வறண்டதோலா உங்களுக்கு (Dry skin)

 

கவலை வேண்டாம்.இலகுவாக சரி செய்ய முடியும்!

வறண்ட சருமத்தால் (Dry skin) என்ன தான் பூசினாலும் முகம் பொலிவில்லாமல் இருக்கும். அதோடு வறண்ட சருமம் (Dry skin) உள்ளவர்களுக்கு எளிதில் சுருக்கங்கள் வந்துவிடும். எரிச்சல், அரிப்பு, என பிரச்சனைகளைதந்து கொண்டிருக்கும்.
 
இதைத் தவிர்க்க தினசரி அதிகளவு நீர் அருந்துதல்  மிக அவசியம்.
 
உணவின் மூலமே வறண்ட சருமத்தை அதிகளவு  சரி செய்து விடலாம்.

புளிப்புச்சுவையுள்ள உணவுகளைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.உதாரணமாக, எலுமிச்சை, தக்காளி, புளி இவற்றை உணவில் குறைந்த அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதிகளவு பால் அருந்தலாம். பாதாம், முந்திரி, வேர்க்கடலை போன்ற பருப்புவகைகளை உணவில் மிதமான அளவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

நீர்க்காய்கறிகள்,கீரைவகை , பழங்கள்,இளநீர் போன்றவை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக நீர்க்காய்கறிகளான பூசணிக்காய், புடலங்காய்,வெள்ளரிக்காய் இந்த மாதிரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த மாதிரியான உணவு வகைகளை  வறட்சியான சருமம் உள்ளவர்கள் எடுத்துக் கொண்டால் உடல் வறட்சி நீங்கும்.

அதீத பனி காலம், அதீத வெப்ப காலம் போன்ற கால நிலைகளில், ஏ . சியின்  குளிர் அளவு கூட்டி  வைப்பதால் தோலில் உள்ள எண்ணெய்ப்பசை வறண்டு ,தோல் வறட்சி (Dry skin)  உருவாகும்.

for dry skin Buy Here

கை கால்களில் தேங்காய் எண்ணெய், ஒலிவ் எண்ணெய் அடிக்கடி தேயுங்கள்.

வாரம் ஒரிரு முறையாவது எண்ணெய்குளியல்  செய்யுங்கள். அதிக வறண்ட உணவுப்பொருள்களை தவிர்த்துக் கொள்ளவும்.

 சருமத்தில் வறட்சியை போக்க  இங்கே சில வழிமுறைகள் .பாருங்கள்!

எளிய முறையில்  வறட்சியான தோல் (Dry skin) எவ்வாறு சரி செய்வது?

  • வெண்டைக்காய் பிஞ்சு , கரட் இரண்டையும் சமமாய் எடுத்து, தேங்காய்ப் பால் விட்டு அரைத்து, முகப்பூச்சு செய்ய, முக வறட்சி நீங்கும்.

         இதேபோல் உடல் முழுமைக்கும் பூசிக் குளிக்க, உடல் வறட்சி நீங்கி மேனி அழகாகும்.

  • அகத்திக்கீரையைத் தேங்காய்ப்பால் விட்டரைத்து, முகம் மற்றும் உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்க, முகம் வசீகரம் ஆகும். கண் கருவளையங்கள் நீங்கும். தோல் சார்ந்த படை, அரிப்பு போன்ற வியாதிகள் மறையும்.
  • செம்பருத்தியிலை, பச்சைப்பயிறு சமமாய் எடுத்து விழுதாய் அரைத்து, முகப்பூச்சுபோல் பூசி வர,முகம் ஜொலிக்கும்.
  • சீமை அகத்தியிலையைப் பச்சைப்பயிறு சேர்த்து விழுதாய் அரைத்துப் பூச முகம் பளபளக்கும்.

 

தக்காளி, தயிர்,அவகாடோ மூன்றுமே வறண்ட சருமத்தில் ஈரப்பதம் அளித்து போதிய போஷாக்கோடு வைத்திருக்கும் . அழுக்களை நீக்கி, சுருக்கங்களை போக்குகிறது. சரும துவாரங்களை இறுகச் செய்கிறது. சருமத்தை மிளிரச் செய்கிறது.

இவற்றை பயன்படுத்தி முகப் பூச்சு (Facepack) தயாரித்து பூசிவர ,சரும வரட்சி குறைந்து, நல்ல பலன் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *