ஒவ்வொரு கனவுக்கும் ஒவ்வொருபலன் (Dreams and benefits)

நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் (Dreams and benefits) உண்டு. ஆயினும், சிலர் நினைவுகளின் கற்பனை வடிவம் தான் கனவுகளின் பலன்கள் என்கிறார்கள். சிலர் ஆழ்மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள் என்று கூறுகிறார்கள்.

கனவுகளுக்கான பலன்கள் பழமையான சாஸ்திரங்களில் மட்டுமே உள்ளது.

காணும் எல்லா கனவுகளும் பலிப்பதில்லை. சில கனவுகள் வந்து மறைந்து விடும்.தூக்கத்தில் இருந்து எழும் போது  ஞாபகத்தில் இருப்பதில்லை. சில கனவுகள் மனதில் பதிந்து விடும். அதிலும் சிலருக்கு நடக்க இருக்கும் நிகழ்வுகள் மற்றும் அதன் தொடர்பான விஷயங்களை கனவில் முன்னதாகவே காட்டி விடும்.

இப்பதிவில் நன்மைகைத் தரும் கனவுகளைப் பற்றி பார்ப்போம்.

நன்மையை குறிக்கும் கனவின் பலன் (Dreams and benefits)

வயதில் மூத்தவர்கள் தன்னை ஆசிர்வாதம்  செய்வது போன்று கனவு கண்டால் ஜீவன மேன்மையும் பொருள் சேர்க்கையும் ஏற்படும்.நிலவை கனவில் கண்டால் தம்பதியினரிடையே அன்பு அதிகரிக்கும்.அக்னியைக் கனவில் கண்டால் செல்வம் உண்டாகும்.

சிறு குழந்தைகளை கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். சிறு குழந்தைகள் கனவில் வந்தால் பிணி நீங்கும். பெரும்பதவியில் உள்ளவர்களை கனவு கண்டால் அந்தஸ்தும் மதிப்பும் அதிகரிக்கும்.

மகன் ஆற்றில் மூழ்கியது போல் கனவு கண்டால் துன்பங்கள் விலகும்.

ஓடிக் கொண்டிருப்பது போல் கனவு கண்டால், நிகழ்கால நிலைமை மேன்மை அடையும் என்பதே அறிகுறியாகும். கைகளில் ரத்தம் வருவது போல் கனவு கண்டால் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறைபாடுகள் நீங்கும்.

  dreams benefits,annaimadi.com,dreams benefits in tamil,good dreams,

தாம் பிறரை அடிப்பதாகக் கனவு கண்டால், புகழ் உண்டாகும். புதிய நண்பர்கள் உண்டாவர்.

கர்ப்பிணி பெண்ணை கனவில் கண்டால் பொருள் சேரும். கருத்தரிப்பது போல் கனவு கண்டால் உங்கள் வாழ்கை முன்னேற போகின்றது என்று பொருள்.குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் இன்னல்கள் நீங்கும்

கனவில் காதணிகளைக் கண்டால், பொன் நகைகள் பலவும் தனக்கு உரிமையாகும்.புது துணிகள் வாங்குவது போல கனவு வந்தால், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.அணிகலன்கள் வாங்குவது போல் கனவு வந்தால் இன்பம் பயக்கும்.

தவயோகிகளை கனவில் கண்டால், பொதுநல தொண்டில் ஈடுபடுவார்கள்.திருநங்கைகளை கனவு கண்டால் குடும்பம் மற்றும் தம்பதிகளுக்கிடையே அன்பும், ஒற்றுமையும் அதிகரிக்கும்.

ஆசிரியர் கனவில் வந்தால், பொருள் வளம் அதிகரிக்கும்.

கோயிலினை கனவில் காண புகழ் உண்டாகும்.ஆலயத்தில் நுழைந்து இறைவனை வழிபடுவதுபோல் கனவு வந்தால், செயல்களில் சிறு தடைகள் ஏற்பட்டு இறைவன் துணையால் நீங்கி வெற்றி பெறுவார்.

ஆலயமணி ஓசை ஒலிக்கும் இசை கேட்டால் சந்ததியற்றவர்களுக்கு குழந்தைச் செல்வம் உண்டாகும்.தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.

இனிப்பான பலகாரங்கள் கனவில் வந்தால் மிகவும் நல்லது. வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.விருந்தில் உண்பது போல் கனவு கண்டால் திருமண தடை நீங்கும், உத்தியோக உயர்வு கிடைக்கும்.

கனவில் கடலைக் கண்டால் வெளிநாடு வேலை வாய்ப்பு அமையும்.புதிய நபர்களை கனவில் கண்டால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

மலத்தை மிதிப்பது போல் கனவு வந்தால் சுப செலவுகள் உண்டாகும்.

dreams benefits,annaimadi.com,dreams benefits in tamil,good dreams,dreams and benefits

இயற்கை சம்பந்தமான கனவுகள்

ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு கிடைக்கும்.கனவில் தொழிற்சாலையைக் காண்போருக்கு பரம்பரைச் சொத்து கிடைக்கும்.

வானவில்லை கனவில் கண்டால் பணம் செல்வாக்கு அதிகரிக்கும், பதவி உயர்வு கிடைக்கும்.

எலுமிச்சை பழத்தைக் காண்பது நல்லது, தனக்கு ஒருவர் கொடுப்பதாகக் கண்டால் தொழிலில் விருத்தி, சகல பாக்கியங்களும்  பெருகும்.  வெற்றிலை பாக்கை கனவில் கண்டால் இறை அருள் கிடைக்கும். எண்ணிய காரியத்தில் வெற்றி உண்டாகும்.

