வல்வெட்டித்துறை எள்ளுப்பாகு (Ellu paku)

அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் பதார்த்தம் எள்ளுப்பாகு(Ellu paku).

எள்ளை கொண்டு செய்யப்பட்டு உணவுகளான எள்ளு உருண்டை, எள்ளு சாதம், எள்ளுமா, போன்றவற்றில் எள்ளுபாகு முதன்மையானது.

எள்ளு,உழுத்தம்மா,சீனி மட்டுமே தேவை.

பார்த்தால் கடினமாக  எப்படிச் செய்வதென்பது தெரியாமல் இருக்கும். ஆனால் மிக மிக எளிது.செய்து பாருங்கள்.

2 எள்ளுப்பாகும் பிளேன் டீயுடன் காலை உணவுக்கு போதுமானாதாக இருக்கும்.குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான உணவு.உடல் மெலிந்தோர் பருமனாக உதவும்  இந்த எள்ளுப்பாகு.

வல்வெட்டித்துறை முறையில்  ஸ்பெஷல் எள்ளுப்பாகு (Ellu paku)!

சத்தான எள்ளுப்பாகு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

எள்ளுபாகு (Ellu paku) தேவையான பொருட்கள்

எள்ளு – 500 கிராம்
சீனி – 500 கிராம்  அல்லது உங்கள் சுவைக்கு ஏற்ப
உழுத்தம்மா-  200 கிராம்

செய்முறை

கொஞ்சம் கொஞ்சமாக எள்ளை மிக்சியில்  போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

பின் உழுத்தம்மாவு சீனி, அரைத்த எள்ளு எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலந்து கொள்ளவும்.

மீண்டும் மிக்சியில் நீங்கள் கலந்த கலவையை நன்றாக கலந்து கொள்ளுமாறு அரைத்துக்கொள்ள வேண்டும்.

கொஞ்சம் கொஞ்சமாக எல்லாற்றையும் அரைத்து முடித்தபின் நன்றாக கொதித்த வெந்நீரை கலவையினுள் விட்டுக் கொள்ள வேண்டும்.

உருண்டைகளாக உருட்டி சுத்தமான போத்தல் ஒன்றில் போட்டு வைக்கவும்.

Ellu paku,sweet,helathy,valvettithurai,ellupaku,sesame sweet,annaimadi.comஅதிகநாட்கள் பழுதுபடாமல் இருக்கும்.

சூப்பரான எள்ளுப்பாகு(Ellu paku) தயார்.

எள்ளு, சுவையில் லேசான கசப்பு துவர்ப்புடன் கூடியது, ஜீரண நிலையில் இனிப்பாக மாறும் தன்மையுடன் கூடியது. உடலைக் கனக்கச் செய்யும். தோலுக்கும் பற்களுக்கும், தலைமுடிக்கும் உறுதி தரக்கூடியது.எள்ளை ஊற வைத்து, அந்த நீரை பெண்கள் தினமும்  கால் கப் குடித்து வந்தால், மாதவிடாய் சம்பந்தமான அனைத்துப் பிரச்சனைக்கும் நல்ல பலன் கிடைக்கும்.

எள்ளிலுள்ள ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு அதிக நன்மை அளிக்கக்கூடியவை. நல்ல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ள ஆரோக்கிய உணவுப்பொருள் எள் ஆகும்.எள் விதை எண்ணெயில்  (நல்லெண்ணெய் ) அதிக அளவு ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், ஃபிளவோனாய்டு பெனோலிக் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன.

இரும்புச்சத்து அதிகம் நிறைந்தது. இதனால் பெண்களுக்கும் பருவமடையும் வயதிலுள்ள பெண்பிள்ளைகளுக்கும் மிக சிறந்தது.

Leave a Reply

Your email address will not be published.