உடல் கழிவுகளை அகற்ற எளிதான வழி (Easiest way to Remove body waste)
உடலில் சேரும் கழிவுகளை அன்றாடம் (Easiest way to remove body waste) வெளியேற்றிவிட வேண்டியது மிக அவசியம். ஒருவர் நோயின்றி ஆரோக்கியமாக வாழ, இதுவே சிறந்த வழி. இல்லையென்றால் உடலில் கழிவுகள் தேங்கி உடலுறுப்புக்களின் செயல்பாடுகளைப் பாதிக்கும்.
உள்ளுறுப்புக்கள் சரியாக செயல்படாமல் போனால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை நோய்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
உணவுகளின் மூலம் உடலில் கழிவுகளோடு நச்சுக்களும் பல வழிகளில் தேங்குகிறது. இப்படி தேங்கியிருக்கும் கழிவுகளை இலகுவாக உணவின் மூலமே அகற்ற முடியும்.
உடற்கழிவுகளை எளிதாக வெளியேற்றும் உணவுகள் (Easiest way to Remove body waste)
எலுமிச்சை
எலுமிச்சையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் விற்றமின் சி அதிகம் உள்ளது. இவை உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருட்களை அகற்றுகின்றது. மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.
மேலும் எலுமிச்சை பித்தப்பையின் செயல்பாட்டை ஊக்குவிக்கின்றது. அதோடு செரிமானம் நன்றாக நடைபெறவும் உதவும்கிண்டது.
தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடிப்பது, உடற்கழிவுகளை அன்றாடம் வெளியேற்றவழிவகுக்கும்.
உடற்கழிவுகளை எளிதாக வெளியேற்றும் இலைக்கறிவகை
செலரி
செலரி கொண்டுள்ள நீர்ப்பெருக்கி பண்புகள், உடலில் கழிவுநீர் தேக்கத்தைத் தடுக்கும். இது உடற்கழிவுகள், நச்சுக்கள் வெளியேற்றும் செயற்பாட்டை செய்கிறது.
ஆரோக்கியமான காய்கறிகளுள் ஒன்றான செலரியிலுள்ள நார்ச்சத்து, செரிமானம் மற்றும் இரத்த ஓட்டத்தை சீர் செய்யும்.
வெங்காயம்
வெங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இது நச்சுக்களை வெளியேற்றும் சிறப்பான மருந்து பொருளும் கூட. வெங்காயத்தை அன்றாட சமையலில் பயன்படுத்துவதுடன், பச்சையாக காய்கறி சாலட்டு , சம்பல்கள் போன்றவற்றில் சேர்த்து சாப்பிட்டால், அதன் முழு நன்மைகளையும் பெறலாம்.
வல்லாரை
வல்லாரைக் கீரையில் உள்ள இயற்கை சேர்மானங்கள் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் குடலை சுத்தம் செய்யும். இது சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டுள்ள சிறந்த மூலிகை ஆகும்.அன்றாட உணவில் வல்லாரை சம்பல் அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள்.
அஸ்பாரகஸ் (Asparagus)
அஸ்பாரகஸ் உடலில் இருக்கும் நச்சுக்களை சிறுநீரின் வழியே வெளியேற்றும் தன்மை உடையது. மேலும் இதில் பல அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், முழு உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.
தக்காளி
தக்காளியில் விற்றமின் சி மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது இதயத்திற்கு பாதுகாப்பு அளிப்பதோடு, ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். தக்காளியில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான லைகோபைன் உள்ளது. இது நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றும்.
பார்ஸ்லி
உடலில் உள்ள சோடியம் வெளியேற ஊக்குவிக்கும் மற்றும் கழிவு நீர் தேங்குவதைத் தடுக்கும். பார்ஸ்லி டீயை குடிக்கலாம் அல்லது உணவுகளில் ல் சிறிது பார்ஸ்லியை சேர்த்துக் கொள்ளலாம்.
கூனைப்பூ (Artichoke)
கூனைப்பூக்கள் உடலில் ம் கழிவுநீர் தேங்குவதைத் தடுக்கின்றது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்யும். இதனால் கூனைப்பூவை உண்பது கல்லீரலுக்கு மிகந்த ஆரோக்கியத்தை கொடுக்கும்.
இதில் உள்ள நார்ச்சத்து,விற்றமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அனைத்தும் செரிமானத்தை மேம்படுத்தும். மேலும் இது பித்த நீரோட்டத்தை மேம்படுத்தி, உடலை சுத்தம் செய்யும் பணியைச் செய்கிறது.
ஆரோக்கியமான உணவு முறையை (Diet) முதலில் நாம் மேற்கொள்ள வேண்டும். ஒருவரது டயட் ஆரோக்கியமானதாக இருந்தால், உடலில் சேரும் கழிவுகளின் அளவு குறையும்.
உடற்கழிவுகளை எளிதாக வெளியேற்றும் பழங்கள்
அப்பிள்
இரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்க ,அப்பிளில் உள்ள வளமான அளவிலான நார்ச்சத்து உதவுகிறது. உடலில் கொலஸ்ட்ரால் அளவை சீராக்கும். மனநலத்தை மேம்படுத்தும்.உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
ஆப்பிள் செரிமானத்தை மேம்படுத்தி, பசி உணர்வை குறைக்கின்றது. இதனால் அளவாக உணவு உண்ணப்படுவதோடு, உடல் எடை அதிகரிப்பதை குறைக்க முடியும்.
திராட்சை
திராட்சையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர உட்பொருட்கள், இரத்தத்தை சுத்தம் செய்கிறது. கொலஸ்ட்ராலை சீராக்குகிறது. திசுக்களை சுத்தம் செய்கிறது.செரிமானம் மற்றும் கல்லீரல் செயல்பாட்டை சீராக்குகின்றது. அன்றாடம் சில திராட்சைபழங்களை சாப்பிடுவது (Easiest way to remove body waste) உடற்கழிவுகளை அகற்ற எளிதான வழி.