ஆள் பாதி ஆடை பாதி (Dress and appearance)
உடல்வாகுக்கு ஏற்ப (Dress and appearance),சரும நிறத்திற்கேற்ப,உயரத்திற்கு ஏற்ப வயதிற்கேற்ப ஆடைகளைத் தெரிவு செய்து அணிந்தால் எல்லோருமே அழகாக தெரிவார்கள்.
பண்டிகைகள். திருவிழாக்கள், வீட்டு கொண்டாட்டங்களான திருமணம் போன்றவற்றிற்கு ஆடைகல் வாங்குவது என்பது சிறப்பான இடம் பிடிக்கும்.
ஆண்களை விட பெண்களே ஆடைகள் வாங்குவதில் அதுக ஆர்வம் காட்டுவார்கள்.விதம் விதமான டிசைன்களில் ஆடைகள் வாங்குவதில் அதிக நாட்டம் கொண்டவர்களும் பெண்களே. காரணம் உடல் அழகிய மேலும் மெருகூட்டி காட்டுவது ஆடைகளே.
அதாவது ஆள் பாதி ஆடை பாதி.ஒருவரின் தோற்றத்தில் அதிக தாக்கத்தை ஆடைகள் ஏற்படுத்தும்.
மெலிந்த தோற்றமுள்ள பெண்கள்
மெலிந்த தோற்றமுள்ள பெண்கள் ஹாட்டன் ஆடைகளை அணிவது உடல் பருமனை சிறிது அதிகரித்து காட்டும்.இதனால் மேலும் அழகாக தெரிவார்கள்.சுடிதார் தெரிவு செய்யும் போது மேலும் கீழும் வெவ்வேறு நிறங்களில் இருப்பதாக தெரிவு செய்து அணிந்தால் ,மேலும் அழகாக இருக்கும்.
மிடியில் கூட முன்பக்கம் பட்டையாக தைத்து அதில அடி நுனி வரை பூ வேலைப்பாடுகள்,மணி, சம்கி அமைந்திருந்தால் தோற்றத்தை சற்று மெருகேற்றிக் காட்டும்.
மெலிந்த உடல்வாகு உள்ளவர்கள் பிரில் வைத்து ஆடைகளை அணிவது சற்று உடற்பருமனாக காட்டும்.
இருக்கமான ஆடைகள் அணிவதை தவித்துக் கொள்வது நல்லது.பேன்ட் சர்ட் அணிவதாக இருந்தால் சேர்ட்டை உள்ளே விடாமல் இருப்பது அழகாக இருக்கும்.சேர்ட்டில் அழகான பட்டன்,எம்ப்ரொய்டரி வேலைப்lபாடு செய்ததாக இருப்பது அழகாக இருக்கும்.
உயரமான மெலிந்த தோற்றத்துடன் நிறமாக இருக்கும் பெண்கள் கொஞ்சம் பெரிய பூக்கள் போட்ட மின்னும் சேலைகள் ,சுடிதார்கள் அணிவது பொருத்தமாக இருக்கும்.
பொருத்தமான நிறத்தில் நீளமான அகலமான பிளேன் துப்பட்டா அல்லது கறுப்பு,வெள்ளை நிறத்திலும் அணிவது எடுப்பாக இருக்கும்.
கொட்டு,காட்டம்,சிறிய போர்டர் போட்ட ஆடைகள் பொருத்தமாக இருக்காது.நீளவாக்கில் அதாவது கழுத்தில் இருந்து கால் வரை பூ போட்ட ஆடைகளும் பொருந்தாது,
உயரமான மெலிந்த தோற்றத்துடன் கறுப்பு, மாநிறமாக இருக்கும் பெண்கள் கடும் வண்ணங்களில் ஆடைகளைத் தெரிவு செய்யக்க் கூடாது. விரும்பினால் கடும் ,மெல்லிய வண்ணங்கள் கலந்த மாதிரி தெரிவு செய்யலாம்.ஆடையில் இருக்கும் மெல்லிய வண்ணத்தில் துப்பட்டா, மேற்சட்டை அணிவது எடுப்பாக இருக்கும்.
உயரம் குறைவாக உள்ள பெண்கள் (Dress and appearance)
உயரம் குறைவாகவும் நிறமாகவும் உள்ள பெண்கள் பிளேன் நிறத்தில் ஆடை அணிவது நன்றாக இருக்காது.அப்படி அணிய விரும்பினால் பிளவுஸ் துப்பட்டா பூவேலைப்பாடுகளுடனோ,கடும் வண்ணமாகவோ அணிந்தால் அழகாக தோற்றமளிக்கலாம்.
முடிந்தவரை பார்டரும் தலைப்பும் உள்ள புடவைகளை அணிவதை தவிர்ப்பது நல்லது.
உயரம் குறைவாகவும் சற்று நிறம் குறைவாகவும் உள்ள பெண்கள் மெல்லிய சரிகை வைத்த அல்லது மெல்லிய பார்டர் வைத்த சேலைகளை அணிவது அழகாக காட்டும்.
நிறம் குறைந்தவர்கள் அதிக கடும் வண்ணத்தில் ஆடைகளை அணியக் கூடாது.அல்லது விரும்பினால் அதில் வெளிர் நிற பூக்கள்,புள்ளிகள் போட்ட மாதிரி தெரிவு செய்யலாம்.
குறைந்த இடைவெளியுடன் தனித்தனி ஒற்றை டிசைன் உள்ள மாதிரி புடைவைகளை அணிந்தால் உயரம் குறைந்தவர்கள் எடுப்பாக தெரிவார்கள்.
உடற்பருமனான பெண்கள் (Dress and appearance)
உடற்பருமனான தோற்றமுள்ள பெண்கள் உடலுடன் ஒட்டிய ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.சிறிது இறுக்கமில்லாத கொடு போட்ட ஆடைகளை அணிந்தால் சற்று மெலிந்த தோற்றத்தைக் காட்டும்.
பருமனானவர்கள் கழுத்து பகுதியில் சற்று இறுக்கமாகவும் அதன் கீழே இறுக்கமில்லாத ஆடைகளை அணியலாம்.பருமனான கைகள் உள்ளவர்கள் கையில்லாத (Sleeveless) அல்லது இறுக்கமான கையுள்ள மாதிரி ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.
சிபான் ,ஜோர்ஜெட் புடவைகளை பருமனா பெண்கள் தவிர்த்து காட்டன், பாரம்பரிய பட்டு புடவைகளை அணிவது எடுப்பான தோற்றத்தை தரும்.
பொம்மல் கை (Pop sleeve) வைத்த பிளவுஸ்,குர்தீஸ் அணிவது ஸ்டைலாக இருக்கும்.
பருமனான தோற்றமுள்ளவர்கள் இருக்கமானஜீன்ஸ் லேக்கிங்க்ஸ் அணிவது அவ்வளவு நன்றாக் இருக்காது.
எவ்வளவு விலையான உடைகளை அணிகின்றோம் என்பது முக்கியமல்ல.ஆடையினால் எவ்வளவு அழகாய் தெரிகின்றோம், சௌகரியமாக உணர்கின்றோம் (Dress and appearance) என்பதே முக்கியம்!
சரியான ஆடையைத் தேர்ந்து எடுத்து அணிந்தால் எல்லோருமே அழகாக தெரியலாம்.