விவாகரத்துக்கள் அதிகரிப்பது ஏன் (Divorce)
காதலித்தோ அல்லது பெற்றோர் பார்த்தோ கல்யாணம் செய்வது பெரிய விடயமல்ல. அதை தொடர்ந்தும் எடுத்துச் செல்வது தான் முக்கியம்.
நாம் ஒருவருக்கொருவர் எண்ணங்களையும் விருப்பங்களையும் அடையாளம் கண்டு அவற்றுடன் இணக்கமாக செயற்பட வேண்டும். அப்போது தான் அழகான ஆரோக்கியமான குடும்ப வாழ்வை பெறமுடியும்.
குடும்பம் என்றால் ஒருவொருக்கொருவர் எதை விரும்புகிறார்கள், எதை விரும்பவில்லை என்பதை உணர்ந்து (Why divorce is increasing) நடந்து கொண்டால் அதிக பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
தற்போதைய நவீன உலகத்தில் படிப்பு, வேலை என எந்த துறையை எடுத்தாலும் ஆண்,பெண் என்ற பேதம் இல்லை. அந்தளவிற்கு பெண்களும் சம அளவில் முன்னேறி உள்ளார்கள். இருந்தாலும் உடலை அமைப்பில் ஆண்,பெண் வித்தியாசம் இருக்கிறது.சில வேலைகளை பெண்களால் தான் சரியாக செய்ய முடியும் என்றிருக்கிறது. சில வேலைகளை ஆண்களால் தான் செய்ய முடியும். இது இயற்கையின் படைப்பு.
அதற்காக ஆண், பெண் சமம் இல்லை என்றாகிவிடாது. இந்த உண்மையை உணர்ந்து செயற்பட்டால், அதிக குழப்பங்களை தவிர்க்கலாம்.
அதிகமான பெண்கள் அலுவலக வேலைகளில் உள்ளார்கள். உயர் பதவிகளில், பொறுப்புகளில் பல பெண்கள் பணியாற்றுகிறார்கள்.
இதனால் , உண்மையில் வேலைக்கு போகும் பெண்களைப் பொறுத்தவரையில் இரட்டிப்பு சுமை என்றே சொல்ல வேண்டும். வேலை,வீட்டுவேலை,பிள்ளைகள், பெற்றோர், சொந்தம் இதற்கிடையில் தமது நலனைக் கவனிக்க அன்றாடம் யோகா,உடற்பயிற்சி செய்ய ,எனபட்டியல் நீண்டு கொண்டே போகும்.
என்றாலும் தற்போது அநேக ஆண்கள் வீட்டுவேலை, சமையல்வேலை, பிள்ளைகளைக் கவனித்தல்,பொருட்களை வாங்குதல் என்று அநேக வேலைகளில் ஒத்தாசை புரிகிறார்கள்.
பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் தமது தனிப்பட்ட விடயங்களை பகிரங்கமாக இடுவது மிகத் தவறான விடயம். எனவே இருவருக்கும் இடையே பிரச்சினைகள் உள்ளன என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துகிறார்கள்.
சில குடும்பங்களில் உண்மையிலேயே சேரக் கூடாத இருவர் இணைந்து அதிக பிரச்சனைகள்,சண்டை,சச்சரவு ஏற்படும். ஒரு தனி மனிதராக வாழ்க்கையில் நிம்மதி, அமைதி,சந்தோசம் மிகவும் அவசியம். அப்படி இல்லாதபோது ,தகுந்த காரணத்திற்காக விவாகரத்து கோருவது நல்லது.
விவாகரத்து ஏற்பட பொதுவான காரணங்கள் (Divorce)
அடுத்தவர்களின் தலையீடு
எப்போதும் அமைதியாக தம் பிரச்சனைகளை தமக்குள்ளேயே வைத்து தீர்ப்பது சிறந்தது. குடும்பம் என்று வரும் போது மூன்றாம் நவருக்கு இடமில்லை. ஒருவேளை தம்மால் தீர்க்க முடியவில்லை என்றால் மட்டும், குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் உதவியை நாடலாம்.
தேவையில்லாமல் மூன்றாம் நபரின் தலையீடு ஆரம்பத்தில் ஆறுதலைத் தருவதாக இருந்தாலும்,குடும்ப பிளவுகளுக்கு அதுவே அடித்தளமாகிறது.
சுதந்திரம்
பெண்கள் வாழும் முறையும், ஆண்கள் வாழும் முறையும் முற்றிலும் வேறுபட்டவை. குறிப்பாக இலங்கை போன்ற ஆசிய நாட்டில் பெண்கள் உட்புற நடவடிக்கைகளில் மட்டுப்படுத்தப்பட்டவர்களாக வளரும்போது,ஆண்கள் நண்பர்களுடன் வெளியே அதிக நேரத்தை செலவிடுவார்கள்.
