அன்றாட உணவில் பயன்படுத்துகின்ற தானியங்கள் அல்லது பயறு வகைகளையே முளைகட்டச் (Easy way to sprout grains) செய்து பயன்படுத்தலாம். கொண்டைக் கடலை ,பாசிப்பயறு, தட்டைப்பயறு, கம்பு,கொள்ளு,உழுந்து, சோயா ஆகிய தானியங்களிலும் புரதச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகிறது.
அவித்து தாளித்து சுண்டலாக சாப்பிடலாம். அல்லது பச்சையாகவே சலாட்டுகளில் சேர்த்து சாப்பிடலாம். இது வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய ஆரோக்கியமான உணவு.
இந்த பயறு வகைகளை முளைகட்டி பயன்படுத்துவதன் மூலம் நல்ல பலனைப் பெறலாம்.
முளை கட்டிய தானிய வகைகளில் விற்றமின் சி மற்றும் விற்றமின் ஈ சத்தும், கூடுதலான நார்ச்சத்துக்களும் செறிவாகக் காணப்படுகிறது.
மேலும் புரதம், கார்போஹைட்ரேட், பீட்டா, கரோட்டின் போன்றவை அதிக அளவில் உள்ளன.
முளைகட்டிய தானியங்களால் கிடைக்கும் நன்மைகள்
முளை கட்டிய தானியங்களில் அதிக அளவு ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டும், உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கிறது.
உடல் உறுதி, சுறுசுறுப்பு, மனத்தெளிவு, புத்திக் கூர்மை, ஞாபக சக்தி அதிகரிப்பு, போன்ற நலன்கள் கிடைக்கும். மேலும் உடல் எடை கூடாமலும் பார்த்துக் கொள்ள முடியும்.
சருமத்திற்கு பளபளப்பு தருவதோடு தலைமுடி வளர்ச்சியையும் முளைகட்டிய தானியங்கள் ஊக்குவிக்கின்றன.
கொலஸ்ட்ராலை (Cholesterol) சமநிலைப்படுத்துகின்றது.
முளைவிட்ட கொண்டைக்கடலையில் இரும்பு, புரதம், சுண்ணாம்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன. இதை சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.
சத்துக்குறைபாடு உள்ளவர்கள் தினமும் முளைகட்டிய கம்புப்பயறு சாப்பிட்டு வந்தால் உடல் உறுதி அடையும்.
உடல் சூட்டையும் குறைக்கும். வயிற்றுப்புண், மலச்சிக்கல் பிரச்சனைகளைச் சரிசெய்யும். இதயம் வலுவடையும். நரம்புகள் புத்துணர்ச்சி பெறும்.
முளைகட்டிய வெந்தயம்
சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது.ஏனெனில் , முளைகட்டிய வெந்தயத்தில் விற்றமின் சி, புரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவை இருக்கின்றன.வெந்தயத்திலுள்ள இந்த சேர்மனங்கள் கணையத்தை நன்றாக செயற்பட வைத்து, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும்.
அதோடு இது கொலஸ்ட்ராலைக் கட்டுபடுத்தும்.
உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் முளைகட்டிய வெந்தயத்தைச் சாப்பிடுவது நல்லது.
முளைகட்டிய கொள்ளுப்பருப்பை சாப்பிட்டால் விற்றமின் ஏ,பி,சி போன்ற சத்துகள் கிடைக்கும்.
மூட்டுவலியால் வருந்துபவர்கள் முளைகட்டிய கொள்ளுப்பருப்பைச் சாப்பிடுவது நல்லது.
கொலஸ்ட்ரால், தொப்பை, உடல் பருமன் போன்றவை முளைகட்டிய கொள்ளுபருப்பால் சீராக்கப்படும்.