டிஜிட்டல்திரைகளும் குழந்தைகளும் (Digital Screen)

டிஜிட்டல் திரைகள் (Screen Time) டிவிகள், செல்போன்கள், டெப்லெட்டுகள் மற்றும் கணினித் திரைகள் போன்றவை அடங்கும்.

அதீத தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக சிறு குழந்தைகளும் டிவிகள், செல்போன்கள், டெப்லெட்டுகள் மற்றும் கணினி போன்றவற்றை பாவிப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. டிவி பார்க்கவும் ,தொலைபேசிகளைப் பார்க்கவும் , வீடியோ கேம்களை விளையாடவும் அனுமதிப்பது நல்லதல்ல என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் அவ்வாறு  கூற, உண்மையான காரணம்  என்ன? வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

அதிக நேர டிஜிட்டல் திரைகள் (Digital Screen) பாவனையால் குழந்தைகளுக்கு  ஏற்படும் பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இதனால் அவர்களது வழமையான செயற்பாடுகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றது.

கீழே குறிப்பிடப்படும் பிரச்சனைகளால் பல குழந்தைகள் பாதிக்கப்படுள்ளதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே பெற்றோரே உங்கள் பிள்ளைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

அதிக நேர டிஜிட்டல் திரை பாவனையால்  ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகள்

  • ஒருவகையான மன இறுக்கம் (Virtual Autism)
screen time,no sleep,annaimadi.com

வைத்தியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி டிஜிட்டல் திரையில் அதிகம் நேரத்தை செலவிடும் குழந்தைகளுக்கு இந்த மன இறுக்கத்தின் (Virtual Autism) சில அறிகுறிகள் தென்படும். தொடர்ந்து டிஜிட்டல் திரையை பலமணிநேரம் பார்ப்பது குழந்தையின் மூளை வளர்ச்சியைக் குறைக்கும்.

இது ஒருவருக்கு பதிலளிப்பது மற்றும் கண்ணைப் பார்த்து நேரடியாக தொடர்பு கொள்ளாதது போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். இவை Autism-த்தின் அடிப்படை அறிகுறிகள்.

  • நடத்தையில் மாற்றங்கள்

குழந்தைகளில் சிலர் சராசரி வயதினருக்கு மீறிய நடத்தைகளை வெளிப்படுத்துவர்.

குறிப்பாக இந்த டிஜிட்டல் சாதனங்களில் அதிக கவனம் செலுத்தாத ஒரு குழந்தையுடன் ஒப்பிடும் போது, டிவி, மொபைல் மற்றும் கணினிகள் போன்ற விடயங்களில் அதிக கவனம் செலுத்தும் குழந்தை ஒன்றின் நடத்தைகள்,உணர்ச்சிகள், சமூக தொடர்புகள், சுற்று சூழலில் உள்ள அவதானம்  போன்றவற்றில் அவர்களுக்கு பல மாறுபாடுகள் ஏற்படுகின்றன.

  • கவனக்குறைவு 
health problem for kids,annaimadi.com

சிறுவயது முதல் குழந்தைகள் தம்மை சுற்றி உள்ளவை, சூழவுள்ளவர்கள்,சுற்றி நடப்பவை போன்றவற்றில் இருந்து தான் அதிக  விடயங்களை தாமாகவே கற்றுக்கொள்கிறார்கள்.

இருப்பினும் டிஜிட்டல் திரை (Digital Screen) இந்த சூழல் கண்காணிப்பு திறன்களில் குழந்தைகளின் நேரம், ஆர்வம் போன்றவற்றைக் குறைக்கிறது. இதனால் அவர்கள் சுற்றுச்சூழலைக் கவனிக்க, கற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை தெரிந்து ஏற்படுகிறது.உங்கள் குழந்தைகள் கவனக் குறைவுடன் இருக்கின்றார்களா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

  • உடல் பருமன்
screen time,snnaimadi.com,obesity

குழந்தைகள் இயற்கையாகவே மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஒரே இடத்தில் உட்கார்ந்து பலமணிநேரத்தை வீணடிக்கக்கூடிய ஒரு இடமாக டிஜிட்டல் திரை (video game) உள்ளது .

