விவாகரத்தும் விசித்திரமான காரணங்களும் (Divorce & strange reasons)
விவாகரத்து என்பது இன்று மிகவும் பொதுவானதாகி விட்டது. தம்பதியரின் விவாகரத்துக்கு பல காரணங்கள் (Divorce & strange reasons) இருக்கலாம்.சிலரது விவாகம் விசித்திரமான காரணங்களால் முடிவுக்கு வருகின்றன.
இந்த விசித்திரமான காரணங்கள் (Divorce & strange reasons) என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.
கல்யாணம் ஆயிரம் காலத்து பயிர் என்று சொல்வார்கள், பெரும்பாலான பயிர்கள் செழித்து வளரும், சில மணங்கள் மலர்வதில்லை அவை வாடி விடுகின்றன…
திருமணம் என்ற வார்த்தையே பலருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தால், சிலருக்கோ எரிச்சலைக் கொடுத்திருக்கும். சிலர் சமூகத்திற்கு திருமணம் நல்லது என்று சொன்னால், சிலர் சிக்கலானது என்று சொல்வார்கள்.
சிலர் திருமண பந்தத்தில் பல சிக்கல்கள் இருந்தாலும் வேறு வழியில்லாமல் தொடர்ந்தால், வெகுசிலர் மன நிம்மதியை கெடுக்கும் பந்தம் வேண்டாம் என்ற முடிவையும் எடுக்கின்றனர். திருமணங்களில் வெற்றியும் தோல்வியும் ஏன் என்பதைப் புரிந்துகொள்வது கடினம்.
ஆனால், விவாகரத்து கோருவதற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட்வர்கள் சொல்லும்போது ‘அட, இதுக்கா, விவகாரத்து?’ என்று ஆச்சரியம் ஏற்படும். இந்தியாவில் விவகாரத்துக்கான சில காரணங்களைக் கேட்டால் சாதாரண மக்களுக்கு அப்படித்தான் தோன்றும்.
என் கணவர் வழுக்கை. என் மனைவி தினமும் குளிப்பதில்லை. என் கணவர் என்னை மிகவும் நேசிக்கிறார்… இவை வெறும் குறைகள் அல்ல! இந்தியாவில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கள் வாழ்க்கைத் துணைவர்களிடமிருந்து விவாகரத்து கோரும் போது, நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் சொல்லும் காரணங்கள் தான் இவை.
மேக்கப் காரணமாக விவாகரத்து (Divorce & strange reasons)
34 வயதான அரபு மனிதர் ஒருவர் , 28 வயதான அழகான பெண்ணை மணக்கிறார். திருமணத்திற்குப் பிறகு, அவர்கள் தேனிலவை கழிக்க துபாய் நகரத்தைத் தெரிவு செய்கின்றனர். அங்கே இருவரும் கடலில் குளித்து வேடிக்கை பார்க்கிறார்கள்.
ஆனால் பின்னர் எதிர்பாராத ஒன்று நடக்கிறது. தனது மனைவியின் மேக்கப் கடல் நீரில் கழுவபட்டதும் கணவரால். அவரை அடையாளம் காண முடியவில்லை. அவர் பல்வேறு வகையான அழகுசாதனப்பொருட்கள் மூலம் ஒப்பனை செய்து மூலம் தன்னை ஏமாற்றிவிட்டார் என்றுகணவர் கூறினார்.
திருமணத்திற்குப் பிறகு தனது மேக்கப் பற்றி தனது கணவரிடம் கூற தீர்மானித்ததாக கூறி விவாகரத்தைத் தடுக்க பெண் முயற்சித்தும் அது வெற்றிபெறவில்லை.
பதிலளிக்காததற்காக விவாகரத்து (Divorce & strange reasons)
2017ஆம் ஆண்டில், தாய்வானில் இருந்து ஒரு விசித்திரமான விவாகரத்து அறிவிக்கப்பட்டது. ஒரு தாய்வானிய பெண் தனது வாட்ஸ்அப் மெசேஜ்களுக்கு(Whats App mesage) பதிலளிக்காததால் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார்.
