இறந்தவர்கள் கனவில் வந்தால்? (Dead people in dreams)
இறந்தவர்கள் கனவில் வந்தால் (Dead people in dreams) நல்ல செய்தி வரும் மேலும் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள் என்று பொருள். இறந்து போன உங்கள் தந்தை உங்கள் கனவில் வந்தால், உங்களால் தீர்க்க முடியாமல் இருக்கும் ஒரு பிரச்சனையை விரைவில் வெற்றிகரமாக முடிப்பீர்கள் என்று பொருள்.
இப்படியாக கனவுகள் என்பது எப்போதுமே விசித்திரமானவை. நம் ஏன் கனவு காண்கின்றோம்,ஒரு கனவு எதற்காக வருகிறது, எதனால் வருகிறது என்று நாம் சரியாக அறிய முடியாது. இதில் சில கனவுகள் நமக்கு ஏதோ செய்தி சொல்லும்படி இருக்கும்.
கனவுகளிலும் கூட பல்வேறு வகை இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் இறந்தவர்கள் கனவில் வருவது (Dead people in dreams). அதன்படி கனவில் இறந்தவர்கள் தொடர்ந்து வந்துக்கொண்டே இருந்தால் பல நல்ல மற்றும் அசுப அறிகுறிகளை அளிக்கிறது.
குறிப்பாக திடீரென எம்மை விட்டு பிரிந்த எம் அன்புக்குரியவர்கள் கடைசி நேரத்தில் நம்மிடம் ஏதாவது சொல் நேர்ந்திருக்குமே,நாம் அவ்வேளையில் அருகில் இல்லாமல் போய்விட்டோமே என்ற ஏக்கம் பலருக்கும் இருக்கும்.அப்படியானவர்கள் கனவில் வந்தால் அந்தக் கனவுகளின் பலன் அறிய அனைவருக்குமே ஆவலாக இருக்கும்.
கனவில் வரும் இறந்த நபரின் ஆவி எதாவது ஒரு பொருள் அல்லது நபரை சுட்டிக்காட்டுவது அவர்கள் மூலமாக உங்களுக்கு ஏதோ கெட்ட செய்தி வர போகிறது என்பதை உணர்த்துவதாம்.
கனவில் வரும் இறந்த நபர் அமைதியான முறையில் அழைப்பது போன்ற கனவு வருவது, நீங்கள் உங்கள் பழைய கால உறவுடன் மீண்டும் சேர வாய்ப்புகள் வருவதை உணர்த்துகிறதாம்.
இறந்த குடும்ப உறுப்பினர் கனவில் அழுவதைக் கண்டால், இந்த கனவு நல்லதாகும்.
இறந்த குடும்ப உறுப்பினர் கனவில் (Dream) தொடர்ந்து வந்தால், அவரது ஆன்மா அலைந்து திரிகிறது என்று அர்த்தம். எனவே அவருடைய பெயரில் ராமாயணம் (Ramayana) அல்லது ஸ்ரீமத் பகவத் கீதை வாசிக்கவும்.
இறந்தவர்களைக் கனவில் காண்பதன் அர்த்தம் (Meaning of dead people come in dreams)
1. இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல செய்தி வரும் மேலும் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள் என்று பொருள்.
2. சவபெட்டியை கனவில் கண்டால் நமக்கு நெருங்கியவர்கள் இறக்க போகிறார்கள் என்று அர்த்தம்.
3. இறந்து போனவர்கள் உங்கள் வீட்டில் தூங்குவதை போல கனவு கண்டால் பெரிய கண்டத்தில் இருந்து தப்பிப்பீர்கள் என்று பொருள்.
4. இறந்தவர்கள் உங்களுடன் சாப்பிடுவது போல கனவு கண்டால் நற்புகழும் அதன் காரணமாக செல்வ செழிப்பும் ஏற்படும்.
5. இறந்தவர்கள் உங்களிடம் பேசுவது போல கனவு வந்தால் இக்கட்டான நிலையில் உங்களுக்கு உதவ சிலர் வருவார்கள் என்று பொருள்.
6. நாமே இறந்து விட்டது போல் கனவு வந்தால் நம்முடைய ஆயுள் கூடும்.
7. இறந்து போன உங்கள் தந்தை உங்கள் கனவில் வந்தால், உங்களால் தீர்க்க முடியாமல் இருக்கும் ஒரு பிரச்சனையை விரைவில் வெற்றிகரமாக முடிப்பீர்கள் என்று பொருள்.
8. இறந்து போன உங்கள் தாய் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்குகோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவருக்கோ ஒரு பெண் குழந்தை பிறக்க போகிறது என்று பொருள்.
9. நமக்கு வேண்டப்பட்ட யாரவது இறந்துவிட்டது போல கனவு வந்தால் துன்பங்கள் விலக போகிறது என்று அர்த்தம்.
10. இறந்து போனவர்களை (யாராக இருந்தாலும்) தூக்கி செல்வது போல கனவு வந்தால் நன்மை உண்டு.
11. இறந்தவர்கள் கனவில் வந்து நம்மை ஆசிர்வதிப்பது போல கனவு கண்டால் எல்லா விதமான நன்மையும் ஏற்படும் என்று அர்த்தம்.
12. இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் நல்லதல்ல, கோவிலில் அர்ச்சனை செய்வது நல்லது.
13. இறந்தவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டால் பெயரும், புகழும் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
14. இறந்துபோன தாய் மற்றும் தந்தையை கனவில் கண்டால், கனவு கண்டவருக்கு வர இருக்கும் ஆபத்தை சுட்டிக்காட்டி எச்சரிக்க வந்தார்கள் என்று பொருள்.
15. தான் இறந்துவிட்டதுபோல் கனவு வந்தால், நன்மைகளே ஏற்படும். வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
16. உறவினர் ஒருவர் இறந்து விட்டதுபோல் கனவு கண்டால், அவரின் துன்பங்கள் நீங்கும் என்று பொருள்.
17. நண்பன் இறந்து போனது போல் கனவு கண்டால், கூடிய விரைவில் நற்செய்தி ஒன்று வரும்.
18. குழந்தை இறந்து போனது போல கனவு கண்டால், கனவு கண்டவருக்கு பெரிய ஆபத்து ஏற்பட போகிறது என்று பொருள்.
19. இளம் மனைவி இறப்பது போல கனவு கண்டால், மனைவிக்கு இரட்டைக் குழந்தை பிறக்க போகிறது என்று அர்த்தம்.
20. இறந்த மனைவி, மேலுலகில் மகிழ்ச்சியாக இருப்பது போல் கனவு வந்தால், வாழ்க்கை நிம்மதியாக இருக்கும். அப்படி இல்லாமல், அவளின் முகம் துயரம் தோய்ந்ததாக இருப்பின் வாழ்க்கை நிலையற்றதாகி விடும்.