இதனால் அவர்களின் செயற்பாடுகள் குறைக்கப்படுவதோடு, குழந்தைகள் தேவையற்ற உடல் பருமனுக்கும் ஆளாகின்றார்கள்.

  • ஆக்ரோசமாக மாறுதல்
Video Games,screen time,health problem for kids,annaimadi.com

டி.விக்கள், செல்போன்கள் மற்றும் கணினிகள் போன்ற டிஜிட்டல் சாதனங்களுக்கு அதிகளவில் அடிமையாக்கப்படும் குழந்தைகள், அதில் உள்ள கதாபாத்திரங்களுக்கேற்ப, காலப்போக்கில் முரட்டுக் குழந்தைகளாக மாறக்கூடும்.

டிஜிட்டல் திரைக்கு (Digital Screen) அப்பால் சூழல்,விளையாட்டு மற்றும் கலை போன்ற விடயங்களில் அவர்கள் கவனம் செலுத்தாததால் உணர்திறன் மிக்க திறன்களை வளர்த்துக் கொள்ள மாட்டார்கள்.

குடும்ப உறவுகள்

டிஜிட்டல் திரைகளுக்கு அடிமையாக இருப்பதன் காரணமாக குடும்ப உறுப்பினர்களுடனான தொடர்பை இழக்கின்றனர்.

குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது, அவர்களைப் பற்றி அறிந்து கொள்வது, அவர்களின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து கொள்வது, ஒருவருக்கு ஒருவர் உதவுவது  போன்றவை இந்த டிஜிட்டல் திரைகளால் தடைபடுகிறது.

இதனால் குடும்ப உறவுகளில் இருந்து தூரமாகின்றனர். இது குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு நிலை.

தூக்கமின்மை

watching film in tablet,annaimadi.com,health problem for kids

டிவி, கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களுக்கு அடிமையாகும் குழந்தைகள் தூங்குவதும் குறைவு. இதற்கு காரணம், டிஜிட்டல் திரை வழியாக கண்ணுக்கு மிக அருகில் வரும் தேவையற்ற ஒளி காரணமாக, இரவுக்கும் பகலுக்கும் இடையிலான வேறுபாட்டை மூளை சரியாக உணராமல் போதல்.

இதனால் குழந்தைகள் ,இரவில் விழித்திருப்பதும் பகலில் உறங்குவதுமாக இருபார்கள்.இதன் விளைவாக பெரும்பாலும் தூக்கமின்மை  உருவாகும். மேலும் இந்த பழக்கம், கண்களில் பிரச்சனை ஏற்படுத்தும்.இளவயதிலேயே  கண்ணாடி பாவிக்க வேண்டி வரலாம்.

பெற்றோர்கள்களின் அதிக  டிஜிட்டல் திரை பாவனை 

Digital screen,health problem for kids,annaimadi.com

பெற்றோர்கள் வேலை நிமித்தம் அல்லது ஆர்வம் காரணமாக அதிக நேரம் டிஜிட்டல் திரைகளைப்  பாவிப்பதால் குழந்தைகள்தவிர்க்க முடியாமல்  டிஜிட்டல் திரைகளுக்குள் திணிக்கப்படுகிறார்கள்.

இதை உணராத பெற்றோர்கள் ,மிகப் பெரிய தவறு செய்கின்றார்கள். பெற்றோர்கள் இதை உணர்ந்து வீட்டிற்கு வந்ததும் குடும்பத்துக்கான நேரத்தை சரியாக ஒதுக்க வேண்டும். 

டிஜிட்டல் திரைகள் (Digital Screen ) குழந்தைகளுக்கு ஏன் தீங்கு விளைவிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதும் குழந்தைகளை இவற்றிலிருந்து விலக்கி வைப்பதும் பெரியவர்களாகிய எமது பொறுப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *