ஏன் கனவு காண்கிறோம்? (Why do we dream)

கண்ட கனவு (Dream) பலிக்குமா பலிக்காதா என்று காலையில் எழுந்து அங்கலாய்க்கதவர்கள் என்று எவரும் இருக்க இயலாது. காரணம், கனவு (Dream) என்பதுகண்களுக்குப் புலப்படாவிட்டாலும் அவரவரது  எண்ணங்களுடன் உயிர் வாழுகின்றது .

கனவுகள் பலவிதம் (Dreams are different)

குழந்தைகள் ,பெரியவர்கள் என எல்லோருக்கும் சொந்தமானது கனவு. சிலவேளை பிடித்தமான கனவு வரும். சிலவேளை பயங்கரமான கனவு வரும். சிலநேரம் நமக்கு பிடித்தவர்கள் இறப்பதாக கூட கனவு வரும்.

இறந்தவர்கள் கனவில் வருவார்கள். சிலநேரம் சிக்கலான கனவுகள் தொல்லை தரும். என்னவென்றே விளங்காது. சில கனவுகளே காலையில் நினைவில் இருக்கும்.

சிலர் உறக்கத்தில் சிரிப்பார்கள்,சிலர் பயந்து உளறுவார்கள்,சிலர் அழுவார்கள்.இவையெல்லாம் கனவுகளின் விளைவே.

இப்படி பலவிதமான உணர்வுகளுடன் ,பலவிதமான கனவுகள் ஏற்படும். விடியும் அநேக பொழுதுகள் கனவுகளிலிருந்து தொடங்குகின்றன.

கனவு காணும்போது நமக்குள் என்ன நிகழ்கின்றது ?(What happens when we do dream?,dream,annaimadi.com,கனவுக்க,ஏன் கனவு வருகின்றது,அன்னைமடி,இறந்தவர்கள் ஏன் கனவில் வருகிறார்கள்,கனவுன் பலன்

யோசித்து யோசித்து நாம் பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் கதை, கனவு.

கனவு என்பது ஒவ்வொரு மனதின் மயக்கம். எங்கோ மூளையின் ஒரு ஓரத்தில் இருக்கும் சிறு ஆசை கூட கனவாய் மலரும்.

கனவுகள் காட்சிகளின் பிரதிபிம்பங்கள்,அதிலிருந்து தெளிந்து எழுந்தவர்கள் திண்மம் ஆகிறார்கள்.ஆழ்ந்து அமுங்கியவர்கள் காணாமல் கரைகிறார்கள்.

கண்ட கனவு எல்லாம் பழித்துவிட்டால் கடினங்கள் ஏதும் இல்லையே. கொண்ட கனவுகள் எல்லாம் நடந்து விட்டால் முயற்சிகள் தேவை இல்லையே. 

கனவு காணும்போது நமக்குள் என்ன நிகழ்கின்றது ?(What happens?)

சாமத்தில் வந்தாலும் சரி நடு இரவு வந்தாலும் சரி கனவுகள் விருப்பத்தின் வாசல்களே. கதவுகள் திறந்தால் மட்டுமல்ல, திறக்காமல் போனால் கூட அங்கிருந்தும் ஒரு பாதை ஆரம்பமாகும். கனவெனும் வாசல்களைத் திறக்க நாம் நிஜத்தில் வாழ வேண்டும், கற்பனையில் அல்ல.

கனவும் நனவும் (Dream and consciousness)

வேலைக்கு போகலாமா? இல்லை, மேற்படிப்புக்கு செல்லலாமா? அல்லது கொஞ்ச காலம் காத்திருந்தான் பாக்கலாமா? இல்லை, கல்யாணம் செய்து கொள்ளலாமா? கேட்டுக்கேட்டு கேள்விகளால் மட்டுமே கனவு கண்டு கொண்டிருப்பதால் தான் கனவின் பொருள் மாறிப்போனது.

கனவு காணும்போது நமக்குள் என்ன நிகழ்கின்றது ?(What happens when we do dream?,dream,annaimadi.com,கனவுக்க,ஏன் கனவு வருகின்றது,அன்னைமடி,இறந்தவர்கள் ஏன் கனவில் வருகிறார்கள்,கனவுன் பலன்

என்ன செய்தாலும் எப்படி செய்தாலும் எப்பொழுது செய்தாலும், செய்யும் காரியம் மனதை மகிழ்விக்குமா, பின்னாளில் வாழ்ந்த வாழ்வை எண்ணி திருப்தி கொள்ள வைக்குமா என்று சிந்திக்க வேண்டுமே தவிர, கண்ட கனவுகள் எல்லாம் இதன்வழி நிறைவேறிவிடுமா என்ற சிந்தனையை குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது.

காரணம் கனவு இலட்சியத்தின் ஆரம்ப நிலையாக இருக்க வேண்டுமே தவிர முடிவாகி விடக்கூடாது.

கனவை கவிதை ஆக்கியவர்கள் பலபேர் அப்படி இருக்கையில் ஏன் சில கனவுகள் இதயத்தை இறுக்கிப் பிடிக்கின்றன. ஏன் சில கனவுகள் பயத்தோடு எண்ணங்களை பிசைகின்றன. ஏன் கனவுகள் பல காலை வேலைகளை கடினங்களாக்குகின்றன. சிந்தித்து பார்த்தால் அக்கனவுகளெல்லாம் பலர் நம்முள் திணிக்கும் கனவுகள்.

 நாம் என்னவாக ஆகவேண்டும், எப்படியாக நாம் மாற வேண்டும் என்றெல்லாம் இந்த உலகம் நம் மீது திணிக்கும்.

கனவு காணும்போது நமக்குள் என்ன நிகழ்கின்றது ?(What happens when we do dream?,dream,annaimadi.com,கனவுக்க,ஏன் கனவு வருகின்றது,அன்னைமடி,இறந்தவர்கள் ஏன் கனவில் வருகிறார்கள்,கனவுன் பலன்

படிக்க வேண்டுமா, வேலைக்கு செல்ல வேண்டுமா, கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமா, இல்லை இந்த உலகை சுற்றி வர வேண்டுமா, எதுவானாலும் ,கனவில் மட்டுமே வாழ்ந்தால் வாழ்க்கை புரண்டுவிடும் .

தவிழ்ந்தாலும் சரி, தவற விட்டாலும் சரி, தடம் மாறாத வரையில் தன் கனவுகளை சுமக்கும் தைரியமுள்ள உள்ளங்கள் ஒருநாள் தன்னிறைவு அடையும்என்பது  மறுக்க முடியாத உண்மை.

ஆனால் காத்திருக்க தெரிந்த கண்களால் மட்டுமே தன் கனவுகளை கண்டுகொள்ள இயலும்.

தோல்வியானாலும் வெற்றி ஆனாலும், நம் கனவில் நம்பிக்கை கொள்வோம். என்ன செய்தாலும் சரி, எதுவானாலும் சரி நம் முடிவுகளை நாம் எடுப்போம். விளைவுகள் எதுவானாலும் பெருமையுடன் ஏற்போம்.

கனவு காண்போம் நம் இலட்சிய பாதையில்  இலக்கை நோக்கி ………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *