Enjoy Enjaami
‘Enjoy Enjaami’ பாடலைப் பார்த்த அல்லது கேட்ட சில நொடிகளில் உங்களுக்கு ஆப்பிரிக்கா நினைவுக்கு வந்தால், அது படப்பிடிப்பின் வடிவமைப்பால் தான். இதில் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் புவியியல் போன்ற ஒற்றுமைகள் உள்ளன.
ஒடுக்கப்பட்ட, ஏழை மற்றும் வாக்ககுரிமை அற்றவர்களின் இசைக் குரலாக ராப் இசை பிறந்தது. “ராப் என்பது கதை சொல்லும் விஷயமாக இருந்தால், என் பாட்டி தான் உலகின் சிறந்த கதை சொல்பவர்” என்று பாடலாசிரியரும் பாடகருமான அறிவு கூறுகிறார்,
அறிவு இந்த பாடல் வீடியோவிலும் இடம் பெற்றுள்ளார்.இது யூடியூபில் (Youtube) 170
மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் பிரபலமாகி உள்ளது.
தீ பாடிய ‘என்ஜாய் என்ஜாமி(Enjoy Enjaami)’, அறிவுவின் பாட்டி வள்ளியம்மாளின் கதை, அவரை ‘Enjaami’ (‘என் சாமி’, அதாவது என் கடவுள் என்று பொருள்) என்றே அழைப்பார்.
ACE இசை அமைப்பாளரும், டீயின்(Dhee) தந்தையுமாகிய சந்தோஷ் நாராயணன்(Santhosh narayanan) இந்த வீடியோவை தயாரித்துள்ளார்.அமித் கிருஷ்ணன் இயக்குநராக உள்ளா
உலகத்தரம் வாய்ந்த காட்சிகள் மற்றும் பாடல் வரிகள் ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்தும் (A.R. Rahman) பாராட்டுகளைப் பெற்றன.
வறுமையில் வாடும் மக்கள்தொகையால், இந்தியா மலிவான உழைப்புக்கான சந்தையாக இருந்தது. இலங்கை தேயிலை (Ceylon tea) , காபி மற்றும் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்காக 19 ஆம் நூற்றாண்டில் தமிழ் மக்கள் குழு இலங்கைக்கு குடிபெயர்ந்தது.
மலேசியாவுக்கு இதேபோன்ற ஏற்பட்ட இடம்பெயர்வு,பா. ரஞ்சித்தின் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ (2016) இல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் கன்னி காடுகள் நகர சாலைகளுக்கு வழிவகுத்தன, இந்த தமிழ் மக்களின் வியர்வையும் இரத்தமும் தான் அனைத்து கட்டுமானங்களையும் சாத்தியமாக்கியது.
காலப்போக்கில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
தோட்டங்களில் மட்டுமே பணிபுரிந்த அவர்கள், தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு குடிபெயர்ந்தனர்.ஆனால் அங்கேயும் வேலையில்லாமல் இருந்தனர்.
அவர்கள் இனி, தோட்ட வேலைவாய்ப்பைக் கண்டுபிடிக்க முடியாதபோது, கொத்து வேலை மற்றும் ஓவியம் போன்ற வர்த்தகங்களை மேற்கொண்டனர்.
இந்த தோட்டத் தொழிலாளர்களின் பரம்பரையைச் சேர்ந்தவர் தான் வள்ளியம்மாள்.
“இந்த பாடல் வாழ்க்கை, பூமி மற்றும் மூதாதையர்களைப் பற்றியதாகும்”
என்று கூறுகிறார் பாடகி டீ.அவர் இப்பாடலில் திரையில் ஒரு சக்திவாய்ந்த பங்களிப்பை வழங்கி இருக்கிறார்.
22 வயதான Dhee ஏற்கனவே பல வெற்றிகளைப் பெற்றுள்ளார், ‘மாரி 2’ , ‘ரவுடி பேபி’ பாடல்கள் மிகவும் பிரபலமானது.
பாடாலாசிரியர் அறிவு
ரஜினிகாந்தின் ‘காலா’ (2018) மற்றும் விஜய்யின் ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் பாடல்களை அறிவு எழுதியுள்ளார். சென்னையைச் சேர்ந்த தமிழ் இசைக்குழுவான ‘The Casteless Collective’ இன் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை கொள்கிறார்.
இவரது பாடல்வரிகள் அரசியல் மற்றும் புரட்சித்தனமானவை.
இறப்பின் சமத்துவத்தைக் குறிக்கும் ஒப்பாரியை, அசல் இந்திய ஹிப்-ஹாப் என்று நம்புகிறார் அறிவு.
இதனால் ‘ஒப்பாரி’ (இறப்பின் போது பாடப்படும் பாடல்) வடிவமைப்பை பாடலில் பயன்படுத்துகிறார்.
சுதந்திரமான இசை சுதந்திரத்தின் சின்னம். வெவ்வேறு சமூக அடுக்குகளைச் சேர்ந்த இரண்டு கலைஞர்களான டீ (Dhee) மற்றும் அறிவு (Arivu) ஆகியோரின் வருகை “இந்திய அடிப்படைவாதத்தை” வென்றெடுப்பதற்கான சிறந்த வழியாகும்.
கலை நம்மை உணர்வுள்ளவர்களாக்கும், தடைகளை உடைக்கும், மக்களை ஒன்றிணைக்கும்.‘Enjoy Enjaami’ வெவ்வேறு மூலைகளைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைத்துள்ளது.
கலை மூலம் பொழுதுபோக்கு முக்கியமானது, ஆனால் கலையை வெறும் பொழுதுபோக்குக்கு மட்டுப்படுத்துவது அதன் ஆற்றலை குறைத்து மதிப்பீடு செய்வதாகி விடும்!