முகத்தில் உள்ள முடியை அகற்ற (To remove facial hair)
பெண்களின் முகத்தில் முடிகள் (facial hair) இருந்தால் அது அழகைக் கெடுக்கும்.சில பெண்களுக்கு முகத்தில் ரோமங்களின் வளர்ச்சி அதிகம் இருக்கும். இதற்கு ஹார்மோன்களே முக்கிய காரணம்.
இந்த ஹார்மோன்களால் சில பெண்களுக்கு மீசையும், தாடியும் தெரிவதோடு, சிலருக்கு நெற்றி,கன்னங்களில் ரோமம் அதிகளவில் இருக்கும்.
இந்த முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க (facial hair) பெண்கள் அழகு நிலையங்களுக்குச் சென்று, அந்த ரோமங்களை நீக்குவார்கள்.
இருப்பினும் நீங்கள் அழகு நிலையத்திற்கு சென்று சருமத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நீக்கினாலும் திரும்பவும் அதே இடத்தில் முடி வளரும்.
முகத்தில் உள்ள முடியின் (facial hair) வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் நீக்கவும் செயற்கை அழகு பொருள்கள் பயன்படலாம். ஆனால் இவை அனைத்துமே தற்காலிகமானவை.
முடியின் வளர்ச்சியை நிரந்தரமாக கட்டுப்படுத்த வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டே பராமரிப்பது மட்டுமே இதற்கு சிறந்த வழி.
இயற்கையான முறையில் முகத்தில் இருக்கும் முடிகளை(facial hair) நீக்கும் போது அவை சருமத்தில் எந்த விதமான பாதிப்பையும் பக்கவிளைவையும் உண்டாக்காது என்பதால் இயற்கை முறையைப் பின்பற்றுவதே நல்லது.
இயற்கை முறையில் இந்த முடிகளை எப்படி நிரந்தரமாக அகற்றுவது என பார்ப்போம்.
முகத்தில் உள்ள ரோமங்கள் நீக்கும் இயற்கை முறைகள் (To remove facial hair)
முட்டை மாஸ்க்
ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு அடித்துக் கொண்டு, பின் அதனை முகத்தில் தடவி 15-20 நிமிடம் நன்கு உலர வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, பருக்கள் வருவது குறைந்து, சருமத்தின் நிறமும் அதிகரிக்கும்.
மஞ்சள் மாஸ்க்
நம் முன்னோர்கள் பெண் குழந்தைகள் என்றாலே மஞ்சள் பூசி குளிக்க வேண்டும் என்று சொல்வார்கள். மஞ்சள் சரும அழகையும் பாதுகாக்கும்.
தேவையற்ற இடங்களில் முடி வளரும் பிரச்சனைகளையும் உண்டாக்காது. வரும் முன் காப்போம் என்பதற்கேற்ப எப்போதுமே முனெச்சரிக்கையுடன் மஞ்சள் முகத்தோடு வலம் வருவார்கள்.
கஸ்தூரி மஞ்சளுடன் பச்சைப் பயறு சேர்த்து நைசாக அரைத்து தூளை, தினமும் குளிக்கும் போதும், முகம் கழுவும் போதும் முகத்தில் பூசி,சிறிது நேரம் கழித்து தேய்த்துக் குளிக்கவேண்டும்.
உடனடியாக முடி நீங்கி விடாது. தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் மட்டுமே நாளடைவில் போகும்.
ஆனால், புதிதாக முடிகளை வளரவிடாது. தினந்தோறும் விடாமல் கஸ்தூரி மஞ்சள்தூளை முகத்தில் பூசிக் குளித்து வந்தால், நல்ல வழுவழுப்பான முக அழகைப் பெறலாம் அத்துடன் முகத்தில் உள்ள முடிகளும் நீங்கி முடி மீண்டும் வளராமல் மஞ்சள் தடுக்கும்.
மஞ்சள் பொடியை தண்ணீரில் கரைத்து, அதிக முடி இருக்கும் முக பகுதியில் தடவி, சில நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். அது காய்ந்த பிறகு, வெதுவெதுப்பான நீரில் நனைத்த துணியைப் பயன்படுத்தி மெதுவாக முகத்தை துடைக்கவும்.நாளடைவில் முடிகள் அகன்றுவிடும்.
கோதுமை மாவும் பப்பாளிப்பழமும்
கோதுமை மாவினை கொண்டு முகத்தில் இருக்கும் முடியினை அகற்றுவது பழங்காலத்திலிருந்து பின்பற்றி வரும் முறையாகும்.
சிறிதளவு கோதுமை மாவினை எடுத்து முடி வளர்ச்சிக்கு எதிர்த்திசையில் ரப் செய்வதினால் மெது மெதுவாக முடி உதிர்தலை ஊக்குவித்து முடி வளர்ச்சியைத் தடுக்கும்.
இயற்கையாக முடியை அகற்றும் என்சைம்கள் உள்ளன. எனவே பப்பாளியைத் தவறாமல் உங்கள் சருமத்தில் முடி உள்ள இடத்தில் உபயோகிப்பதால் முடிகள் அகன்று விடும். ஆனால் இதற்கு நாட்கள் ஆனாலும் வெகு நாட்களுக்கு முடி வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்.
எலுமிச்சை பழம்
முகத்தில் இருக்கும் முடியை நீக்க ரேஸர் பயன்படுத்தாமல் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைசாறு, சர்க்கரையை சேர்த்து நன்றாக குழைத்து முடி இருக்கும் இடங்களில் ஸ்க்ரப் போல் தேய்க்கவும்.
சர்க்கரைக்கு மாற்றாக கல் உப்பை பொடித்தும் சேர்க்கலாம்.
ஆனால் சமயத்தில் வேகமாக ஸ்க்ரப் செய்யும் போது சருமத்தில் பாதிப்பை உண்டாக்கி விடவும் வாய்ப்புண்டு என்பதால் ஸ்க்ரப் செய்யும் போது சர்க்கரையை மட்டுமே பயன்படுத்துங்கள்.
10 நிமிடங்களுக்கு ஒருமுறை அரைமணி நேர இடைவெளியில் மீண்டும் மீண்டும் தேய்த்து மேலும் அரைமணி நேரம் விட்டு காட்டனை பன்னீரில் நனைத்து முடியின் மீது வைத்து அழுத்தி துடைத்து எடுத்தால் முடிகள் நீங்கும்.
முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க வேறு முறைகள் (facial hair)
மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் பால்
இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.
பின்பு முகத்தை நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர முகம் பளபளப்பாவதுடன், முகத்தில் இருக்கும் முடி உதிர்ந்து விடும்.
முட்டை வெள்ளைக்கரு 1 , சர்க்கரை , சோளமா
இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.
எனவே இயற்கை முறையில் முகத்தில் உள்ள ரோமங்களை மிகவும் எளிதாக நீக்க இந்த குறிப்புகளை செய்து பாருங்கள்.
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
இயற்கை அழகே அழகு!!