ஆனால், இதை திருமணம் ஆன பின்னர் சிறிது குறைத்துக் கொள்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களுடனும் அதிக நேரத்தை செலவிடுதல் அவசியம்.
இப்படி சிறுசிறு பிரச்சனைகள் தான் சங்கிலி கோர்வையாகி விவாகரத்து (Divorce) வரை கொண்டு செல்கின்றது.
மிக சிறிய பிரச்சனைகளுக்கே விவாகரத்தை கோருவது தான் ,மிகவும் வருத்தமான விடயம். கொஞ்சம் யோசித்தால், நேரம் ஒதுக்கி இருவரும் பிரச்சனைகளை பேசினாலே போதும் எந்த பெரிய பிரச்சனைக்குமே தீர்வு கண்டு விடலாம்.
அப்படியிருக்க, தற்போதைய சமுதாயம், பெண்களுக்கு தனித்து வாழ்வதற்கான எல்லா வாய்ப்புகளையும் தந்துள்ளது. எடுத்தவுடன் விவாகரத்து (Divorce) என்ற முடிவுக்கு இதுவும் ஒரு காரணம்.
மாற்றம்
நிறைய பெண்கள் செய்யும் மற்றொரு தவறு இதுவாகும். பெண்கள் தாங்கள் விரும்பும் ஒரு ஆணை அவர்களுக்கு விரும்பும் வகையில் மாற்ற முயற்சிக்கிறார்கள். ஆனால் அது எண்ணமாக இருக்கக்கூடாது.
இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு ஒருவரது ஆசைகளை மற்றவர் மதிக்க வேண்டும். அவர்களுக்கு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக அவரது சொந்த வாழ்க்கையை வாழ விட வேண்டும்.
இல்லையெனில், ஒரு நபர் மற்றவர் விரும்பும் விதத்தில் மாறினாலும், பின்னர் அதனால் பிரச்சினைகள் ஏற்படலாம்.
தனிக்குடித்தனம்
முந்திய காலம் போலால்லாமல் குடும்பங்கள் தனித்தனியாக வாழ்வது சில நன்மைகள் இருந்தாலும் பல கஷ்டங்களும் உண்டு. உதாரணத்திற்கு வீட்டில் பெரியவர்கள் இருந்தால், குழந்தைகளைஅவர்கள் கவனித்துக் கொள்வார்கள்.
தனிக்குடும்ப வாழ்வில் இது கிடைக்காததால் கணவன்,மனைவி இருவரும் தான் கவனித்துக் கொள்ளவேண்டிய சொல்நிலை என்பதால், தம்பதியருக்கிடையில் இதனாலேயே பல பிரச்சனைகள் உண்டாகும்.
நெருங்கிய தொடர்பு
சமுதாயத்தை எதிர்கொண்டு வாழும் போது, ஒருவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையை ஒதுக்கி வைத்துவிட்டு, தான் வாழும் சூழலுக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டியது அவசியமகின்றது. ஆண்,பெண் இருவரும் வேலை நிமித்தம் அல்லது எந்தவொரு ஆணுடனும் தொடர்பு கொள்ளவேண்டிய சூழ்நிலை .
ஆனால் அவற்றை சரியாக புரிந்து கொண்டு சமூகத்தில் உள்ள அனைவருடனும் அவசியமான விஷயங்களில் நன்றாக நடந்துகொள்வதும், ஒவ்வொரு ஆணுடனும் தனிப்பட்ட முறையில் தொடர்புகளை குறைத்துக்கொள்வதும், பெரும்பாலும் தவிர்த்துக்கொள்வதும் மிகவும் நன்று.
ஆசைகளை புறந்தள்ளுதல்
இரு வெவ்வேறு வீடுகளில், இரு வெவ்வேறு சமூக நிலைமைகளில் வளர்ந்த இருவர் பெரும்பாலும் வெவ்வேறு ஆசைகளைக் கொண்டவர்களாகத் தான் இருப்பார்கள்.
எனவே ஒருவர் விருப்பத்தை மற்றவர் மீது தணிக்க வேண்டியதில்லை.சிறிது காலம் இருவரும் இணைந்திருக்கும் போது, அவர் விரும்புவதையும் விரும்பாததையும் பற்றி புரிந்துகொண்டு வாழ்வது தேவையாகின்றது.
எமது சமுதாய கட்டமைப்பு அவ்வாறு மாற்றிவைத்துள்ளது. கணவன் முன் பெண்கள் பெண்ணாக வெளிப்படுவதை ஆண்கள் விரும்புகிறார்கள்.
வாழ்வதற்காக இணைகின்றோம்.இணைந்தே வாழ்வோம்!