முகபொலிவை அள்ளி தரும் முகயோகா(Facial yoga)
முகயோகா (Facial yoga)எந்தவித செலவும் பக்க விளைவுகள் எதுவுமின்றி நல்ல பலனைத் தரும்.இளமையுடன் இருக்க பலரும் பலவிதமாக முயற்சித்துக் கொண்டிருப்பவர்கள் இதனை செய்து வரலாம். ஏனெனில் எப்போதும் நம் முகத்தை இளமை தோற்றத்துடன் வைத்திருக்க முக யோகா(Facial yoga) உதவுகிறது.
முகத்திற்கான யோகா செய்வதால் முகத்திலுள்ள தசைகள் தொய்வடையாமல் உறுதியாகும். இது முகத்திலுள்ள தசைகள் சீராக இயங்கவும் உதவுகிறது. இளமைத் தோற்றம் நல்லதொரு தன்னம்பிக்கையை தரும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
தாடை,வாய்ப்பகுதி,கண்களிற்கு அருகேயுள்ள தேவையற்ற தசைகள் குறைந்து நல்ல தோற்றம் கிடைக்கும்.
முக யோகா (Facial yoga) முக பொலிவை கூட்டும் ,சுருக்கங்களை நீக்கி இளமையை காக்கும்.
வயதாக தோல் சுருங்குவது இயலவே.ஆனால் தற்போது மனஅழுத்தம் காரணமாக இளவயதிலேயே சிலருக்கு வயோதிக தோற்றம் வந்து விடுகிறது. தொடந்து செய்து வரும் போது , முக யோகா (Facial yoga) சிறந்த மாற்றத்தை தரும்.
நாம் குழந்தைத்தனமாக மாற வேண்டும். அப்போது தான் மனமும் உடலும் ஆனந்தமாக அமைதியாக இருக்கும்.ஆனந்தமாக இருந்தாலே அழகும் ஆரோக்கியமும் தன்னாலே வந்து விடும்.
முக யோகா (Facial yoga) செய்யும் முறைகள்
வஜ்ராசனம்,சுகாசனம்,பத்மாசனம்,அர்த்தபத்மாசனம் என ஏதாவது ஒரு வசதியான ஆசனத்தில் அமர்ந்து கொள்ளவும்.
யோகாசனம் செய்யும் போது வயிறு காலியாக இருக்க வேண்டும் என்பது இதற்கு அவசியம் இல்லை.காலை ,மதியம் ,மாலை என எப்போதும் செய்யலாம். கீழே அமர முடியாதவர்கள் இருக்கைகளில் அமர்ந்தபடியும் செய்யலாம்.
1.குழந்தைகள் அழும் போது முகத்தை சுருக்குவது போல செய்து சிறிது நேரம் அப்படியே இருக்க வேண்டும்.
2.பலூன் போஸ் (Ballon Pose)
வாயில் முடிந்தவரை காற்றை நிரப்பவும். கண்களை முடிந்த வரை விரித்து வைக்கவும். ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் வாயின் மேல் மூக்கை தொடுமாறு வைக்கவும்.தாடை எலும்புகளும் வலுவடையும்.
நம் விரல்களின் நுனியில் ஐம்பூதங்களின் சக்தி உள்ளது. ஆள்காட்டி ,நடுவிரல்கள் மூளை ,நரம்பு மண்டலத்துடன் தொடர்பு கொண்டவை.
3.மீன் போஸ் (Fish mouth pose)
கன்னங்கள் இரண்டையும் உள்நோக்கி இழுத்து மீனின் வாய்போன்ற வடிவத்தை உருவாக்கவும். குழந்தை பருவத்தில், பலர் இதனை செய்திருப்பார்கள்.
இது முகத்தில் உள்ள கூடுதல் கொழுப்பை நீக்குவது மட்டுமின்றி, தசைகளை இறுக்கமாக்கி, சுருக்கங்களையும் நீக்கலாம்.
4.வி போஸ் (V pose)
இருகைகளின் ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் இரு புருவங்களின் தொடக்கத்திலும் முடிவிலும் வைத்து சிறு அழுத்தம் கொடுத்தல் .இதனால் கண்பார்வை மேம்படும். ஒற்றைத்தலைவலியால் அல்லல்படுபவர்களுக்கு இது நல்ல பலனைத்தரும்.
5. இருகைகளின் பெருவிரலைத் தவிர ஏனைய 4 விரல்களையும் நெற்றியின் சிறு அழுத்தம் கொடுத்தபடி நடுவில் 10 விநாடிகள் வைத்திருக்கவும்.
பின் அப்படியே விரல்களை மெதுவாக இழுத்து கொண்டு போய் 4 விரல்களையும் சேர்த்து புருவத்தின் முடிவில் 10 விநாடிகள் வைத்திருக்கவும்.
6.கழுத்தை பின் புறம் சிறிது சரித்து இருகைகளின் விரல்களால் முகம் முழுவதும் மெதுவாக தட்டவும்.
7.உதட்டை இறுக்கமாக மூடிக் கொள்ளவும்.முகத்தை மேல் நோக்கி சாய்த்து 45 பாகை முத்தமிடுவது போல் உதட்டை குவித்து வைக்கவும்.10 விநாடிகள் இருக்கலாம். இப்படி 5 முறை செய்யவும்.
இதனை தொடர்ந்து செய்ய முகச் சுருக்கம் நீங்கி விடும்.
பொலிவிழந்த முகத்தை பளிச்சென்று மாற்ற முகயோகா கைகொடுக்கும் என்கின்றனர் வல்லுநர்கள். அழகுக்கும் யோகாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை யோகா செய்து வருபவர்களின் முகத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
தைராய்டு பிரச்சினை உள்ளவர்களின் முகம் எப்போதும் சோகமாக காணப்படும் பொலிவற்ற அவர்களின் முகத்தை பளபளப்பாக மாற்ற விரல் யோகா சிகிச்சை மிகவும் பயன்தரும்.