கை கால்களில் விறைப்பு (Erection of arms and legs)
உடலின் சில குறிப்பிட்ட பகுதிகளில் விறைப்பது (Erection) போல அல்லது உணர்விழந்தது போன்ற உணர்வு ஏற்படுவது இதனை எல்லோரும் அனுபவித்து இருப்போம்.
கையை ஒரே நிலையில் வைத்து தூங்கிக் காலை விழித்து எழுந்தவுடன் அவ்விடம் விறைத்தது போல உணருவோம். இது நீண்ட நேரம் அழுத்தப்படதால் ஏற்பட்டதாகும். தானாகவே சிறிது நேரத்தில் குணமாகும்.
ஆனால் இது கைகளில் மட்டுமல்லாது கால்களில், விரல்களில், மேல்கைகளில் ,தொடைப்புறத்தில், தோள் பட்டையில் என உடலின் எந்தப் பகுதியிலும் ஏற்படலாம்.
கை ,கால்களில் விறைப்பு ஏற்படுவதற்கு விற்றமின் பி12 (Vitamin B12) குறைபாடு ஒரு முக்கிய காரணமாகும். இது முக்கியமாக மீன், இறைச்சி, ஈரல், சிறுநீரகம், பால் போன்றவற்றில் காணப்படுகிறது.
இதனால் தாவர உணவு மட்டும் உண்பவர்களுக்கு விறைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும். விறைப்பு மட்டுமின்றி, இரத்த சோகை, வாயில் புண்கள், கடைவாய்ப் புண், நாக்கு அவிச்சல் போன்ற பிரச்சனைகளையும் விற்றமின் 12 குறைபாடு ஏற்படுத்தும்.
கை,கால்களில் விறைப்பு ஏற்பட காரணங்கள்(Causes of erections)
ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும் போது, அதுவும் காலுக்கு மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கும் போது இரத்த ஓட்டம் தடைப்பட்டு கால் மரப்பதற்கான (Erection) சாத்தியம் அதிகம். ஆனால் இது தற்காலிகமானது. சிறிது நேரத்தில் குணமாகிவிடும்.
முள்ளந்தண்டு எலும்புகள் தேய்ந்து, முண்நாணிலிருந்து வெளியே வரும் நரம்புகளை அழுத்துவதாலும் ஏற்படும். கழுத்து எலும்புகளில் ஏற்படும் தேய்வானது கைகளில் எரிவு, மரத்தல் (Erection) போன்ற அறிகுறிகளைக் கொண்டு வரும். அதேபோல நாரிப்பகுதி முள்ளந் தண்டு பாதிப்புறுவதால் ஏற்படும் வலி விறைப்பு போன்றவை கால்களில் வெளிப்படும்.

சிலரில் பெருவிரல் சுட்டு விரல், நடுவிரல் அடங்கலான கைகளின் வெளிப்புறத்தில் வலி, விறைப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும்.
இதை Carpal tunnel syndrome என்பார்கள். இது மணிக்கட்டின் உட்புறம் ஊடாக உள்ளங்கை மற்றும் விரல்களுக்கு வரும் நரம்பு அழுத்தப்படுவதால் வருவதாகும்.
பொதுவாக மூட்டுவாதம், தைராய்டு நோய்கள். அதீத எடை போன்றவை இருப்பவர்களில் அதிகமாக ஏற்படும்.
நீரிழிவுநோயாளிகளுக்கு விறைப்பினால் ஏற்படும் பாதிப்புகள்
‘எங்கை அப்பா ஒரு செருப்பை விட்டிட்டு வந்தனீங்கள்’ மனைவி நக்கலாகக் கேட்டதும் குனிந்து பார்த்தார் ஆம் ஒரு காலில் செருப்பைக் காணவில்லை.
ஒரு காலிலிருந்த செருப்பு கழன்று விடுபட்டதை அறியாமல் நடந்து வந்திருக்கிறார். இதற்குக் காரணம் காலின் உணர்திறன் நரம்புகள் பாதிப்புற்றது தான்.
