பேதிமருந்து சாப்பிடும் முறை (Diarrhea medicine)
நோய் நாடி நோய் முதல் நாடி வள்ளுவரின் கூற்றுப்படி இந்த பேதி மருந்து (Diarrhea medicine) நோயின் முதல் நாடியாக அதாவது நோய்க்கான முதல் காரணியாக செயற்பட்டு நோயைத் தீர்க்கின்றது.
உடலில் தங்கும் கழிவுகள்,குடலில் உள்ள நாட்பட்ட கழிவுகள்,விசத்தன்மைகள் போன்றவற்றை அகற்ற சித்தர்களால் ஏற்படுத்தப்பட்டதே இந்த பேதிமருந்து (Diarrhea medicine) சாப்பிடும் முறை.
உடலைச் சுத்தப்படுத்தவே பேதிமருந்து எடுக்கப்படுகின்றது. உயிர் வளியேற்றம் என்பது உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் அயனிகளை உருவாக்கும் ஒரு வேதியல் செயற்பாடு.
பேதி மருந்து (Diarrhea medicine) இந்த உயிர் வளியேற்றத்தை தடுக்கின்றது அல்லது தாமதப்படுத்துகின்றது. இயல்பாகவே இந்த செயற்பாடு நாம் சாப்பிடும் ஊட்டசத்து நிறைந்த உணவுகளால் தடுக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கும்.
ஆனால் சில நோய்களாலும், நாம் உண்ணும் தவறான உணவுகளாலும் இந்த தீய அயனிகள் உருவாக்கம் அதிகப்படுத்தப்பட்டு உடலில் அவை தொடர் நோய்த்தாக்கங்களை உருவாகுகின்றது.
அதாவது மூட்டுவாதம்,பக்க வாதம்,புற்றுநோய்,அல்சைமர், நரம்பு சிதைவு நோய், மாரடைப்பு போன்றவை ஏற்படக் காரணமாகின்றது.
இவை வராமல் தடுக்க சித்தர்காளால் உருவாக்கப்பட்டதே நோய் அணுகா விதிமுறையே இந்த பேதி மருத்துவமுறை.
அதோடு பேதி மருத்துவம் சில சவாலான நோய்களையும் வயோதிபத்தையும் உண்டாக்கும் வேதியல் செயற்பாட்டுக்கு எதிராக செயற்பட்டு இளமையையும் காக்குமாம்.
பேதி மருந்து 1 – கடுக்காய் (Diarrhea medicine)
பேதி மருந்து சாப்பிட்டால் ,காலை முதல் மதியம் வரை அதிகமாகக் கழியும். சிலருக்கு வாந்தி, வியர்வை கூட வரும். மாலை வரை களைப்பு இருக்கும் எனவே முழுமையாக ஓய்வு கிடைக்கும் நாளை இதற்கு தெரிவு செய்ய வேண்டும் .
இதற்கு முதல் நாள் எண்ணெய்க்குளியல் செய்தால் மிகவும் நல்லது. எண்ணெய்க்குளியல் செய்த நாளில் இலகுவாக செரிமானம் ஆகக் கூடிய உணவுகளை உண்ண வேண்டும்.
காலையிலேயே பேதிக்கான மருந்தை எடுக்க வேண்டும்.
பேதி மருந்து 2 – ஆமணக்கு எண்ணெய்
அதிகமாக வேலை செய்த மறுநாளோ,தொலை தூரப் பயனத்தின் பின்போ,இரவு கண் விழித்த பின்னரோ பேதிக்கான மருந்தை பாவிக்கக்கூடாது.
நமது முன்னோர்கள் செய்து வந்த இந்த பேதி மருதத்துவத்தை பாவித்து நாம் உடம்பினை நோயில்லாமல் பாதுகாப்போம்.