எண்ணற்ற மருத்துவகுணங்களைக் கொண்ட முருங்கைப் பூ(Drumstick flower benefits)

முருங்கைப் பூவை (Drumstick flower)அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

முருங்கைப்பூவை என்ணெயில் காய்ச்சி சிறு குழந்தைகளுக்கு தேய்த்து குளிக்கவைத்து வந்தால் சளி பிடிக்காது. முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

பாலில் முருங்கைப் பூவை வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். பித்த நீர் குறையும். வாத, பித்த, கபத்தின்  செயல்பாடு சீராக இருக்கும்.
முருங்கைப் பூவை (Drumstick flower) நிழலில் உலர்த்திப் பொடி செய்து காலையில் கஷாயம் செய்து அதனுடன் பனைவெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும்.

முருங்கை பூ நன்மைகள் (Medicinal uses of Drumstick flower)

பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கை கட்டுப்படுத்தவும் முருங்கைப்பூ (Drumstick flower) பயன்படுகிறது. முருங்கைப்பூ சாறு, சர்க்கரைநோயை தணிக்க உதவுகிறது. இதை, துவையல் செய்தும் சாப்பிடலாம்.
மறதியை போக்கவும், நினைவாற்றல் பெருகவும் பயனுள்ள மருந்தாக முருங்கைப்பூ உள்ளது.

தேர்வு நெருங்கி வரும் வேளையில், குழந்தைகளுக்கு முருங்கைப்பூ பொரியல் செய்து கொடுப்பது நல்லது. முருங்கைப்பூவில் அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அத்துடன் பனங்கல்கண்டு கலந்து, தினமும் காலை, மாலை என இரு வேளையும் குடித்து வந்தால், நினைவாற்றல் பெருகும்.
நாவின் சுவையின்மையை மாற்றும் தன்மை கொண்டது. முருங்கைப் பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும்.

பித்த நீர் குறையும். வாத, பித்த, கபத்தின் செயல்பாடு சீராக இருக்கும்.
தொடர்ந்து கம்ப்யூட்டரில் பணியாற்றி வருபவர்கள், அலுவலக ஊழியர்கள் பலருக்கு, 40 வயதிற்கு மேலாகி விட்டால், கண்ணாடி அணியாமல் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

வெள்ளெழுத்து பிரச்சனைக்கு அதாவது பேப்பர் படிக்கக்கூட  முடியாது இருக்கும் நிலைக்கு முருங்கைப் பூ, நல்ல பயன் தரும்.

இந்த பூவை, நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் பார்வைத்திறன் அதிகரிக்கும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.

முருங்கை பூ நன்மைகள் , medicinal uses of drumstick flower in tamil,annaiamdi.com,எண்ணிலடங்கா மருத்துவ குணங்களைக் கொண்ட முருங்கைப் பூ,Drumstick flower benefits,முருங்கை பூ நன்மைகள் ,Medicinal uses of Drumstick flower,அன்னைமடி,முருங்கை பூ செய்முறைகள்,Drumstick flower recipes 
உடல் வலிமை அதிகரிக்க
முருங்கை பூவை சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி பொடி செய்து காலையில் கஷாயம் போட்டு அதனுடன் பனைவெல்லம் கலந்து குடித்து வந்தால் உடல் வலுவடையும். நரம்புகள் புத்துணர்ச்சி பெரும்.
 
கர்ப்பப்பை கோளாறுகள் நீங்க
கர்ப்பப்பை பிரச்சனை, கருமுட்டைக் குறைபாடு, குழந்தையின்மைப் பிரச்சனைகளுக்கு முருங்கை பூவை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலனளிக்கும்.
வயிற்று வலி குணமாக
முருங்கைப் பூ, பிரண்டை பொடியாக நறுக்கப்பட்ட தேங்காய் மூன்றையும் கைப்பிடியளவு எடுத்து இந்த மூன்றையும் ஆவியில் வேகவைத்து அம்மியில் வைத்து நசுக்கிப் பிழிந்து சாறு எடுத்துக் குடித்தால் வயிற்றுவலி நின்றுவிடும்.
முருங்கை பூ நன்மைகள் , medicinal uses of drumstick flower in tamil,annaiamdi.com,எண்ணிலடங்கா மருத்துவ குணங்களைக் கொண்ட முருங்கைப் பூ,Drumstick flower benefits,முருங்கை பூ நன்மைகள் ,Medicinal uses of Drumstick flower,அன்னைமடி,முருங்கை பூ செய்முறைகள்,Drumstick flower recipes
வீக்கத்தை கட்டுப்படுத்த
முருங்கைப் பூவை(Drumstick flower) அரைத்து வீக்கங்கள் மீது பற்றுப்போட்டால் வீக்கத்தை கட்டுப்படுத்தும். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் முருங்கைப் பூவை மென்று சாப்பிடுவது நல்லது.
 
ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் ஹார்மோன்களை சீராக்கி கருவுறுதலுக்கு முருங்கை பூ இலேகியம் துணைபுரிகிறது,

முருங்கைப்பூவில் முருங்கை பூ ரசம், முருங்கைபூ பொரியல்,துவையல்  செய்து சாப்பிடலாம்.

Leave a Reply

Your email address will not be published.