சோனம் கபூரின் அழகிற்கான உணவு முறை (Diet Plan)
அழகிய உடல் அமைப்பிற்கு ஒழுங்கான உடற்பயிற்சி வழக்கத்துடன் சரியான உணவை ( Diet Plan) உட்கொள்வது மிகவும் முக்கியமானது என்று கிறார் சோனம் கபூர்.
ஆம் அழகிற்காக மட்டுமல்ல ஆரோக்கிய வாழ்விற்காகவும் சரியான உணவு பழக்கத்தை கைக்கொள்வது அவசியம்.
சோனமின் அவள் தன்னைப் பட்டினி போடுகிறாரா அல்லது குறைவாக சாப்பிடுகிறரா என ஆச்சரியப்படும் அளவு மெலிதான அழகிய உருவம்.
- ஒவ்வொரு 2 மணி நேரமும் சாப்பிடுகிறார். மேலும் அவர் அதிக நேரம் பசியுடன் இருப்பதை தவிர்த்துக் கொள்கிறார்.
- உலர்ந்த பழங்கள், கொட்டைகள், ஹெல்த் பார்கள்(Health bars) , ஆப்பிள், வெள்ளரி, பப்பாளி மற்றும் சில நேரங்களில் ஒரு சிறிய துண்டு டார்க் சாக்லேட் (Dark chocolate) ஆகியவற்றை சாப்பிடுகிறார்.
- உடலை உயர்வான ஆற்றலுடனும், நீரேரற்றத்துடனும் வைத்திருக்க, நாளும் அதிக அளவு நீரை குடிக்கிறார்.
- உணவில் இயற்கையான சர்க்கரையை விரும்புகிறார். அவள் புதிய பழச்சாறுகள் மற்றும் இளநீரை எப்போதும் குடிக்கிறார்.
- குடல் பிரச்சினைகளைத் தடுக்க தினை (Pearl millet) அல்லது சோளமா சப்பாத்தியை அவள் உணவில் சேர்த்துக் கொள்கிறார்.
- அவள் உணவில் வறுத்த காய்கறிகளும் நூடுல்சும் அடங்கும்.
- விற்றமின்களையும் ( Multi vitamin) தினமும் எடுத்துக்கொள்கிறார்
- சாக்லேட்டுகளை அதிகமாக விரும்பினாலும், அவற்றை மிதமான அளவிலேயே உண்கிறார்.
மற்றும் ( gluten free sugar free cakes) குளுட்டன் இல்லாத மற்றும் சர்க்கரை சேர்க்காத கேக்குகளை உண்கிறார்.
எனினும் ,வாரத்தில் ஒருநாள், இவற்றை எல்லாம் விடுத்து விரும்பியபடி சாப்பிடுகிறார். ஆனால் அடுத்த நாளில் கூடுதல் கலோரிகளைக் குறைக்க, அதிக உடற்பயிற்சியை செய்கிறார்.
அவர் தனது அன்றாட உணவை ஐந்து சிறிய பகுதிகளாக பிரித்து உண்கிறார்.
அதில் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் அதிக புரதம் அடங்கும்.
ஒருநாளைய உணவு முறை ( Diet Plan)
- காலை உணவாக, ஓட்மீல் மற்றும் பழங்கள் அல்லது (gluten free) குளுட்டன் இல்லாத (gluten free) மாவில்
செய்யப்பட்ட சிற்றுண்டி, அவகாடோ,மற்றும் குறைந்த கொழுப்புள்ள கிரேக்க தயிர் ஆகியவற்றை போஹா, இட்லி,உப்மாவுடன் சேரத்து சாப்பிடுகிறார்.
- சர்க்கரை இல்லாமல் கிரீன் டீ குடிக்கிறார்.
- காலை,மதிய உணவுகளுக்கு இடையே சிற்றுண்டியாக 1 பழுப்பு ரொட்டி, 2 முட்டை வெள்ளை மற்றும் புதிய பழச்சாறுகளில் கலந்த புரத சாறு (Protein extract) ஆகியவை அடங்கும்.
- அவரது மதிய உணவு பருப்பு, சப்ஸி, ராகி ரோட்டி, சாலட் மற்றும் ஒரு துண்டு கோழி அல்லது மீன்
ஆகியவற்றை உள்ளடக்கிய கனமான உணவாகும். - அவரது மாலை சிற்றுண்டியில் கோழி, முட்டை வெள்ளை அல்லது கோழியுடன் உயர்
ஃபைபர் (Fiber) உணவு அடங்கும். - இரவு உணவிற்கு, சூப், சாலட் மற்றும் ஒரு துண்டு மீன் அல்லது கோழியை உள்ளடக்கியது. அதன் பிறகு பசித்தால், படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு, ஒரு கிளாஸ் சோயா பால் அல்லது புரோட்டீன் ஷேக் குடிப்பார்.
- ஒவ்வொரு உணவிற்கும் முன்பு ,குறைந்தது 2 கிளாஸ் தண்ணீரைக் குடிக்கிறார்.
- தூங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன், தனது இரவு உணவை எடுத்துக் கொள்கிறார்.கலோரிகளை எரிக்க போதுமான நேரம் கொடுக்க இரவு தாமதமாக உணவை சாப்பிடக்கூடாது என்று அவள் கண்டிப்பாக பின்பற்றுகிறார்.
- எடை குறைப்பு பானங்களாக மோர் மற்றும் வெள்ளரி சாறு இருக்கின்றது.
- சிவப்பு இறைச்சியை (Red meat)த் தவிர்க்கிறார்.
- செயற்கையாக சுவையூட்டப்பட்ட பழச்சாறுகளை குடிப்பதில்லை.
- வறுத்த உணவு, பீஸ்ஸா, பர்கர், உருளைக்கிழங்கு உணவுகள் , எண்ணெய் உணவு, காபனேற்றம் செய்யப்பட்ட பானங்கள், ஐஸ்கிரீம்கள், இனிப்புளை சோனம் தவிர்த்துக் கொள்கிறார்.