பகவத்கீதையின் சாரம் (Essence of the Bhagavad Gita)

Essence of the Bhagavad Gita,annaimadi.com,Bhagavad gita,essence of life,true life

பகவத்கீதை வாழ்விற்கு வேண்டிய பல முக்கியமான கருத்துக்களை (Essence of the Bhagavad Gita) சொல்கின்றது. அவற்றை அறிந்து உணர்ந்து நடந்தாலே போதும் பல விதமான குடும்ப உறவுகளுக்கிடையேயான பிரச்சனைகளை தவிர்த்து நிம்மதியோடு வாழலாம்.

கீதையின் சிறப்பான சாரம் (Essence of the Bhagavad Gita) இதோ உங்களுக்காக.

தனிமனிதனை பற்றியது

தேவைக்கு செலவிடு.

அனுபவிக்க தகுந்தன அனுபவி.

அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.

உயிர் உள்ளவரை ஆரோக்கியமாக இரு.

உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.

வாழ்வைக் கண்டு களி.

ரசனையோடு வாழ்.

 Essence of the Bhagavad Gita,annaimadi.com,Bhagavad gita,essence of life,true life

பிள்ளைகளைப் பற்றியது

உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.அவ்வப்போது பரிசுகள் அளி.

அவர்களிடம் அதிகம் எதிர் பாராதே.அடிமையாகவும் ஆகாதே.

பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட பாசமாய் இருந்தாலும் ,பணிகாரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம். புரிந்துகொள்.

அதைப்போல பெற்றோரை மதிக்காத குழந்தைகள் ,உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை  போடலாம்.

உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டும் என வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.

அவர்கள் உரிமையை மட்டும் அறிவர். கடமை மற்றும் அன்பைஅறியார்.

இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு .ஆனால் நிலைமையை அறிந்து விட்டு,அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு பின் கை ஏந்தாதே.

எல்லாமே, நான் இறந்த பின் தான் என உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என காத்திருப்பர்.

எனவே கொடுக்க நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்துதவிடு.மேலும் தரவேண்டியதை பிறகு கொடு.

Essence of the Bhagavad Gita,annaimadi.com,Bhagavad gita,essence of life,true life

பொதுவானவை

அவரவர் வாழ்வு அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.

நல்ல உணவு உண்டு, நடைப்பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறைபக்தி கொண்டு, நண்பர்கள்,குடும்பத்தினரோடு கலந்துறவாடி மன நிறைவோடு வாழ்.

வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே.

பிறரிடல் உள்ள நற்குணங்களைக் கண்டு பாராட்டு. 

நண்பர்களுடன் அளாவளாவு.

மற்றவர் குடும்பநிலை கண்டு பொறாமையால் வதங்காதே.

இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள் சுலபமாக ஓடிவிடும்.

மடிந்தபின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.

உயிர் பிரியத் தான், வாழ்வு ஒரு நாள் பிரியும். சுற்றம் செல்வம், நட்பு எல்லாமே பிரிந்து விடும்.

வாழ்க்கை வாழ்வதற்கே.

இனி, அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.

உயிர் போகும் போது எதுவும் கொண்டு செல்லபோவதுமில்லை.ஆகவே அதிகமான சிக்கனம் தேவையில்லை.

Essence of the Bhagavad Gita,annaimadi.com,Bhagavad gita,essence of life,true life

தவிர்க்க வேண்டியது

மாற்ற முடியாததை மாற்ற முயலாதே.

மடையன், சுயநலக்காரன் ,ஏமாற்றுக்காரன், ஓய்வாக இருப்பவன் இந்த  நான்கு நபர்களைப் புறக்கணி. 

பொய்யன், துரோகி, பொறாமைக்காரன், மமதைபிடித்தவன் இந்த நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே.

அநாதை, ஏழை ,முதியவர்,நோயாளி இந்த நான்கு நபர்களுடன் கடினனமாக  நடக்காதே.

மனைவி, பிள்ளைகள், குடும்பம், சேவகன் இந்த நான்கு நபர்களுக்கு உனது கொடையைத்  தடுக்காதே.

செய்ய வேண்டியது

இயன்றவரை பிறருக்கு உதவி செய்.

பொறுமை, சாந்தகுணம், அறிவு, அன்பு இந்த நான்கு விஷயங்களை ஆபரணமாக அணி .

தந்தை, தாய், சகோதரன், சகோதரி இந்த நான்கு விஷயங்களை வெறுக்காதே.

உணவு, தூக்கம், சோம்பல், பேச்சு இந்த நான்கு விஷயங்களை குறை.

துக்கம், பொறாமை , இயலாமை, கஞ்சத்தனம் இந்த நான்கு விஷயங்களைத தூக்கிப்போடு.

மனத்தூய்மை உள்ளவன்,வாக்கை நிறைவேற்றுபவன், கண்ணியமானவன், உண்மையானவன் இந்த நான்கு நபர்களுடன்  சேர்ந்திரு.

ஜீவகாருன்யத்தைக் கடைப்பிடி.

தியானம், நூல் வாசிப்பு , உடற்பயிற்சி சேவை செய்தல், இந்த நான்கு விஷயங்களை செய்.

Leave a Reply

Your email address will not be published.