உடல் நலம் காக்கும் உணவு விதிகள் (Dietary rules for good health)
இயற்கை வைத்தியத்தில் உணவுகள்,உணவு உண்ணும் போது கடிப்பிடிக்க வேண்டியவை என விதிகளாக (Dietary rules for good health) விளக்கமாக கூறப்பட்டுள்ளது. அதாவது தாதுஉப்புகள் அதிகம் உள்ள இளங்கீரைகள், புதிதாய்ப் பறித்த இளங்காய்கறிகள், பழங்கள் போன்ற இயற்கை உணவு (Natural food) முதல் தரமான உணவுகளாகும்.
புரதப் பொருட்கள், மாவுப் பொருட்கள், சர்க்கரைப் பொருட்கள், கொழுப்புப் பொருட்கள் உள்ள தானியங்கள், பயிறுகள், கிழங்குகள், பருப்புகள் ஆகியவை இரண்டாம் தரமான உணவுகள்.
இந்த இரண்டையுமே நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
சத்தான உணவைவிட ஜீரணிக்கும் உணவே உன்னத உணவு. நோயை உண்டாக்காமல் ஜீரணிக்கக்கூடிய உணவையே (Dietary rules for good health) உட்கொள்ள வேண்டும்.
பசிக்கு உணவை உண்டால் மட்டும் போதாது, ஆரோக்கியம் தரும் உணவுகளை தேர்ந்து உண்பதும் அவசியம். ஏனெனில் உடலில் சக்தி உற்பத்தியாவதற்கும் செல்கள் வளர்ச்சியடைவதற்கும் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகச் செயல்படுவதற்கும் உணவே காரணமாகிறது.

உங்கள் உடலைப் பற்றி நீங்கள் நன்கு அறிந்திருத்தல் அவசியம். வெளியில் தெரியாத நோய்கள், பரம்பரை நோய்கள் பற்றி தெரிந்து வைத்திருத்தல் வேண்டும்.
இதன் மூலம் ஏதாவது நோய் இருந்தால் , நோயின் வகை, அதன் தன்மை, தீவிரம், தவிர்க்க வேண்டிய உணவுகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள முடியும்.
உணவே மருந்து. மருந்தே உணவு
உணவை மருந்தாக எப்படி சமைப்பது என்ற கேள்வி பலருக்கும் எழும். இந்த புத்தகத்தில் (food as medicine cookbook) அதற்கான விளக்கம் இருக்கிறது.
அதிகமான அல்லது குறைவான கலோரிகள் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
நமது அன்றாட வாழ்வில் நாம் செய்யும் வேலைகளைப் பொறுத்து நமது உடலுக்குத் தேவையான கலோரிகள் பயன்படுத்தப்படும்.
பாலினம், வயது, உடல் எடை, பரம்பரை, செரிமானமாகும் நேரம், தினசரி செய்யும் வேலை ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட கலோரிகள் தேவைப்படும்.
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்தாலே. உடல் எடை வெகுவாகக் குறைந்துவிடும். கொழுப்புகளைக் குறைப்பதற்கு, சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதால்,தேவையற்ற கொழுப்புகள் கரைநடு விடும்.
சீரக தண்ணீரைக் குடிக்கலாம். இது செரிமானத்தை சீற்படுத்துவதொடு. உடலில் உள்ள கொழுப்பையும் குறைகிறது.
நீர்க்காய்களான புடலங்காய், சுரைக்காய், பூசணிக்காய்,வெள்ளரிக்காய் இவற்றை அதிகம் சாப்பிடுவதால் தேவையற்ற வயிற்றுச்சதை குறைகிறது.
உணவு சாப்பிடும் முறை
பழங்கள், காய்கறிகள், கீரைகள், தேங்காய், முளைகட்டிய தானியங்கள், முளைகட்டிய பயறுகள் ஆகியவை உடலுக்கு ஏற்ற உணவுகள்.
தினமும் காலை உணவை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளுக்குத் தேவையான முழு சக்தியையும் காலை உணவே அளிக்கிறது.காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.
இரவு மிகக்குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.
இரவு முடிந்தவரை இலகுவில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. இதனால், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
சாப்பாட்டும் போது இடையே தண்ணீர் குடிக்கக் கூடாது. இதனால், வயிற்றில் சுரக்கும் ஜீரண அமிலம் (hcl acid) ஐதாக்கப்படுவதால், வீரியம் குறையும். செரிமானம் தாமதப்படும்.
சாப்பிட்டதும் உணவு நன்றாக செரிக்க ரத்த ஓட்டம் நமது வயிற்றுப் பகுதிக்குத் செல்ல வேண்டும்.கால்களைத் தொங்க விட்டுக் கொண்டு கதிரைகளில் இருந்து சாப்பிடுவதை தவிர்க்கவும்.ஏனெனில் இரத்த ஓட்டம் கால்பகுதிக்கு சென்றுவிடும்.
இயலும் என்றால், சம்மணம் போட்டு கீழே இருந்து சாப்பிடவும். இப்படி அமர்வதால் வயிற்றை மடித்து குனிந்து சாப்பிடுவோம். இது செரிமானத்திற்கு உதவி செய்யும்.
இதே போல் சாப்பிட்டவுடன் குளிப்பதால் ரத்த ஓட்டம் கை, கால் என உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றுவிடும். இதனால், வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறையும்.
உணவு சரியாகச் செரிக்க நீண்ட நேரம் எடுக்கும். அல்லது சரியாக ஜீரணம் ஆகாது. எனவே, குளித்த பின் அரை மணி நேரம் கழித்துச் சாப்பிதுவது நல்லது. சாப்பிட்ட பின் குளிப்பது என்றால் இரண்டு மணிநேரம் கழித்துக் குளிக்கலாம்.
சாப்பிட்ட உடனேயே நடக்கக் கூடாது. சாப்பிட்ட உடனேயே நடப்பதால் உணவு மண்டலத்தின் செயற்பாடுகளில் தடை ஏற்படும். சாப்பிட்டு சிறிது நேரத்தால் நடப்பதே நல்லது.
இரவு உணவை தூங்க போவதற்கு 2 ,3 மணிநேரத்துக்கு முன் சாப்பிட வேண்டும். அதாவது சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆன பிறகு தூங்குவது சிறந்தது.