கால்கள் மெத்தைபோல இருப்பதாக இவர்கள் சொல்லுவார்கள். தார் ரோட்டில் கால் வைத்தாலும் சுடாதளவு விறைப்பு உள்ளவர்கள் காலில் பெரும் புண்களோடு வருவார்கள்.
கோயிலிலும் கடற்கரையில் வெறும் காலுடன் நடக்கும் போது முள்ளு ஆணி கிளாஸ் துண்டு ஏதாவது குத்தி ஏறியிருக்கும். உள்ளுக்குள் கிடந்து சீழ்பிடித்து மனைந்த பின் தான் அவர்களுக்கே தெரியவரும்.
கால்கள் மரத்துப்போவது மாத்திரமன்றி சிலருக்கு எரிவு உளைவு போன்ற வேதனைகளும் இருக்கலாம். விற்றமின் குறைபாடு, தொழுநோய் அடங்கலான பல்வேறு நோய்கள் காரணமாக இருக்கலாம். ஆனால் நாம் அதிகமாகக் காண்பது நீரிழிவு நோயாளரில் தான்.
நீரிழிவாளர்களில் கால்களில் விறைப்பு (Erection) வந்துவிட்டால் முற்று முழுதாக மாற்றுவது கஷ்டம். ஆரம்ப காலம் என அலட்சியப்படுத்தாது நீரிழிவை கட் டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதே இது வராமல் தடுக்கக் கூடிய ஒரே வழியாகும்.
பக்கவாதத்தின் போது அங்கங்கள் செயலிழப்பது மட்டுமின்றி எரிவு, விறைப்பு போன்ற உணர்திறன் பாதிப்புகளும் ஏற்படுவதுண்டு. அதேபோல வலிப்பு நோய் வருபவர்களிலும் நரம்புகள் பாதிப்பு ஏற்பட்டு விறைப்பு அறிகுறிகள் ஏற்படுவதுண்டு.
மது அருந்துதல்,புகைத்தலும் கூட விறைப்பு ஏற்பட காரணமாகின்றன.
எமது உடலில் கல்சியம், பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களில் ஏற்படும் குறைபாடுகளும் மாற்றங்களும் அத்தகைய அறிகுறிகளுக்கு காரணமாகலாம்.
விறைப்பு, உணர்வு குறைவதால் ஏற்படும் பாதிப்புகள்
விறைப்பும் உணர்வு குறைதலும் பல பிரச்சனைகளை பாதிப்புற்றவருக்கு ஏற்படுத்தும்.
பொருட்களை இறுக்கமாக பற்ற முடியாமை
கால்களில் ஆணி முள்ளு ஆகிய குத்துவதால் ஏற்படும் ஆபத்துகள்
உணர் திறன் குறைவாக இருப்பதால் நடக்கும் போது அடி எடுத்து வைப்பது திடமாக இருக்காது. இதனால் விழுவதற்கும் காயம் படுவதற்கான சாத்தியங்களும் அதிகமாகும்.
வீதி விபத்துகளில் மாட்டுப்படும் அபாயமும் உண்டு.
பெரும்பாலான விறைப்புஅல்லது மரத்துப்போவது என்பதுபடிப்படியாக வருபவை. அவற்றை நீங்களாகவே அவதானித்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
ஆயினும்
- மலம் சலம் வெளியேறுவதை உங்களால் திடீரென கட்டுப்படுத்த முடியாதுவிட்டால்.
- விழுந்து அல்லது தலை கழுத்து அல்லது முள்ளந்தண்டில் அடிபடுவதைத் தொடர்ந்து விறைப்பு எரிவு போன்ற அறிகுறிகள் தோன்றினால்
- அங்கங்களை திடீரென ஆட்டி அசைக்க முடியாது போனால்
- திடீரென மயக்கம், நினைவுக் குழப்பம், மாறாட்டம் போன்றவை ஏற்பட்டால்
- திடீரென ஏற்படும் பார்வைக் குறைபாடு, கொன்னித்தல், நடைத்தடுமாற்றம் போன்றவை இருந்தால்
இந்த அறிகுறிகள் இருந்தால் காலம் தாழ்த்தாது உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.