நாவல் பழத்தைக் கனவில் கண்டால், காரிய சித்தி உண்டாகும். தன சம்பத்தும், சந்தான சம்பத்தும் கிடைத்திடும். கனவில் ஆலமரத்தைக் கண்டால், தொழில் அபிவிருத்தி அடையும்.அரிசியைக் கனவில் கண்டால், செய்யும் தொழில் அபிவிருத்தி அடையும்; லாபம் அதிகரிக்கும்

மாமரத்தை கனவில் கண்டால் குடும்பத்தில் புதியவர்களின் வருகை உண்டாகும் என்று பொருள்.மலர்கள் பூத்துக் குலுங்குவதுபோல் கனவு வந்தால், நல்ல பலன்கள் கிடைக்கும்.

பழங்கள் நிறைந்த மரத்தை கண்டால், பொருள் சேர்க்கையும், புத்திர பாக்கியம் உண்டாகும்.அத்தி மரத்தை காண்பது குடும்பத்தில் விவாக நிகழ்வு ஏற்படுவதை குறிக்கும்.

கிணற்றில் இருந்து நீர் இறைப்பது போல் கனவு கண்டால் விஷயங்கள் கைக்கூடும்.நீர்வாழ் உயிரினங்களை கனவில் கண்டால் கவலைகள் தீரும்.சுத்தமான நீர் ஊற்றைக் கனவில் கண்டால், அவரது வாழ்க்கையில் எவ்வித துன்பமும் தொடராது.

கனவில் உயிரினங்கள்

கனவில் யானை வந்தால் அரசாங்க உதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக நடந்து வந்த வழக்கில் தீர்ப்பு கிடைக்கும். யானை  மாலை போடுவது போல் கனவு கண்டால் பதவி உயர்வு கிடைக்கும். 

யானை ஆசீர்வாதம் செய்வது போல கனவு கண்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும், மேலும் நல்ல காலம் பிறந்திருப்பதை உணர்த்துவதாகும்.

குதிரை, கழுதையை கனவில் கண்டால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.பசு மாடு வாங்குவது போல் கனவு கண்டால் எதிர்காலம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும்.

பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு  செல்வம் வந்து சேரும். மயிலினை கனவில் கண்டால் தம்பதியினரிடையே பரஸ்பரம் அதிகரிக்கும்.

பாம்புகள் இறந்து கிடப்பது போல் கனவு கண்டால், முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும்.

 

dreams benefits,annaimadi.com,dreams benefits in tamil,good dreams,dreams and benefits

திருமணம் பற்றிய கனவுகள்

காதலை வெளிப்படுத்துவது போல கனவு கண்டால் செய்யும் காரியம் வெற்றியாக அமையலாம்திருமண கோலத்துடன் இருப்பது போல் கனவு கண்டால் சமுதாயத்தில் நன்மதிப்பு கிடைக்கும்.

அழகு இல்லாத பெண்ணை, மணமாகாத ஆடவன் கனவில் கண்டால், மிகவும் அழகான பெண் மனைவியாவாள்.

கனவில் கிணற்றைக் காண்பது நல்லதாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணமாகும்.மங்கள பொருளுடன் பெண் வீட்டிற்குள் நுழைவது போல் கண்டால், நம் வீட்டில் உள்ள பெண் பருவமடைய போகிறாள் அல்லது திருமண முயற்சி கைக்கூடும்.

இறந்தவர்களைக் கனவில் கண்டால்…(Dreams and benefits)

இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும்.

பதவி உயர்வு கிடைக்கும். இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம், பதவி,  லாபம் நிச்சயம் கூடி வரும்.

நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும்.தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு  கண்டால் நெருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும்.

இறந்த தாய்-தந்தையர் கனவில் தோன்றினால், வர இருக்கும் ஆபத்தினை எச்சரிக்கை வந்துள்ளனர் என்று பொருள். இது ஒரு விதத்தில் நன்மையே.

மனைவி இறந்துவிட்டாற்போல் கனவு கண்டால், மனைவிக்கு இரட்டைக் குழந்தை பிறக்க இருப்பதைக் குறிப்பிடும்.

குழந்தைகள் இறப்பதுபோல் கனவு காண்பது அவருக்கு வர இருக்கும் பேராபத்தைக் குறிக்கும்.

தற்கொலை செய்து கொள்வது போல் கனவு வந்தால் ஆபத்து நீங்கும்.

dreams benefits,annaimadi.com,dreams benefits in tamil,good dreams,dreams and benefits

எந்த நேரத்தில் காணும் கனவு  பலிக்கும்?

நேரத்தை பொறுத்தே சில கனவின் பலன்கள் அமையும். இரவின் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருடத்திலும், இரண்டாவது ஜாமத்தில் கண்ட கனவு எட்டு மாதத்திலும், மூன்றாம் ஜாமத்தில் கண்ட கனவு நான்கு மாதங்களிலும் விடியற் காலையில் அதாவது நான்காவது ஜாமத்தில் காணும் கனவு பத்து நாட்களுக்குள் அல்லது ஒரு மாதத்திற்குள் பலிக்கும் என்று  சாஸ்திரங்களில் சொல்லப்படுகிறது.

அதாவது நள்ளிரவில் ஒரு மணிக்கு கனவு கண்டால் ஒரு வருடம் கழித்து பலன் கிடைக்கும்.இரண்டு மணிக்கு கனவு  கண்டால் மூன்று மாதத்தில் பலன் கிடைக்கும்,

அதிகாலை கனவு உடனடியாக பலிக்கும் என்று கூறுவார்கள். கனவு சாஸ்திரமும்  அப்படித் தான் கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published.