சிறுநீரகக் கற்களை கரைக்க (Dissolve kidney stones)

சிறுநீரகக் கல்லை எளிய முறையில் எவ்வாறு கரைத்து (Dissolve kidney stones), சிறுநீரக கற்கள் உண்டாகும் வலி ,உபாதைகளில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் இங்கு குறிப்பிடப்படுகின்றன.

சிறுநீரில் கல்சியம் அதிகமாகவும், சிட்ரேட் உப்பு குறைவாகவும் இருந்தால்,சிறுநீரில் கற்கள் உருவாகும் வாய்ப்பு ஏற்படுகிறது.

சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல், துர்நாற்றத்துடனான சிறுநீர் மற்றும் இரத்தம் கலந்த சிறுநீர் போன்றவையும் சிறுநீரில்  கற்கள் இருப்பதற்கான அறிகுறிகளாகும்.

அமிலச் சத்து அதிகமாய் உள்ள தற்போதைய  உணவு, சிறுநீரில் கல்சியத்தை அதிகரித்தும் சிட்ரேட் அளவை குறைத்தும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவதை அதிகரிக்கின்றன. காய்கறிகள் பழங்கள் உண்ணுவதை அதிகரிப்பதின் மூலம் இதை தவிர்க்க முடியும்.

 

சிறுநீரகக் கல்லை கட்டுப்படுத்த (Dissolve kidney stones) சில வழிமுறைகள் இருக்கின்றன அவை.

சிறுநீரக் கல்லை வெளியேற்ற  தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு 2 முறையாவது குடிப்பது நலம்.

பார்லியை நன்கு வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும்.

அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.

முள்ளங்கி சாறு 30 மிலி அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும். வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கு நம் அன்றாட வாழ்வின் உணவு முறையும் பயன்படுத்துகிற தண்ணீரும் ஒரு மூல காரணியாக இருக்கிறது . இந்த சிறுநீரகக்கல் (Kidney stone) ஏற்படுத்தும் வலியை அந்த நோய் வந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.அப்படி சொல்ல முடியாத அளவுக்கு வலியை ஏற்படுத்தும் .

அந்த வலியில் இருந்து விடுபட சரியான உணவுகளை உண்ணுங்கள். கூடவே  அதற்குரிய  கெடுதல் இல்லாத மருந்துகளையும் பயன்படுத்துங்கள்.

சிறுநீர் கற்களை அகற்ற (Dissolve kidney stones) இயற்கை மூலிகைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துகளை (Ayurveda remedies for  kidney stone clear ) இங்கே பெற்றுக்கொள்ளலாம்.

to remove kidney stone,annimadi.comCheck Price

Leave a Reply

Your email address will not be published.