உணவுமுறை மாற்றங்களால் சர்க்கரை நோயிலிருந்து விடுபட (Dietary changes to cure diabetes)

உணவு முறைகளில் மாற்றம் கொண்டு வராமல் உடல் ஆரோக்கியத்தில் மாற்றங்கள் கொண்டுவருவதென்பது சாத்தியமில்லாதது. உணவு முறைகளில் நாம் மேற்கொள்ளும் ஒழுக்கத்தை (Dietary changes to cure diabetes) விட ஒரு சிறந்த ஆரோக்கிய அணுகுமுறை கிடையாது.

ஏனெனில், நமது உடல் என்பது நாம் உண்ட உணவுகளின் தொகுப்பு தான்.

உணவு முறைகளில் நாம் மேற்கொள்ளும் ஒழுக்கத்தை (Dietary changes to cure diabetes) விட ஒரு சிறந்த ஆரோக்கிய அணுகுமுறை கிடையாது.

மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் உடல் நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவதென்பது இயற்கைக்கு முற்றிலும் முரண்பாடான செயல். அதன் எதிர் விளைவுகளிலிருந்து நாம் ஒருபோதும் தப்ப முடியாது என்பதையும்  விளங்கிக் கொள்ள வேண்டும்.

இன்றைக்கு மருந்துகளின் பக்கவிளைவுகளினால் பல்வேறு உடல் கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் இதற்கு சாட்சி.

இயற்கைக்கு முரணான நமது வாழ்க்கை முறைகளின் விளைவுகளே நோய்களாகும். நோய்கள் கூட ஒருவித எச்சரிக்கைகள் தானே தவிர நிரந்தரம் அல்ல.

சர்க்கரை நோயிலிருந்து எளிமையாக விடுபட

  1. ஜீரண உறுப்புகளுக்கு சக்தியளிப்பது
  2. இயக்க சக்தியளிப்பது,
  3. உணவு மற்றும் வாழ்வியல் முறைகளில் சரியான, தேவையான மாற்றங்களை கொண்டுவருவது,
  4. நீண்ட நாட்களாக எடுத்துக் கொண்டிருக்கும் மருந்து மாத்திரைகளை சிறிது சிறிதாக குறைப்பது

இவற்றை  முறையாகவும், படிப்படியாகவும் தொடர்ந்து  செயற்படுத்தி வர சர்க்கராய் நோயிலிருந்து விடுபடலாம்.

annaimadi.com,Dietary changes to cure diabetes,cure diabetes by foods,control diabetes by food control,foods for diabetes,to cure diabetes

உணவு முறைகளில்  செய்ய வேண்டிய  நல்ல மாற்றங்கள் (Dietary changes to cure diabetes)

 உணவு முறைகளில்  செய்யும் நல்ல மாற்றங்கள் வாழ்வில் மிக அழகிய மாற்றங்களை ஏற்படுத்தும். எனவே நாம்

என்ன சாப்பிட வேண்டும்? எப்படி சாப்பிட வேண்டும்? எப்போது சாப்பிட வேண்டும்? என்பதில் மிகுந்த கவனம் காட்ட வேண்டும்.

அது தான் சர்க்கரை நோய் மட்டுமல்ல, அனைத்து நோய்களிலிருந்தும் நம்மை விடுவிக்கும் அற்புத வழிமுறையாக அமையும். மேலும் அது நமது ஜீரணத்தின் இறுதியில் கிடைக்கும் குளுக்கோஸ் உள்ளிட்ட அனைத்து சத்துப்பொருட்களின் தரத்தையும் உயர்த்தும்.

என்ன சாப்பிட வேண்டும் (Dietary changes to cure diabetes)?

நமது மனதிற்கு பிடித்த, இரசாயனக் கலப்பில்லாத, மிகுதியான சுவைகள் இல்லாத, ஆரோக்கியம் தரும் எந்தவொரு உணவையும் எந்த தடைகளுமின்றி நாம் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

எப்படி சாப்பிட வேண்டும்?

உணவை நாவில் சுவைத்து, பற்களால் அரைத்து, உமிழ்நீரில் கலந்து கூழாக்கி பின்னரே விழுங்க வேண்டும். சாப்பிடும் போது டிவி பார்த்துக்கொண்டும், பேசிக்கொண்டும் சாப்பிடுவது போன்ற பழக்கங்களை தவிர்க்க வேண்டும்.

கவலை உணர்வுகளோ, வேறு எண்ணங்களோ, செயல்களோ இல்லாமல் அதாவது தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. சாப்பிடும் போது இடையே  நீர் அருந்துவதை தவிர்ப்பதும் மிகவும் முக்கியம்.annaimadi.com,Dietary changes to cure diabetes,cure diabetes by foods,control diabetes by food control,foods for diabetes,to cure diabetes

எப்போது சாப்பிட வேண்டும்?

நல்ல பசி உணர்வு ஏற்பட்ட பின்னர் மட்டுமே சாப்பிட வேண்டும். பசி உணர்வு என்பது நமது ஜீரண உறுப்புகளின் தயார் நிலையை நமக்கு உணர்த்தக் கூடிய உடலின் மொழி என்பதை உணர்ந்து கொண்டு, பசி எடுத்தால் மட்டுமே சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாறாக நேரம் பார்த்து சாப்பிடும் பழக்கத்தையும், உணவின் ருசி மீது மட்டுமே ஆசை வைத்து, அளவுக்கதிகமாக சாப்பிடும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.

அதேபோல முறையான பசி உணர்வு ஏற்பட்டும் சாப்பிடாமல் இருப்பதும் தவிர்க்கப்பட வேண்டியதே! அதேபோலத்தான் தண்ணீர் தாகமும். முறையான தாக உணர்வு ஏற்படும் போது தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

தாகம் ஏற்பட்ட பிறகும் நீர் அருந்தாமல் காலம் தாழ்த்துவது கூடாது.

மொத்தத்தில் நமக்கு பிடித்த உணவை முறையான பசி உணர்வு ஏற்பட்ட பிறகு, பொறுமையாக ருசித்து, ரசித்து பசியாறும் வரை சாப்பிடுவது தான் நம்முடைய ஜீரணத்தை சிறக்க வைத்து, நல்ல தரமான சத்துப் பொருட்களை அதிலிருந்து பெறுவதற்கான வழியாகும்.

இதனை நாம் தெளிவாகவும் ஆழமாகவும் புரிந்து கொண்டோமானால் சர்க்கரை நோய் மட்டுமல்ல, எந்த நோய்களும் இல்லாத சுகமான, அமைதியான வாழ்வென்பது எளிதில் நம் வசமாகும். . .

ஜீரண செயற்பாடு

நாம் உண்ணும் உணவானது, வாய், வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பித்தப்பை, பெருங்குடல் என பல முக்கிய உறுப்புகளின் வழியே பல செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. இதனைத்தான் நாம் ஜீரணம் என அழைக்கின்றோம்.

இந்த ஜீரணத்தின் போது தான் உணவிலுள்ள சத்துக்கள் பிரித்தெடுக்கப்பட்டு, சக்தியாக மாறி பின் உடலோடு சேருகிறது.

உடல் ஆற்றல் பெறுகிறது. ஜீரணத்தின் இறுதியிலே கிடைக்கக்கூடிய சத்துப்பொருட்களின் தரம் நன்றாக இருந்தால்  மட்டுமே, நம் உடல் அதனை அங்கீகரித்து தன்னோடு இணைத்துக் கொள்ளும்.

தரமற்ற சத்துப்பொருட்களை உடல் அங்கீகரிக்காது, ஆற்றலாகவும் மாற்றாது. இதுதான் உடலின் இயற்கை இயல்பு. மாறாக அந்த தரமற்ற பொருட்களை கழிவுகளாக மாற்றி மலம், சிறுநீர், வியர்வை என பல வழிகளில் உடலை விட்டு வெளியேற்றிவிடுகிறது.