கணவர் அவ்வப்போது மனைவி அனுப்பும் செய்திகளை புறக்கணித்துள்ளார். அவர் அவற்றைப் படித்தாலும் பதிலளிப்பதில்லை.
கடைசியாக, ஒரு கார் விபத்து குறித்து மனைவி கணவருக்கு செய்தி அனுப்பினார். கணவர் அதற்கும் பதில் சொல்லவில்லை. இந்த வழக்கில், மனைவியின் பொறுமை மீறி, கணவரிடம் விவாகரத்து கோரி அதில் வெற்றியும் பெற்றார்.
குளிக்காததால் விவாகரத்து (Divorce & strange reasons)
இது ஒரு விசித்திரமான மற்றும் நியாயமற்றதொன்று என்றும் கூற முடியும். எகிப்திய தம்பதியரான ஐசர் அலி மற்றும் யாரா ஆகியோர் காதலித்து விரைவில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணமான சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஐசர் ஒரு விசித்திரமான வெளிப்பாட்டை வெளியிடுகிறார். அதாவது, அவர்கள் சரும நிலையில் அவதிப்படுவதால் அவருக்கும் தண்ணீருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
எனவே அவர் ஒருபோதும் குளிக்க மாட்டார் என்று கூறினார். பின்னர் இதைப் பற்றி யாரா ஒரு உண்மையை கண்டுபிடித்துள்ளார். ஐசர் ஒரு தோல் நோயால் பாதிக்கப்படுகிறார் என்பது உண்மை.
என்றாலும், அவர் நீரினால் பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
வாழ்க்கையிலேயே குளிக்காத ஒரு மனிதனுடன் தன்னால் வாழ முடியாது என்று யாரா கூறி பின்னர் விவாகரத்து பெற்றார்.
அதிக சுத்தமும் விவாகரத்து தரும்
கணவர் அழுக்காக இருந்ததால் விவாகரத்து செய்த ஒரு பெண்ணைப் பற்றி நாங்கள் முன்பு குறிப்பிட்டோம்.
கணவர் மிகவும் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருப்பதால் விவாகரத்து செய்யும் ஒரு பெண்ணைப் பற்றியதே இச்செய்தி. ஜெர்மனியில் வசித்து வந்த இந்த தம்பதிக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன.
இந்த குடும்பத்தின் கணவர் வீட்டை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருக்க நிறைய நேரம் செலவிடுகிறார். அதிகமாக இருந்த இந்த பழக்கம் படிப்படியாக மனைவிக்கு ஒரு தொல்லையாக மாறியுள்ளது.
எனவே, மோதல்கள் கூட ஏற்பட்டுள்ளன. ஒரு நாள், கணவர் தனது வீட்டில் ஒரு சுவரை உடைத்து அதை மீண்டும் கட்டுவதற்கு தீர்மானித்தார். சகிப்புத்தன்மை எல்லைமீறிச் சென்ற மனைவி இறுதியில் விவாகரத்து பெற்றார்.
டிரம்ப்பினால் பிரிந்த குடும்பம் (Divorce & strange reasons)
உலகை உலுக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இப்போது ஜனாதிபதியாக இல்லை. ஆனால் டிரம்ப் முதன்முதலில் ஜனாதிபதியானபோது, 22 வருட வெற்றிகரமான திருமணம் அவரால் விவாகரத்தில் முடிந்தது.
73 வயதான ஓய்வு பெற்ற சிறை அதிகாரி கெய்ல் மெக்கார்மிக், தனது அன்புக் கணவர் அவரது அன்புக்குரிய ஜனநாயகக் கட்சிக்கு அல்லாமல் டொனால்ட் டிரம்பிற்கு வாக்களிப்பதை அறிந்திருக்கிறார்.
இதனால் கோபமடைந்த அவர், தன் கணவனது துரோகத்தை தாங்க முடியாமல் உடனடியாக விவாகரத்து பெற்றார்.
77 வருட திருமண வாழ்க்கையின் பின் விவாகரத்து
77 வருட திருமண வாழ்க்கையை பற்றி நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? எளிதானது அல்ல, இல்லையா? வெற்றிகரமான திருமணத்தை பெற்ற தம்பதியினர் இத்தாலியில் வசித்து வந்தனர்.
இந்த தம்பதியின் கணவருக்கு 99 வயது. மனைவிக்கு 96 வயது. அவர்களுக்கு 5 குழந்தைகள் மற்றும் பல பேரக்குழந்தைகள் இருந்தனர். இருப்பினும், இந்த குடும்பத்தின் கணவர் தனது 77 வருட திருமணத்தை முடிக்க முயற்சிக்கிறார்.
இதற்குக் காரணம், சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு, கணவர் தனது மனைவி வேறு ஒரு ஆணுக்கு எழுதிய சில காதல் கடிதங்களை கண்டுபிடித்தார். இதனால் மனமுடைந்த கணவர், மனைவியிடமிருந்து விவாகரத்து கோருகிறார்.
இந்த விவாகரத்து கிடைத்தால் இவர் என்ன செய்வார் என்பது இந்த நேரத்தில் தெரியவில்லை. விவாகரத்து கிடைத்தால், இது உலகின் மிக வயதான தம்பதியர் பெற்றுக்கொண்ட விவாகரத்து என வரலாற்றில் இடம்பிடிக்கும்.
திருமண நாளன்று மாதவிடாய் பற்றி மனைவி வெளிப்படுத்தவில்லை என்ற காரணத்திற்காக ஒருவர் விவாகரத்து பதிவு செய்திருக்கிறர்.21 ஆம் நூற்றாண்டிலும் இந்தியாவில் மாதவிடாய் என்றால் விலக்க வேண்டிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
மூடநம்பிக்கைகளை மக்கள் எந்த அளவிற்கு நம்புகிறார்கள் என்பதை தெளிவாக வெளிப்படுத்தும் இந்த விவாகரத்து வழக்கை பதிவு செய்தவர் வதோதராவைச் சேர்ந்த ஒரு தொழில்முறை நிபுணர்.
திருமண நாளில் மணப்பெண்ணுக்கு மாதவிடாய் இருப்பதை கண்டு அவரும் அவரது தாயும் அதிர்ச்சியடைந்தனர். இந்த விவகாரத்தில் தங்களுடைய ‘நம்பிக்கையை அவமதித்ததாகக் கூறி’ கணவர் விவாகரத்து கோரியுள்ளார்.
மெத்தப் படித்தவர்களும் மாதவிடாயை காரணம் காட்டி விவாகரத்து வாங்குவது அதிர்ச்சியை அளிக்கிறது.
கணவர் என்னை மிகவும் நேசிக்கிறார், நாங்கள் சண்டையிட மாட்டோம் என்று கோரி உத்தரப்பிரதேசத்தில் ஒரு மனைவி விவாகரத்து கோரியிருக்கிறார்.
அதிக அன்பும் மணமுறிவிற்கு காரணமாகுமா?
இந்த செய்தி இந்தி பத்திரிகையான தைனிக் ஜாக்ரனில் வெளிவந்த்து. கடந்த ஆண்டு இந்த விவாகரத்து விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.
திருமணமாகி 18 மாதங்கள் ஆகியிருந்தாலும், கணவருடன் ஒரு சண்டைக்கூட வரவில்லை என்பது “சோர்வளிப்பதாக” அவர் கூறினார்!
அவர் கூறியது என்ன தெரியுமா? வீட்டு வேலைகளையும் கூட கணவர் பகிர்ந்து கொண்டாராம்! அவருடன் சண்டை போட வேண்டும் என்பதற்காக நான் வேண்டுமென்றே தவறு செய்வேன் என்றும் அவர் சொல்கிறார்.
“நான் தவறு செய்யும் போதெல்லாம், அவர் என்னை எப்போதும் மன்னித்துவிடுவார். நான் அவருடன் சண்டை போட விரும்பினேன்,” என்று மனைவி கூறியதைக் கேட்ட சம்பல் உள்ள ஷரியா நீதிமன்றதுக்கே குழப்பம் ஏற்பட்டதாம்!
ஆன்லைன் கேமிங்கால் விவாகம் ரத்தான கதை
இது பெரும் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். விவாகரத்தையும் செய்ய வைக்கும் என்று புரிய வைக்கும் நிகழ்வு இது.
அகமதாபாத்தைச் சேர்ந்த 19 வயது மனைவி, PUBG மீது இருந்த மோகத்தால் கணவரை விவாகரத்து செய்ய விரும்பினார். இந்த விவரம் அறிய பெண், ஒரு வயது குழந்தையின் தாய் என்பதும் வருத்தமான விஷயம்.
தான் விரும்பிய அளவுக்கு PUBG விளையாட கணவர் அனுமதிக்கவில்லை என்று விவாகரத்து கேட்ட பெண்
ணின் பெற்றோர்களுக்கும், மகளின் செய்கை திருப்தியளிக்கவில்லை.
யாரும் விவாகரத்துக்கு ஒத்துக் கொள்ளாதாதால், விவாகரத்து பெற உதவி கோரி “அந்த பெண் 181 க்கு போன் செய்து, தனது கணவருடன் ஒத்துப் போகாததால் செய்யாததால் பெண்கள் கண்காணிப்பு இல்லத்தில் இருக்க விரும்புவதாக தெரிவித்தார்.
கணவர் வழுக்கையாக இருப்பதால் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் விவாகரத்து கோரியுள்ளார். திருமணத்திற்கு முன் தனது தலை வழுக்கை என்பதை மறைத்த கணவரிடம் இருந்து விவாகரத்து செய்ய வேண்டும் என்று குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு பதிவு செய்தார்.
2020 இல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகளில் கணவர் விக் அணிந்து வழுக்கையை மறைத்துவிட்டார். ஆனால் உண்மை தெரிய வந்தபோது கோபமடைந்த பெண் சொன்ன வார்த்தைகள் இவை.
“என் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன் நான் பலமுறை சங்கடமாக உணர்கிறேன். இனி அவருடன் வாழ்வது எனக்கு கடினம்” என்று மனைவி தெளிவாக கூறிவிட்டார்.
திருமணங்கள் சொர்க்கத்தில் முடிவு செய்யப்படலாம், ஆனால் நீடித்து இருக்க வேண்டியது என்னவோ தம்பதிகளுக்கு இடையில் தான்.
ஆனால், அவர்களுக்கு இடையில் இடைவெளி ஏற்பட்டால், சொர்க்கத்தில் முடிவான திருமணத்தை நரகமாகனதாக அவர்கள் நினைக்கத் தொடங்கிவிடுகின்றனர்.
நரகத்தில் ஏன் உழல வேண்டும்? பிரிந்து செல்வது என்பது சில பேருக்கு ஒரே வழியாக இருக்கலாம். ஆனால் எல்லோருக்கும் அல்ல.
சில நிமிடங்கள் உங்கள் ஆரம்ப கால காதல் வாழ்க்கையை நினைத்து பாருங்கள். நல்ல திருப்பங்கள் ,மாற்றங்கள் நிகழும்
.
வாழ்வதற்காக ஒரே பாதையில் இணைந்த இருவர், பாதை மாறிப் போவதன் அவசியம் சரிதானா?
பலதடவை சிந்தியுங்கள். அதிரடியான முடிவு வேண்டவே வேண்டாம். ஆத்திரத்தில் அவசரத்தில் இந்த முடிவை எடுக்கவே கூடாது.
பல முறை நன்றாக சிந்தித்து உங்களுக்காகவும் உங்கள் குழந்தைகளுக்காகவும் சொந்தமாக முடிவு எடுங்கள்!