சமய சடங்குகளில் தர்பைபுல்லுக்கு ஏன் அதிக முக்கியத்துவம்(Dharbha)
தர்ப்பையினால் (Dharbha) செய்யப்படும் மோதிரம் போன்ற அமைப்பு பவித்ரம் என்று அழைக்கிறோம். பவித்ரம் என்றால் பரம சுத்தமானது என்று அர்த்தம்.

கல்யாணத்தில், கல்யாண பெண்ணிற்கும், சீமந்தத்திற்கும், அதே மாதிரி உபநயனத்தில் வடுவிற்கும் இடுப்பில் தர்ப்பங்களினாலான கயிற்றை மந்திர பூர்வமாக கட்டும் பிரயோகமும் இருந்து வருகின்றது.
பிராமணருக்கு தர்பை புல் ஓர் ஆயுதம். முனிவர்களும், ரிஷிகளும் தர்ப்பைப்புல், தண்ணீர், மந்திரசத்தி மூன்றையும் இணைத்து செயற்கரியா செயல்களை செய்தனர்.வரம் கொடுத்தனர். சாபம் கொடுத்தனர்.அஸ்திரங்களை பிரயோகித்தனர்.
பிரபஞ்சத்தில் பிராணசக்தியை கடத்தும் சக்தி தர்ப்பைக்கு உண்டு.
கையில் தர்ப்பைப் புல்லுடன் உள்ள அந்தணர் அகங்காரம் இல்லாமல் இருப்பாராகில், அக்னியைக் கண்ட பனி ஒழிவது போல அவன் பாவங்களை அழிக்கவல்லவர்.
சூரிய, சந்திர கிரகணத்தின்போது உணவுப் பொருள்களிலும், குடிநீரிலும் சிறிது தர்பைப் புல்லைப் போட்டு வைத்தால் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
தர்பைப் புல் தரும் ஆரோக்கியம் (The health benefits of Dharbha grass)
தர்பைப் புல் சில துண்டுகளை குடிநீர்ப் பானையில் போட்டு வைத்து, அந்த நீரை அருந்தினால் கடும் வெயிலின் தாக்கம் குறையும்.
எல்லா விதமான ஆசனங்களையும் விட தர்ப்பாசனம் (பாய்) சிறந்தது என்பார்கள். தர்பாஸனத்தில் அமர்ந்து செய்யும் பூஜை மற்றும் ஜெபங்களுக்கு பலமடங்கு சக்தி உண்டு.
தர்பைப் புல்லால் (Dharbha) செய்யப்படும் பாய் விரிப்பில் படுத்து உறங்கினால் உடல்சூடு தணியும். மன உளைச்சல் நீங்கும். நல்ல உறக்கம் கிடைக்கும். ஆரோக்கியம் நீடிக்கும்.
தர்பைப் புல்களின் காற்றுபட்ட இடங்களில் தொற்றுநோய் ஏற்படாமலிருக்கும் என்பதால், இதை கிராமத்து வீட்டு வாசல்களில் கொத்தாகக் கட்டி தொங்கவிட்டிருப்பார்கள்.
இந்தப் புல் இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்டது. குடிநீரில் தர்பைப் புல்லை துண்டாக்கிப் போட்டு குடித்தால் சர்க்கரைநோய் கட்டுக்குள் இருக்கும்.
உடல் சூடு காரணமாக அடர் மஞ்சள் நிறத்தோடும், எரிச்சலோடும் சிறுநீர் கழிப்பவர்கள் கையளவு தர்பைப் புல்லை எடுத்து நீரில் காய்ச்சி ஆறவைத்து, வடிகட்டிக் குடித்தால் அந்த உபாதைகள் நீங்கும்.
சிறுநீரகம், கல்லீரல், குடல்புண், வாய்ப்புண் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் தர்பைப் புல் கொண்டு காய்ச்சிய நீரைக் குடித்தால் அந்தப் பிரச்சனைகள் நீங்கும். அதோடு சிறுநீரகக் கற்களையும் வெளியேற்றும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
ஆண்டு முழுவதும் வைத்துப் பயன்படுத்தும் ஊறுகாய், வற்றல், வடகம் போன்றவற்றில் சில தர்பைப் புற்களைப் போட்டுவைத்தால் அவை கெட்டுப்போகாமல் இருக்கும். அவற்றின் சுவையையும் மணத்தையும் அதிகரிக்கும்.
தர்ப்பைப்புல்லின் சிறப்புகள் (Properties of Tarpai grass)
தர்பை ஒரு சிறந்த மின் கடத்தி.அது ஆற்றலையும் கடந்த வல்லது.!தர்ப்பையை உபயோகப்படுத்திய பின், அதை நான்காக பிரித்து வடக்கு பக்கமாக போடவேண்டும். பின்பு கண்டிப்பாக ஆசமனம் செய்தால் தான், நாம் தர்பையை உபயோகித்து செய்த கர்ம பலன் அளிக்கும்.!
தர்பை எல்லா இடங்களிலிலும் வளராது. மிகவும் தூய்மையான இடங்களில் தான் வளரும். தர்பை கதிர்வீச்சினை எதிர்க்கும் சக்தி கொண்ட தாவரமாகும். தர்பையில் மருத்துவ குணங்கள் பல உள்ளன.
தருப்பை மூன்று தோஷங்களைச் சமப்படுத்தும். அக்னி போன்றது.உஷ்ண வீரியம் உடையது.அதிவேக முடையது.நீரை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.
தருப்பைப் புல் தண்ணீர் இல்லாவிட்டாலும் பல நாட்கள் வாடாது. நீர் நிலையில் தோய்ந்தே இருந்தாலும் அழுகாது. இதனை “அம்ருத வீரியம்” என்றும் சொல்வர். இந்தப் புல் உலர்ந்து போனாலும் இதன் வீரியம் குறையாது. சூரிய கிரகணத்தின் போது இதன் வீரியம் அதிகமாகும்.
பஞ்ச லோகங்களில் தாமிரத்தில் உள்ள மின்சார சக்தி தர்ப்பையிலும் உண்டு. எனவே தான் கோவில் கும்பாபிஷேகங்களில் தங்க, வெள்ளி கம்பிகளின் இடத்தில் அருளைக் கடத்த தர்ப்பையைப் பயன்படுத்துவார்கள்.
தர்ப்பையின் சாம்பலால் தான் கோவிலில் உள்ள விக்ரங்களையும், பாத்திரங்களையும் துலக்குவார்கள்.
தர்ப்பை புல்லின் அடிப்பாகம் பிரம்மனும், மத்தியில் விஷ்ணுவும், நுனியில் ருத்ரனும் இருப்பதால் பரம பவித்ரமானது.
ஹோம குண்டங்களில், யாகசாலையில் இருந்து பிம்பத்திற்கும், கலசங்களுகும் மந்திர ஒலிகளை கடத்தி சக்தியை அளிக்கும்.நான்கு பக்கமும் தர்பை புல்லை வைப்பது, அந்த குண்டங்களை பாதுகாக்கும் அரணாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
யாகத்தைக் காப்பதற்கு வைக்கப்படும் யாகேஸ்வர தேவரின் கும்பத்திலுள்ள ஞானகட்கம் தர்ப்பையால் செய்து அமைக்கப்படும். திருநள்ளாறு தலத்தில் தலவிருட்சமே தர்ப்பைதான் என்பது குறிப்பிடத்தக்கது.