ஜீரணத்தின் இறுதியில் கிடைக்கும் பல சத்துப்பொருட்களில் மிக முக்கிய சத்துப்பொருள் தான் சர்க்கரை அல்லது குளுக்கோஸ். இந்த சர்க்கரையின் தரம் பற்றித்தான் நாம் கவனம் கொள்ள வேண்டுமே தவிர, அதன் எண்ணிக்கையைப் பற்றி அல்ல!

 உணவின் மூலம் தரமான குளுக்கோஸ் (Dietary changes to cure diabetes)

குளுக்கோஸ் தரமாக இருக்கும் பட்சத்திலே நம்முடைய உடலானது அதனை அங்கீகரித்து தனக்குள் சேர்த்துக் கொள்ளும். அதாவது அந்த சத்துக்களை செல்களுக்குள் அனுமதிக்கும். செல்களுக்கு சக்தி கிடைப்பதால் நாமும் சக்தி பெறுகிறோம்.

இந்த இடத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் தரமான குளுக்கோஸுக்கு மட்டுமே கணையம் என்ற உறுப்பானது தனது சுரப்பு நீரான இன்சுலினை சுரக்கிறது.

தரமற்ற குளுக்கோஸுக்கு இன்சுலின் சுரக்கப்படாது. இன்சுலினோடு இணைந்திருந்தால் மட்டுமே குளுக்கோஸானது செல்களுக்குள் நுழைய முடியும் என்பது உடலின் விதி.

இவ்விதியானது உடல் கட்டமைப்பின் தரம் மற்றும் பாதுகாப்பு கருதி இயற்கையாகவே அமைந்திருக்கின்றது.

இன்சுலின் கிடைக்காத தரமற்ற சர்க்கரையானது கழிவாக மாற்றப்பட்டு வியர்வையாகவோ, சிறுநீராகவோ உடலை விட்டு வெளியேற்றப்படுகிறது.

இந்த தரமற்ற குளுக்கோஸ் எவ்வளவு அதிகம் இருந்தாலும் அவை அனைத்தையும் கழிவுகளாக கருதி நமது உடல் அதனை வெளியேற்றவே செய்யும். இது தான் ஒரு ஆரோக்கிய உடலின் இயல்பு.

இவ்வாறு நடப்பதால் நம்முடைய செல்களுக்கு போதிய சக்தி கிடைக்காமல் நாம் சோர்ந்து விடுகின்றோம். சில சமயம் மயங்கியும் விடுகின்றோம்.

தரமற்ற குளுக்கோஸ் சிறுநீராக  வெளியாவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியதும், கால் எரிச்சல் உண்டாவதும் இருக்கின்றது. இவைகள் தான் சர்க்கரை நோயினால் ஏற்படக்கூடிய பிரதான பாதிப்புகளாகும்.

இந்த தொந்தரவுகளுக்காகத்தான் பெரும்பாலும் நாம் ஒரு மருத்துவத்தை நாடி செல்கின்றோம்.

ஒரு நோயினுடைய மூல காரணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அதனுடைய விளைவுகளுக்கு மட்டுமே தற்காலிக நிவாரணம் அளிக்கும் மருத்துவ முறைகளை நாடி செல்கின்றோம்.

இதனால் சர்க்கரை நோய்க்கு மருந்துகள் சாப்பிடுவதும், இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதும் ஆரம்பமாகின்றது.

அதற்கான பக்கவிளைவுகளும் அதனுடன் சேர்ந்தே இலவச இணைப்பாக வந்துவிடுகிறது. அதுவே நமது வாழ்நாள் முழுவதும் தொடர்கிறது.

ஆக, நமது ஜீரணத்தின் இறுதியில் தரமான குளுக்கோஸ் வெளிப்பட வேண்டும்.

அதற்கு நாம் என்ன செய்யவேண்டுமோ அதுதான் சர்க்கரை நோயைத் தடுக்கும் அல்லது குணப்படுத்தும் அருமருந்து என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *