எட்டு வடிவ நடைபயிற்சியும் பலன்களும் (Eight – shaped walking exercises)
சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சியையும் (Eight – shaped walking exercises) அதன் பலன்களையும் இங்கு பார்ப்போம்.
ஒருவர் தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டாலே போதும்.
அவரது ஆரோக்கியம் மேம்படும்.
நடைப்பயிற்சியை சாதாரணமாக செய்வதை விட 8 வடிவத்தில் நடப்பது இன்னும் சிறப்பு.
அதி கூடிய நன்மைகளைப் பெறலாம். வேறு எந்த கடினமான பயிற்சியும் தேவையில்லை.
இதன் மூலம் பல்வேறு நோய்களிலிருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
8 வடிவ பயிற்சியும் செய்முறையும்
கீழேயுள்ள படத்தில் இருப்பது போல் 6 அடி அகலம் மற்றும் 8 முதல் 12 அடி நீளம் அளவில் தரையில் எட்டு ஒன்று வரைந்து கொள்ளவும். அதை வடக்கு தெற்கு முகமாக வரைந்து கொள்ளவும். படத்தில் உள்ளது போல் அம்பு குறியிட்டு காட்டியது போல் பாதையில் “1″ குறியில் இருந்து ஆரம்பித்து “5″ வரை சென்று மீண்டும் “1″ வர வேண்டும்.

- நடக்கும் பொழுது மிகவும் வேகமாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ இல்லாமல் ,இயல்பாக நடக்க வேண்டும்.
- நடக்கவேண்டிய நேரம் காலை அல்லது மாலை மணி 5 – 6
- வெளியே செல்லமுடியாதவர்கள் வீட்டுக்குள் நடக்கலாம்.
- நடைப்பயிற்சி முடியும் வரை மெளனமாக நடக்க வேண்டும்.
- மனதிற்குள் மந்திரம் ஜெபித்தபடி நடக்கலாம்.
- முத்திரைகள் செய்ய தெரிந்திருந்தால் பிராண முத்திரை செய்தபடி நடக்கலாம்.
- தினமும் காலையும் மாலையும் 15 – 30 நிமிடங்கள் நடப்பது மிகச்சிறப்பு.
- 8 வடிவ நடைப்பயிற்சியை (Eight – shaped walking exercises) தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்யவேண்டும்.
15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக்காற்றையும் உணரலாம். பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடரவேண்டும். இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியேறும்.
இரவு உணவுக்குப் பின்பு 45 நிமிடம் கழித்து வரைந்த எட்டு மீது 30 நிமிடம் நடக்கவும். முதலில் வடக்கு இருந்து தெற்காக 15 நிமிடம் நடக்கவும். பின்பு ,தெற்கில் இருந்து வடக்காக 15 நிமிடம் நடக்கவும்.
இதனால் , நாம் உண்ட உணவு சரியான முறையில் ஜீரணம் ஆகி, அனைத்து உறுப்புகளுக்கும் சக்தி கிடைக்கும்.
ஆழ்ந்த நிலை தூக்கம் பெற முடியும். மனம் ஒருநிலைப்படும்.
எட்டு வடிவில் நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் பலன்கள்
இந்தப் பயிற்சியைக் காலை மாலை ஒவ்வோரு மணி நேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தில் சிவந்திருப்பதை உணரலாம். 70 வயது 50 வயதாகக் குறையும். அதாவது முதுமை இளமையாகும்.
சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும். தலைவலி, மலச் சிக்கல் தீரும்.
முழுமையாகச் சுவாசிக்கப்படும் மூச்சுக் காற்றால்,பிராண வாயு உள்ளே சென்று மார்புச் சளி நீக்கப் படுகிறது. உடலினுள் சென்ற அதிகப் படியான பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாகச் சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
கண் பார்வை அதிகரிக்கும். ஆரம்ப நிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப் படுகிறது. செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது.
குடலிறக்க நோய் (Hernia ) குணமாகும். அளவான நடைப் பயிற்சியால் இரத்த அழுத்தம் குறைக்கப் படுகிறது.
இரண்டு வேளையும் செய்தால், பாத வெடிப்பு, வலி , மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன.