தொப்பையை போக்கும் தனுராசனம் (Dhanurasana benefits)

பெருத்த வயிற்றைக் குறைக்க பெரிய பிரயத்தனங்கள் தேவையில்லை.எளிமையான யோகாசனங்கள் போதும்.முக்கியமாக தனுராசனம் (Dhanurasana benefits) வயிற்றுப்பகுதிக்கு மிக நல்ல ஆசனம்.அதோடு உடற் கழிவுகள் இலகுவாக வெளியேறும். நமது உடல் கழிவுகள் சரியாக அகற்றப்படாமையே நோய்க்கான முதற்காரணியாக இருக்கிறது.

வயிறு அளவாக இருப்பது அழகானது மட்டுமல்ல. ஆரோக்கியமானதும் கூட. இன்றைய வாழ்வியலில் குழந்தை பெற்ற பெண்களுக்குத்தான் வயிறு பெருக்கும் என்ற நிலை மாறி, இன்று ஆண்கள், சிறுபிள்ளைகள், இளம்பெண்களுக்கும் என்று அனைவருக்குமே ஒரு பிரச்சனையாக உள்ளது இந்த தொப்பை.

தனுராசனம் எப்படி செய்வது என வீடியோவில் பார்க்கலாம்.

இந்த ஆசனத்தில் கைகள் நாண் கயிறாகவும், உடல் வில்லாகவும் தோற்றம் தருவதால் தனுராசனம் எனப்படுகிறது. வளையாமல், நெளியாமல் நிமிர்ந்து இருக்க முதுகுத் தண்டையும், முதுகையும் பலப்படுத்தும் ஆசனம்.

தனுராசனம் செய்முறை

விரிப்பில் குப்புறப்படுத்துக் கொள்ள வேண்டும், பின்னர் இரு கால்களையும் மடக்கி உயர்த்தி கால்களை நன்கு அகற்றி கொள்ள வேண்டும். அதன்பின் இரு கைகளையும் பின்புறமாக கொண்டு சென்று இருக்கால்களையும் பிடித்துக் கொள்ளவும்.

சுவாசத்தை மெதுவாக விட்டவாறு தலை, கழுத்து, மார்பு ஆகியவைகளை மேலே தூக்க வேண்டும். வயிற்றுப் பகுதி மட்டும் விரிப்பில் இருக்க வேண்டும். இதுவே ஆசன நிலையாகும்.

ஆரம்ப நிலையில் ஆறு வினாடிகள் இருந்து படிப்படியாக வினாடிகளை அதிகரித்து கொள்ளாலாம். குறிப்பிட்ட நேரம் ஆசன நிலையில் இருந்தபின் சுவாசத்தை மெதுவாக இழுத்துக் கொண்டே உடலைத் தாழ்த்தவும்.

கைகளின் பிடிப்பிலிருந்து கால்களை விடுவித்து ,குப்புறப்படுக்கும் நிலைக்கு வரவும்.

தனுராசானத்தின் பயன்கள் (Dhanurasana benefits)

முதுகெலும்பைச் சார்ந்த எல்லா நாடி நரம்புகளுக்கும் சுத்தமான இரத்தம் பரவி ,நரம்பு மண்டலம் முழுவதும் உறுதி அடைகிறது.

முதுகெலும்பின் நடுப்பாகம் நன்கு வளைக்கப்படுவதால் எந்த வயதிலும் இளமையோடு சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது.

சுவாச உறுப்புகள் பலம் பெறும். சுவாச கோளாறுகளை நீக்குகிறது. 

நமது ஜீரணப் பாதை முழுவதும் சீராக்கப்படுகிறது.

Benefits of Dhanurasana,annaimadi.com,yoga block,soft slip for yoga

Check Price

கணையம், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை புதுப்பித்து செயல்பட வைக்கிறது.

சர்க்கரை நோய், மாதவிடாய் கோளாறுகள், சிறுநீரை அடக்க முடியாமை போன்றவற்றுக்கு யோக மருத்துவத்தில்  தீர்வாக பயன்படுத்தப்படுகிறது
வயிற்றுப் பகுதியை சுற்றி இருக்கும் அதிக கொழுப்பை எளிதில் குறைக்க உதவும் ஓர் ஆசனம்.

நெஞ்சுப்பகுதியை விரிவடையச் செய்வதனால் ஆஸ்துமா போன்ற சுவாசம் தொடர்பான நோய்களுக்கும் தீர்வாகிறது.

முதுகெலும்பு வழியாக ஓடும்  நாடி நரம்புகளுக்கு புது இரத்தம் செலுத்தப்பட்டு உறுதி அடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *