவும்.