முழங்கால்வலி நீக்கும் ஏகபாதாசனம் (Eka padasana)
ஏக பாத ஆசனம் (Eka padasana) என்பது ஒரு காலில் நின்று கொண்டு செய்வது.கால்கள் பலம் பெறும்.
செய்வது மிக இலகு. ஏராளமான பயன்கள் கிடைக்கும்.
உங்கள் நலனிற்காக செய்ய பழகுங்கள்.
ஏக பாத ஆசனம் செய்யும் முறை
- இடது காலை தரையில் நன்றாக ஊன்றிக்கொண்டு வலது காலை மடித்து இடது முழங்கால் மேல் பாதம் படும் படியாக நின்று கொள்ள வேண்டும்.
- இரு கைகளையும் மெல்ல மெல்ல தலைக்கு மேல் தூக்கி கூப்பிய வண்ணம் வைக்கவும்.
- பார்வை நேராக இருக்க வேண்டும். மூச்சுக்காற்றை உள்ளே இழுத்தவாறு இருகைகளின் பெருவிரல்கள் ஒன்றை ஒன்று தொட்டவாறு நிலத்திற்கு இணையாக இருக்குமாறு வைக்கவும்.
- இதை செய்யும் பொழுது மூச்சை நன்றாக இழுத்து விடவும். இதே போல் 20 வினாடிகள் தொடர்ந்து செய்ய வேண்டும்.
- பிறகு வலது காலை கீழே ஊன்றி, இடது காலை மடித்து வலது கால் முழங்கால் மேல் படும்படி வைக்க வேண்டும். கைகள் மேலே கூப்பிய வண்ணம் இருக்க வேண்டும்.
- 20 வினாடிகள் கழித்து மெல்ல மெல்ல மூச்சை விட்டுக்கொண்டு காலை எடுக்கவும்.
- இந்த ஆசனத்தை இடது, வலது கால் மாற்றி வைத்து செய்யவும்.
- இரண்டு பக்கமும் சேர்த்து 3 இலிருந்து 5 முறை செய்யவும்.
ஏக பாத ஆசனம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்( Benefits of Eka padasana)
முழங்கால் வலி உள்ளவர்கள் ஏக பாத ஆசனம் (Eka padasana) செய்வதால் முழங்கால் நன்றாக வளைந்து கொடுக்கும். உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க இந்த ஆசனம் பயன்படுகிறது.
கணையத்தில் ஹார்மோன் சுரக்க இந்த ஆசனம் உதவுகிறது.
உயர் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும்.
மனவலிமை மற்றும் தன்னம்பிக்கை கூடும்.
சிறுநீரகம் நன்றாக வேலை செய்யும்.கூடுதல் தொடைச்சதை குறையும்.கால்வலி, பாதவலி, மூட்டுவலி, இடுப்பு வலிகளைக் குறைக்கும்.தோள் பட்டை, முதுகு சதைகள் அழகு பெறும். சுவாசப்பிணிகள் விலகும். முகம் பொலிவு பெறும்.