இரசாயனம் இல்லாத ஃபேஸ்வோஸ் தயாரிப்பது எப்படி?(Chemical free facewash)

பலவித இரசாயன பொருட்களை கலக்கப்பட்டு விதவிதமான ஃபேஸ்வோஸ்கள் (Facewash) மார்கட்டில் கிடைக்கின்றன. அவை சருமத்திற்கு உகந்ததா என்பதை  கரத்தில் கொள்ள வேண்டும்.

ஏனெனில் அவை பக்க விளைவுகளைய தரலாம். முக அழகை கெடுத்துவிடும். பாதுகாப்பான எந்தவித பாதிப்பும் தராத இலகுவாக வீட்டில் செய்யக்கூடிய ஃபேஸ்வோஸ் (Facewash) தயாரிப்பு முறைகள் சிலவற்றை பார்ப்போம்.

சருமத்தின் தன்மையைப் பொறுத்து, இவற்றை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வீட்டிலேயே செய்து பயன் பெறுவோம்.

உலர்ந்த சருமத்திற்கு (Facewash for dryskin)

தேங்காய் எண்ணெய்

 1. ஒரு சிறிய கிண்ணத்தில் எண்ணெயை லேசாக சூடாக்கவும்.
 2. ஒரு மெல்லிய காட்டன் துணியை எண்ணெயில் ஊறவைத்து மெதுவாக உங்கள் முகம் முழுவதும் துடைக்கவும்.
 3. பின்னர் ​ விரல்களைப் பயன்படுத்தி, சூடான எண்ணெயுடன் உங்கள் முகத்தை சுமார் 2-3 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.
 4. அதன் பின் முகத்தை லேசாக ஒரு இளம் சூடான டவலால்  துடைக்கவும்.ஒருமுட்டை 

தேன் மற்றும் முட்டையின் வெள்ளைகரு

 1. ஒரு முட்டை வெள்ளைக் கருவுடன் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
 2. அக்கலவையை முகத்தில் தடவி உலர விடவும்.
 3. அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவி உலர விடவும்.

ஓட்ஸ், தேன் மற்றும் எலுமிச்சை

 1. ஒரு பாத்திரத்தில், ஒரு எலுமிச்சையின் சாற்றை பிழிந்து, இரண்டு தேக்கரண்டி தேன் மற்றும் இரண்டு தேக்கரண்டி ஓட்ஸ் சேர்க்கவும்.
 2. அவற்றை ஒரு பிளெண்டரில் கலந்து மென்மையான பேஸ்ட்டாக்கவும்.
 3. கலவையை உங்கள் முகத்தில் தடவி உலர விடவும்.
 4. பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.

வழுவழுப்பான சருமத்திற (Facewash for Oilskin)அன்னைமடி,இரசாயன பொருட்கள் இல்லாத ஃபேஸ்வொஸ் தயாரிப்பது எப்படி?,Chemical free facewash, உலர்ந்த சருமத்திற்கு ,Facewash for dryskin,தேன் மற்றும் முட்டையின் வெள்ளைகரு,annaimadi.com, வழுவழுப்பான சருமத்திற ,Facewash for Oilskin,வறண்ட சருமம்,எண்ணெய்தன்மையான சருமம்,கூட்டு சருமத்திற்கு,Facewash for Normal skin, natural facewash,இயற்கை பேஸ்வாஷ்,ரோஸ்வாட்டர் அழகு குறிப்பு,rose water,aloe vera,கற்றாளை அழகு குறிப்பு, 

டீட்ரீ எண்ணெய் மற்றும் கற்றாழை

 1. ஒரு கற்றாழை செடியின் இலையை பிரித்து ஜெல்லை எடுக்கவும்.
 2.  ஒரு பிளெண்டரில், கற்றாழை துண்டுகளுடன் 10 சொட்டு தேயிலை மர எண்ணெயுடன் சேர்த்து மென்மையான பேஸ்ட் தயாரிக்கவும்.
 3. முகத்தில் பேஸ்டை 3-4 நிமிடங்களுக்கு தடவவும்.
 4. பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி உலர விடவும்.

பேக்கிங் சோடா மற்றும் ரோஸ் வாட்டர்

 1. 2: 1 விகிதத்தில் பேக்கிங் சோடா மற்றும் ரோஸ் வாட்டரைப் பயன்படுத்தவும். நீங்கள் இரண்டு தேக்கரண்டி பேக்கிங் சோடாவைப் பயன்படுத்துவதானால், அதை ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டருடன் கலக்கவும்.
 2. மென்மையான பேஸ்ட் கிடைக்கும் வரை நன்றாக கலக்கவும்.
 3. பேஸ்டை உங்கள் முகத்தில் தடவி ஒரிரு  நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும்.
 4. பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

  அன்னைமடி,இரசாயன பொருட்கள் இல்லாத ஃபேஸ்வொஸ் தயாரிப்பது எப்படி?,Chemical free facewash, உலர்ந்த சருமத்திற்கு ,Facewash for dryskin,தேன் மற்றும் முட்டையின் வெள்ளைகரு,annaimadi.com, வழுவழுப்பான சருமத்திற ,Facewash for Oilskin,வறண்ட சருமம்,எண்ணெய்தன்மையான சருமம்,கூட்டு சருமத்திற்கு,Facewash for Normal skin, natural facewash,இயற்கை பேஸ்வாஷ்,ரோஸ்வாட்டர் அழகு குறிப்பு,rose water,aloe vera,கற்றாளை அழகு குறிப்பு,

கூட்டு சருமத்திற்கு (Facewash for Normal skin)

ஆப்பிள் சாறு வினிகர்

 1.  ஒரு பாத்திரத்தில் ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை போட்டு அதில் சிறிது தேன் மற்றும் இரண்டு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்க்கவும்.
 2. மென்மையான பேஸ்ட் கிடைக்கும் வரை நன்றாக கலக்கவும்.
 3.  கலவையை உங்கள் முகத்தில் தடவி 3-4 நிமிடங்கள் காயவிடவும்.
 4. பின்னர் இளஞ்சூடான நீரால் கழுவவும்.

தேன் மற்றும் எலுமிச்சை

 1. ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி தேன் மற்றும் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சைசாறு கலக்கவும்.
 2. மென்மையான கலவையைப் பெறும் வரை அவற்றை ஒன்றாக கலக்கவும்.
 3. கலவையை உங்கள் முகத்தில் தடவி உலர விடவும்.
 4. அதன் பின் முகத்தை இளஞ்சூடான தண்ணீரில் கழுவவும்.

பால் மற்றும் கொண்டைக்கடலை மாவு

 1. ஒரு கிண்ணத்தில் 2: 1 விகிதத்தில் கொண்டைக்கடலை மா மற்றும் பால் கலக்கவும்.
 2. பொருட்களை ஒன்றாக கலந்து, கலவையை முகத்தில் தடவி உலர விடவும்.
 3. இளஞ்சூட்டு நீரால் முகத்தைக் கழுவி காயவிடவும்.

Leave a Reply

Your email address will not be published.