குடும்ப ஆரோக்கியத்தின் ரகசியம் (The secret of your family health)

 உயிர வாழ உணவு தேவை. உணவு செய்ய சமையலறை. சமையலறையில் இருந்து தான் எல்லாமே ஆரம்பமாகிறது. அதாவது எல்லோரது ஆரோக்கியமும் வீட்டில் சமைப்பவர் (Family health) கையில் தான்.

ஆரோக்கியம் இருந்தால் சந்தோசம் செல்வம் எல்லாமே தானாகவே வந்துவிடும். அதனால் சமைப்பதை விரும்பி செய்ய வேண்டும், அன்போடு செய்தால் சாப்பாட்டுக்கு சுவை தானாகவே வந்துவிடும்.

சுவையான உணவு எல்லோரையும் சந்தோசப்படுத்தும்.

உங்களுக்கு பிடித்த ,நல்ல பாடல்களை கேட்டுக்கொண்டு சமைப்பது, சமையலறை ஒரு மகிழ்ச்சியான சூழலாக மாற்றும். நல்ல பாடல்களை கேட்டுக்கொண்டு சமைப்பது , நல்லமனநிலையைக்க் கொடுக்கும். சமைப்பது இலகு.இது சமையலை ஒரு  நல்ல அனுபவமாக மாற்ற உதவும்.

குடும்ப ஆரோக்கியம் (Family health) 

இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை புதிய காய்கறிகளை வாங்கி சமைப்பது (Family health) சிறந்தது. நாம் உண்ணும் உணவின் சுவையையும் தரத்தையம் அதில் உள்ள பொருட்களின் தரமும் நிர்ணயிக்கும் என்பதையும்  நினைவில் கொள்ளுங்கள்.

மிதமான தீயில் சமைப்பதே சிறந்ததும் பாதுகாப்பானதும் ஆகும். அதிகமான தீயில் சமைப்பதனால் ,சிறிது நேரம் கனவிக்காது விட்டாலும் ,உணவு எரிந்து விட வாய்ப்புள்ளது.

உணவில் உப்பு சேர்ப்பதில் கவனம் தேவை. எப்பொழுதும் குறைவாக உப்பு சேர்த்து சுவை பார்த்த பிறகு தேவையெனில் உப்பு சேர்த்து கொள்ளலாம்.

உப்பு குறைவாக இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம் ஆனால் அதிகமானால் எடுத்து விட முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உப்பைக் குறைப்பது உயர் இரத்த  அழுத்தத்தைக்  குறைக்க உதவும். ஆரோக்கியத்துக்கு நல்லது.

வாணலி, தோசைக்கல், பால் பாத்திரம் ஆகியவற்றை அடுப்பில் வைத்தவுடன் கைப்பிடி இடதுபுறமாகவோ வலது புறமாகவோ இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதனால் அவசரமாக சமையல் செய்யும் பொழுது கைப்பிடியில் இடித்து சூடான பாத்திரம் காலில் விழுந்து விபத்து, மேலதிக துப்பரவு வேலைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

Check Price

சமையலறையில் வேலைகளை இலகுவாக்குவது எப்படி?

எவ்வளவு களைப்பு, சிரமம் இருந்தாலும் இரவே சமையலறை மற்றும் பாத்திரங்களைச் சுத்தம் செய்து விடுங்கள். இதனால் , அடுத்தநாள் காலை மிகவும் இலகுவாகவும் மனதில் நல்ல சுறுசுறுப்பைத் தரும் நாளின் நல்ல ஆரம்பத்தையும் கொடுக்கும்.

அடுத்தநாள் துப்பரவு செய்து பாத்திரங்களைக் கழுவி சமைக்க தொடங்க நேரம் ஆகிவிடும். நீங்களும் களைத்து விடுவீர்கள்.

அதனால் அவசரமாக ஏதோ சமைத்து விட்டால் போதும் என்றாகிவிடும். சமைப்பது சலிப்படைந்து நாளடைவில் சமைப்பதே சவாலாகிவிடும்.

அடுத்த இரண்டு நாட்களுக்கு என்ன சமைக்க வேண்டும் என்பதை முடிவு செய்து வைத்து கொள்வது புதியதாக சமைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

இதன் மூலம் முழு நேர அலுவலக பணி செய்வோர் கடைசி நேர குழப்பங்களை தவிர்க்கலாம்.

இருக்கும் பொருட்களை வைத்து என்ன  சமைக்கலாம் என்று முதலில் அறிந்து அதன் பின் என்ன சமைபப்து என திட்டமிடுங்கள். இதனால் விரயங்கள் தவிர்க்கப்படும்.

The secret of your family health,family health,happy family,annaimadi.com,good diet,healthy cooking,happy cooking,easy cooking

 சமையலில் நேரத்தை எப்படி மிச்சப்படுத்தலாம்?

எப்பொழுதும் சமையலுக்கு தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைத்து கொண்டு சமையலை தொடங்க வேண்டும் என்பதில்லை. ஆனால் எல்லாப் பொருட்களும் அதன் அதன் இடத்தில் இருக்கும்படி, கவனித்து அடுக்கி வையுங்கள்.

இதன் மூலம் அடுப்பை ஏற்றிய பின்னர் பொருட்களை தேடுவதால் ஏற்படும் நேரத்தையும் எரிபொருள் விரயத்தையும் தவிர்க்கலாம்.

என்ன சமைப்பது, எவ்வளவு சமைப்பது, தேவையானபொருட்கள் வாங்குவது எல்லாவற்றையுமே திட்டமிட்டு செய்தால் இலகுவாக இருக்கும். நேர விரயம் இருக்காது. சில நாட்களில் என்ன சாமைப்பது என்று முடிவெடுக்கவே அதிக நேரம் போய்விடும்.

ஒரு தரமான கூர்மையான கத்தி சமையலறையில் நாம் செலவிடும் நேரத்தை பாதியாக குறைக்கும்.

சமையல் முழுவதும் முடிந்த பின்னர் சமையலறையை சுத்தம் செய்வதை தவிர்க்கவும். கழிவுகளை அவ்வப்போது குப்பை தொட்டியிலோ அல்லது ஒரு பைவைத்து போட்டு விட வேண்டும்.

முடிந்தால் உணவு வேகும் நேரத்தில் பத்திரங்களை சுத்தம் செய்து விடலாம். இதனால் சமையலறை எப்போதும் சுத்தமாக இருக்கும், அடுத்த வேளை சமைக்க வசதியாகவும் இருக்கும்.

நல்ல சாப்பாடு நல்ல மனநிலையைக் கொடுக்கும்.நல்ல மனநிலை குடும்பத்திற்கு நல்ல சந்தோசத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.

சமைப்பதை இலகுவாக்கி,விருப்பத்தோடு சமைத்து , நல்ல உணவு உண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *