பேரீச்சம்பழக் கேக் (Dates recipe)

எல்லோரும் விரும்பி சாப்பிடும் பேரீச்சம்பழம் அதிக சுவையும் சத்துக்களையும் கொண்டது. வளருங் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், அதிகமாக பேரீச்சையை அல்லது பேரீச்சையில் செய்த உணவுகளை(Dates recipe) நாளும் கொடுக்கலாம். உடற்பலம் பெறுவார்கள்.

பொதுவாக பெண்களுக்கு அதிக கல்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை.

குறிப்பாக 45/52 வயதினருக்கு  மாதவிடாய் நிற்கும் காலாகட்டத்தில் (Menopause) ஏற்படும் அதிக இரத்தபோக்கை ஈடு செய்ய  (Menopause) பேரீச்சை உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது.

பேரீச்சையில் அதிக டயட்ரி புரதங்கள் இருக்கின்றது. புரதமோ, நல்ல கார்போஹைட்ரேட்டோ ஜீரணத்தை தாமதப்படுத்துகிறது. இதனால் பசி விரைவில் உணர மாட்டீர்கள்.

அப்படி பேரீச்சையை காலை ப்ரேக் ஃபாஸ்டாக சாப்பிடும்போது உங்களுக்கு பசியை தூண்டாது. அதோடு முழுச் சத்துக்களும் உங்கள் உடலில் இருக்கும்.

பேரீச்சம்பழத்தில் இருக்கும் நல்ல கொழுப்புக்கள் உங்கள் உடல் பாதிப்புகளை சரி செய்கிறது.

உள்ளுறுப்பு காயங்கள், அடிபடுவதால், கண்ட உணவுகளை சாப்பிடுவதால் ஏதாவது நோயினால் என பல காரணங்களால் ஏற்படுவதுண்டு. இந்த காயங்களை ஆற்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ தினமும் பேரீட்சை சாப்பிட வேண்டும். annaimadi.com,dates cake recipe,easy cake recipe,healthy cake,indian receipe,cake recipe,

பேரீச்சையின் பயன்கள்

பேரீச்சையில் உள்ள புரதச் சத்துக்கள் உங்களின் தசை வடிவத்தையே மாற்றும் திறன் கொண்டது. தேவையற்ற கொழுப்புகள் மறைந்து ஆரோக்கியமான தசைக் கட்டமைப்பு உருவாகும்.

சர்க்கரை வியாதியை தடுக்கும். இனிப்புள்ள எல்லா உணவுகளும் சர்க்கரை வியாதியை தரும் என நினைக்க வேண்டாம்.

பேரீச்சை பழத்திலுள்ள ஃபீனாலின் பண்புகள் இன்சுலினை சுரக்க தூண்டுகின்றன. இவை சர்க்கரையை ஒழுங்குபடுத்தி சர்க்கரை வியாதியை தடுக்கிறது.

சர்க்கரையை வேண்டாம் என பல மருத்துவர்கள் அலறுகிறார்கள். ஆனால் சர்க்கரை இல்லாமல் காபி, டீ அருந்த முடியவில்லை என நீங்கள் கவலைப் பட்டால் உங்களுக்கு இந்த விஷயம் வரப் பிரசாதம்.

பேரீச்சையை உருக்கி, பாகு பதத்தில் காய்ச்சி ஒரு டப்பாவில் போட்டு, சர்க்கரைக்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம். இதனால் புற்று நோய் முதல் பல ஆபத்தான நோய்கள் தடுக்கப்படுகின்றன.

பேரீச்சையை சாப்பிட்ட பின் உண்டாகும் மாற்றங்கள் பேரிச்சை உடலில் விடாப்படியாக தங்கி இருக்கும் கொழுப்பை உடைத்து முற்றிலும் செரிமானத்திற்கு உட்படுத்துகிறது.

இதனால் கொழுப்பு வேகமாக கரைந்து விடுகிறது. உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெற ஆரம்பிக்கும்.

இரத்த சோகையை தடுக்கும். சாதரண சளி, காய்ச்சலிலிருந்து டெங்கு காய்ச்சல் வரை உங்களை நெருங்காது.datesrecipe,annaimadi.com,dates cake recipe,easy cake recipe,healthy cake,indian receipe,cake recipe,

சிலருக்கு எதற்கெடுத்தாலும் அலர்ஜி உண்டாகும். தூசி, புகை, சின்ன பூச்சி கடித்தாலும் கூட உடலில் அலர்ஜி உண்டாகும். அவர்கள் எல்லாம் தினமும் பேரீச்சம்பழத்தை சாப்பிட்டால் இந்த பாதிப்பு அறவே போய்விடும்.

இதய நோய்கள் இந்த காலத்தில் மிகவும் சாதாரணமாகிப் போய்விட்டது. ஆனால் நீங்கள் தினமும் பேரீச்சையை சாப்பிடுபவர்கள் என்றால் உங்கள் இதயம் பலமடங்கு பாதுகாப்போடு இருக்கும்.

உங்கள் ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துகிறது. இதனால் எங்கும் கழிவுகளோ நச்சுக்களோ தங்காது. தேவையற்ற கட்டிகள், நீர்க்கட்டிகள் உருவாகாது. சுறுசுறுப்போடு இருப்பீர்கள். இப்படி Dates syrup ஆகவும் குழந்தைகளுக்கு கொடுத்து வர ,அவர்களின் ஆரோக்கியம் மேம்படும். Check Price

பேரீச்சம்பழ உணவுகள் (Dates recipe)

சில குழந்தைகள் எதைச் சாப்பிட்டாலும் உடல் பெருக்காமல் மெலிந்தே காணப்படுவார்கள்.அவர்களுக்கு தினமும் பேரீச்சம்பழத்தை அப்படியே சாப்பிடக் கொடுக்கலாம். இல்லையென்றால் 

பேரீச்சம்பழ லட்டு, பாயாசம் கேக் (Dates cake) செய்து கொடுத்து வந்தால் விரும்பி உண்பார்கள்.அதோடு  குழந்தையின் உடல் தேறி, வலுவுடனும் சுறுசுறுப்பாகவும் இருபார்கள்.

கேக் என்றால் பெரியவர்கள் சிறியவர்கள் என எல்லோருக்குமே அதிகம் பிடிக்கும். பேரீச்சம்பழத்தில் கேக் செய்து கூடவே ஆரோக்கியத்தையும் பெற்றுக் கொள்ளலாம்.

வீட்டிலேயே எளிய முறையில் பேரீச்சம்பழத்தில் கேக் (Dates cake recipe) செய்வது எப்படி என வீடியோ செய்முறையை  பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published.