சுகபிரசவத்திற்கான யோகாசன பயிற்சிகள் (Yoga for Easy childbirth)
கர்ப்பிணி பெண்களின் மனம் அமைதியாக இருந்தால், அது சுகப்பிரசவத்துக்கு (Easy childbirth), வழி வகுக்கும். சில யோகா பயிற்சி கர்ப்பிணிபெண்களின் சுகப்பிரசவத்துக்கு மிகவும் இன்றியமையாதது.
கர்ப்பம் தரித்த காலத்தில் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை நன்கு கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். இந்த நேரத்தில் உடற்பயிற்சி, யோகா செய்யலாமா? சுகப்பிரசவத்துக்கு வழிவகுக்கும் யோகா பயிற்சிகள் எவை? என்ற பல கேள்விகள் உள்ளது.
பெண்களிடையே உடல் இயக்கம் குறைந்து வருவதால் சுகப்பிரசவமும் குறைந்து வருகிறது. எந்திரமயமான இந்த காலக்கட்டத்தில் சுகப்பிரசவம் என்பது அரிதான ஒன்றாகவே மாறிவிட்டது.
இதுபோன்ற சூழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சுகப்பிரசவத்துக்கு வழிவகை ஏற்படுத்தும் வகையில் யோகா மற்றும் இயற்கை சிகிச்சை முறையை பலர் நாடத் தொடங்கியுள்ளனர்.
கர்ப்பிணிகளுக்கு எளிய பிரசவத்திற்கான சில யோகாசனங்கள் (Easy childbirth), தியான நுட்பங்கள் மற்றும் சுவாச பயிற்சிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
உட்கட்டாசனம், வீரபத்ர ஆசனம், பத்மாசனம், தித்திலி ஆசனம், மர்ஜரி ஆசனம், அர்த்தசக்ராசனம்,தாடாசனம், சேது பந்தாசனம், அஸ்வினி முத்திரை, தியானம் போன்ற யோகா பயிற்சிகள் கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்தை சுலபமாக்கும்.
சுகபிரசவத்திற்கான யோகாசன பயிற்சிகள் (Yoga for Easy childbirth)
தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் ஒரு முக்கிய அங்கமாக அமைகிறது. கர்ப்பம் என்பது இயற்கையான ஒரு நிகழ்வு. ஆனால், தற்போதைய காலகட்டத்தில் இவற்றைச் சிக்கலானதாகவும், அச்சப்படும் ஒன்றாகவும் மக்கள் பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
கர்ப்பம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருகிறது. ஏனெனில் அவை மன அழுத்தத்தை நீக்கி பதட்டத்தை குறைக்கிறது. மேலும் டெலிவரி நேரத்தில் கர்பிணிகளை சாந்தமாகவும், மனதிடத்துடனும் வைத்திருக்க உதவுகிறது.
யோகாவை (Easy childbirth) கர்ப்பிணித்தாய்மார்கள் சரியாக செய்து வந்தால் தாய் மற்றும் குழந்தை என இருவருக்கும் உடலும் மனமும் மென்மையாகும்.
தாய்க்கு மன அழுத்தம் இருந்தால் அது குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும். இந்த மன அழுத்தத்தை போக்குவதன் மூலமாக ஆரோக்கியமான குழந்தையை பிறக்க வைக்க முடியும். சுகப்பிரசவங்கள் ஏற்பட யோகா பயிற்சிகள் உதவுகின்றன.
ஒரு யோகாநிபுணரின் வழிகாட்டுதலுடன் யோகா பயிற்சி செய்வது மிக முக்கியம்.
கர்ப்ப காலத்தில் உடலை கடுமையாக வளைத்து செய்யப்படும் பயிற்சிகள், குதித்து செய்யும் பயிற்சிகள் அல்லது கை கால்களை நீண்ட நேரம் நீட்டி உடலுக்கு வலியை தரும் பயிற்சிகளை செய்ய கூடாது.
மேலும் கருவின் வளர்ச்சியையும் தடுக்கும். உடலில் ஏற்படும் வலிகள் அனைத்தையும் அகற்றக்கூடிய ஈஸியான போஸ்களைப் கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டும்.
சுகாசனம் (Sukhasana)
இந்த ஆசனத்தில் அமர்வது சுலபமாகவும் சுகமாகவும் இருப்பதால் சுகாசனம் என்று அழைக்கப்படுகிறது. முதலில் தண்டாசனத்தில் அமரவும் பிறகு இடது, வலது காலை ஒன்றன் பின் ஒன்றாக மடக்கவும்.
வலது பாதம் இடது தொடையின் கீழும், இடது பாதம் வலது காலின் கீழும் இருக்கட்டும். மார்பை நிமிர்த்தவும். தலை, கழுத்து, முதுகு ஒரே நேர்கோட்டில் இருக்கட்டும்.
இரு கைகளையும் நீட்டி முழங்காலின் மேல் வைத்து கைவிரல்களால் சின் முத்திரை செய்யவும்.
மார்ஜாரி ஆசனம் (Marjariasana)
தரை விரிப்பின் மேல் மண்டியிட்டு அமரவும். வளைந்து தோள்களுக்கு நேராக உள்ளங்கைகளை தரையில் பதிக்கவும். கைகளை நேராக்கவும், கை, மணிக்கட்டுகளுக்கு நேராக இருக்கும்படி அகற்றி வைக்கவும்.
உடல் முன்னோக்கியோ, பின் நோக்கியோ போகாதபடி இடுப்பிலிருந்து புஜம் வரைக்கும் உள்ள உடல் பாகம் சமமாக இருக்கட்டும். இது மார்ஜாரி ஆசனத்தின் முதல் நிலை.
மூச்சை உள்ளுக்குள் இழுத்து, தலையை மேலே உயர்த்தவும். அதே சமயம் முதுகை கீழ்நோக்கி நன்றாக வளைக்கவும். இந்த நிலையில் 35 வினாடி மூச்சை அடக்கி வைக்கவும்.
மூச்சை வெளியே விட்டு தலையை இரு கைகளுக்கு இடையில் உள் நோக்கி வளைத்து முதுகை மேலே தூக்கவும். இந்த நிலையில் மீண்டும் மூச்சை உள்ளுக்கு இழுக்காமல் 35 வினாடி அப்படியே இருக்கவும்.
இது மார்ஜாரி ஆசனத்தின் ஒரு சுற்று பயிற்சி ஆகிறது. இந்த ஆசனத்தை மேற்கண்ட முறைப்படி 5 முதல் 10 சுற்று பயிற்சி செய்யலாம்.
கர்ப்பிணிப்பெண்ணின் உடலின் தசைகள் மற்றும் தசைநார்கள் வலுப்பெற மகப்பேறுக்கு முந்தைய யோகா உதவுகிறது. இதனால் குழந்தை வளர்ந்து கருப்பையில் விரிவடையும் போது கீழ் முதுகுவலி , கால்களில் ஏற்படும் வலியைப் போக்க யோகா உதவுகிறது.
கர்ப்பக்காலத்தில் பெண்கள் யோகா செய்வதன் பயன்கள்(Benefits of Doing Yoga during Pregnancy)
யோகா செய்வதன் மூலமாக கர்ப்பிணி பெண்களுக்கு பல்வேறு வகையான பயன்கள் கிடைக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். தாய், சேய் உடலில் ஆக்சிஜன் சுழற்சி நல்ல முறையில் இருக்கும். இதனால் கருவில் இருக்கும் சிசுவின் வளர்ச்சியும் மேம்படும். பிரசவமும் வலி இல்லாமல் இயல்பாக விரைவாக நடக்கும்.
யோகா பயிற்சியினால் உடல் ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படுகிறது. பதட்ட நேரங்களில் சுரக்கும் குளுக்கோ கார்டிகாய்டுகள் சுரப்பை கட்டுப்படுத்துகிறது. மன அமைதியை ஏற்படுத்தும் மெலடோனின், செரடோனின் ஹார்மோன்கள் சுரக்கிறது.
- கர்ப்பக்காலத்தில் பெண்கள் யோகா செய்வதன் மூலம் ரத்த ஒட்டம் அதிகரிக்கிறது.
- தசைகள் மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகப்படுகிறது.
- நீர்ப்பிடிமானம் மற்றும் திரவக்கோர்வை பிரச்னைகளையும் தீர்க்கிறது.
- யோகா தொடர்ந்து செய்து வந்தால் மனக்கவலை, மன அழுத்தம் குறையும்.
- பொதுவாக கர்ப்பக்காலத்தில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயை நெருங்காமல் இருக்க யோகா பயிற்சி செய்து வர வேண்டும்.
- இது மனதை அமைதிப்படுத்தி உடலுக்கு புத்துயிர் அளிக்கிறது, மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் நீக்குகிறது. கர்ப்பிணிகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இரத்த அழுத்தத்தையும் சமப்படுத்தவும் இது உதவுகிறது.
கர்ப்பம் தரித்த 3 மாதங்களில் இருந்து குழந்தை பிரசவிக்கும் வரை இயலுமான வரை இந்த ஆசனங்களை சரியான வழிகாட்டலுடன் செய்து வருவது சுகப்பிரசவத்திற்கு மிகவும் அனுகூலமாகும்.