5 வகை சுவையான முட்டைக்குழம்பு (Egg gravy)
பொதுவாக அனைவருக்கும் முட்டைக் குழம்பு பிடித்ஹ்டமானதே. அசைவம் உண்பவர்களுக்கு எதுவும் கிடைக்காத நாளில், குறைந்த பட்சம் முட்டைக் குழம்பு (Egg gravy) இருந்தாலாவது சிறிது சந்தோசமாக சாதத்தை உண்பார்கள்.
அதிகமாக முட்டையை அவித்து தான் குழம்பு வைப்பார்கள். முட்டைக்குழம்பை விதம் விதமாக செய்து சாப்பிட்டு பாருங்கள். மிகவும் அருமையாக இருக்கும்.
உடைத்து ஊற்றிய முட்டை க்குழம்பு(Egg gravy)
இட்லி, தோசை, சப்பாத்தி, மட்டுமின்றி சாதம், காய்கறி பிரியாணி, புலாவ், ஆகியவற்றுடன் சாப்பிட இந்த உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு (Egg gravy) சுவையாக இருக்கும். இதனை மிகவும் சுலபமான முறையில் விரைவாக செய்யலாம்.
முட்டையை அவித்து அல்லது ஆம்லெட் செய்து நேரம் செலவழிப்பதற்கு பதிலாக உடனடியாக முட்டையை உடைத்து ஊற்றி செய்யக்கூடிய சுலபமான குழம்பு வகை.
சுவையான உடைத்து ஊற்றிய முட்டை குழம்பை (Egg gravy) செய்வது எப்படி என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முட்டை – 4
சமையல் எண்ணெய் – 3 தேக்கரண்டி
சோம்பு/ பெருஞ்சீரகம் – ½ தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 4
பெரிய வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தளை- சிறிதளவு
தக்காளி – 2
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மல்லித் தூள் – 2 தேக்கரண்டி
கரம்மசாலா – ½ தேக்கரண்டி
தேங்காய் விழுது அரைக்க தேவையான பொருட்கள்
துருவிய தேங்காய் – 3 தேக்கரண்டி
சோம்பு – ½ தேக்கரண்டி
உடைத்து ஊற்றிய முட்டை க்குழம்பு செய்யும்முறை
ஒரு வாணலியில் 3 தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் சோம்பு, கருவேப்பிலை சிறிதளவு, 4 பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
அத்துடன் 2 பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் ஓரளவு வதங்கியதும் 1 தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்.
தக்காளி நன்றாக வதங்கி சுருண்டு வந்தவுடன், மிளகாய் தூள், மல்லித்தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும். ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
அதன் பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்துக் அரைக்கவும்.
குழம்பு நன்றாக கொதித்து பச்சை வாசனை போன பின்னர், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதே சமயத்தில் 4 முட்டைகளை எடுத்து மெதுவாக உடைத்து ஊற்றவும்.
அதன் பின்னர் மூடி வைத்து 5 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
லேசாக கிளறி விட்டு சிறிதளவு கொத்தமல்லி தூவி இறக்கவும். இப்போது சுவையான உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு தயார்.
முட்டைக்குழம்பு, பார்க்கும்போதே பசியைத்தூண்டும் அவித்தமுட்டை காரக்குழம்பு. பெரும்பாலும் முட்டையை விரும்பி உண்ணுபவர்கள் அதிகம் சிலருக்கு அவித்தமுட்டை, சிலருக்கு பொரித்த முட்டை இன்னும் சிலர் தோசை வகையில் விருப்பம் காட்டுவார்கள்.
இந்த முட்டைக்குழம்பு (Egg gravy) சுவையும் மணமும் நிறைந்த ஒன்று, அவித்தமுட்டையோடு, குழம்பு கொதிக்கும் பொது ஒரு முட்டையை உடைத்து நடுவில் ஊற்றி கொதிக்கவைத்து செய்வது இன்னும் சுவையைக் கூட்டும்.
செட்டிநாட்டு முட்டைக்குழம்பு(Egg gravy)
தேவையான பொருட்கள்
முட்டை-4
வெங்காயம்-1
பூண்டு- 7 பல்
தக்காளி-1
உப்பு-1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி
சாம்பார் மிளகாய்த்தூள்-2 1/2 தேக்கரண்டி, அல்லது மிளகாய்த்தூள்-1 மல்லித்தூள் 1 என்னும் விகிதம்
புளிக்கரைசல் -2 மேஜைக்கரண்டி
செய்முறை
1.3 முட்டை அவித்துக்கொள்ளவும்.அவித்த முட்டையின் மேல் சிறிய கீறல்கள் போடவும் இதனால் குழம்பு உள்ளே சென்று முட்டயின் சுவயைக்கூட்டும். ஒரு முட்டையை குழம்பு கொதிக்கும்போது ஊற்றவேண்டும்.
2.வெங்காயம், தக்காளி, பூண்டு இவற்றை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
3.வானலியில் எண்ணெய் காயவைத்து சோம்பு, சீரகம், வெந்தயம் தாளிக்கவும்.
4.பிறகு, வெங்காயம் பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும், வதங்கியதும் தக்காளி சிறிது உப்பு சேர்த்து, தோல் விட்டு வரும் வரை வதக்கவும்.
5.இப்போது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு மற்றும் புளிகரைச்சல் சேர்க்கவும்.
6.இரண்டு கோப்பை தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வரை கொதிக்கவிடவும்.
7.நன்கு கொதிக்கும் பொது தீயை சிம்மில் வைத்து உடைத்த முட்டயை நிதானமாக நடுவில் ஊற்றவும். 8.இரண்டு நிமிடம் இளந்தீயில் கொதித்த பின் தீயை கூட்டவும், நன்கு கொதிவரும் போது அவித்த முட்டையை சேர்த்து இன்னும் 3 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
9. சுவையான முட்டை குழம்பு தயார்.
சாதாரண முட்டை க்குழம்பு (அவித்த முட்டை க்குழம்பு)
தேவையான பொருட்கள்

கொங்கிநாட்டு முட்டை க்குழம்பு
பொரித்த முட்டைக்குழம்பு
இது சாதாராண முட்டை அவித்து குழம்பு வைப்பது போல தான். ஒரேயொரு வித்தியாசம் முட்டைகளை உடைத்து உப்பு சேர்த்து பொரித்து துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
குழம்பு கொதித்து வரும்போது, முட்டை துண்டுகளைப் போட்டு சிறிது நேரத்தில் இறக்கி விடவும்.