தொப்பை கரைய தனுராசனம் (Dhanurasana)

தனுராசனம் (Dhanurasana ) செய்வதால் என்ன பலன்?

தனுராசனம் (Dhanurasana ) செய்யும் போது முதுகெலும்பின் நடுப்பாகம் நன்கு வளைக்கப்படுகிறது.இதனால் எந்த வயதிலும் இளமையோடு சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது.

முதுகெலும்பைச் சேர்ந்த எல்லா நாடி நரம்புகளுக்கும் சுத்தமான ரத்தம் பரவி நரம்பு மண்டலம் முழுவதும் உறுதி அடைகிறது.முதுகுத் தண்டுவலி குறைய தொடங்கும்.

இதைத் தொடர்ந்து செய்தால் தொப்பை கரைவதோடு, இடுப்பு, தொடைகளில்  உள்ள தேவையற்ற தசைகளும் குறையும்.வயிற்றுத் தொல்லைகள், வாயுத் தொல்லைகள் குறையும்.இரைப்பை, குடல்களிலுள்ள அழுக்குகள் வெளியேறும்.இதனால்  உடல் எடையும் குறையும்.

benefits of dhanurasana,dhanurasana,yoga,annaimadi.com

உடல் பின்னோக்கி வளைக்கப் படுவதால் ரத்த ஓட்டம் சீராகும். ரத்தக்குழாய்கள் நன்கு செயல்படும். அதிகப்படியான பிராணவாயு கிடைக்கும்.சுவாச உறுப்புகள் பலம் பெறும்.நுரையீரல் நன்கு செயல்படுவதால் ஆஸ்த்மா நோய்க்கு பலனளிக்கும். 

இதயம் நன்கு சுருங்கி விரிந்து சுறுசுறுப்பாக இயங்கும்.

இந்த ஆசனத்தின் மேலதிக தகவலறிய வீடியோவைப் பாருங்கள்.

தனுராசனம் செய்யும் முறை

1.கைகளை முன் நீட்டி உள்ளங்கைகளைத் தரையில் பதித்து முகவாய் தரையைத் தொடும்படி குப்புறப்படுக்கவும்.உள்ளங்கால்கள் மேல் நோக்கியிருக்கும் வண்ணம் கால்கள் இணைந்து இருக்க வேண்டும்.தலை முதல் பாதம் வரை நேர்கோட்டில் இருக்க வேண்டும்.

2.முழங்காலை மடித்து இடது பாதத்தை இடதுகையாலும்,வலது பாதத்தை வலதுகையாலும் பிடிக்கவும்.

3.கைகளையும்,கால்களையும் ஒன்றோடொன்று இழுத்து முதுகுத் தண்டை வளைத்து தலை,மார்பு,தொடைஆகியவற்றை உயர்த்தவும்,வயிற்றுப் பகுதி மட்டும் தரையில் இருக்கவும்.

4.இந்நிலையில் சிறிது நேரம் இருந்த பின் ஆரம்ப நிலைக்கு வரவும்.

பலன்கள்

  • முதுகுத் தண்டு வளையும் தன்மை பெறுகிறது.
  • முதுகுத் தண்டுவலி ,நீரிழிவு, பிரச்சனைகள் சரியாகும்.
  • ஜீரணக் கோளாறு, மலச் சிக்கல்சம்பந்தமான நோய்கள் நீங்குகின்றன.
  • இடுப்புத் தசைகள் வலுப்பெறுகின்றன .
  • புத்துணர்ச்சியோடு இருக்க வழி செய்கிறது.
  • குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தல் பிரச்சனை இல்லாமல் போகும்.
  • சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும்.
  • ஆண்,பெண் இனப்பெருக்க உறுப்புகளுக்கு நல்ல ரத்த ஓட்டம் ஏற்படும்.
  • பெண்களின் கர்ப்பப்பை பலப்படும். மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.
  • நுரையீரல் நன்கு பலமாகும்; இதனால் சளி, சைனஸ், இருமல் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

Leave a Reply

Your email address will not be published.