விரதம் இருப்பதனால் நன்மைகள் உண்டா? (Benefits of Fasting)

வீட்டில் பூஜை ,ரதம் (Fasting) என்று காலை முதல் மாலை வரை உண்ணாமல் இருப்பது நமது இந்திய கலாச்சாரத்தில் பலரும் கடைபிடிக்கும் விஷயம். மாதத்தில் ஒருநாள் விரதம் இருந்தால் நல்லது என்றும் சொல்கிறார்கள்.

விரதம் என்பது மருத்துவ ரீதியாக உடல் செல்கள் புத்துயிர் அடைய உதவும் ஒரு செயல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது.

நாம் ஆன்மீகம் மற்றும் மூட நம்பிக்கை என நினைத்துக் கொண்டிருக்கும் பல விஷயங்கள் நிஜத்தில் அறிவியல் மற்றும் மருத்துவம் சார்ந்த விஷயங்கள் ஆகும்.

நமது முன்னோர்கள் மறைமுகமாகவும், தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவும் நம்மிடம் கட்டாயப்படுத்தித் திணித்த சில விஷயங்கள் தான், கால போக்கில் நம்முன் கண்மூடித்தனமான பக்தியாகவும், மூட நம்பிக்கையாகவும் மருவி நிற்கின்றன.

இந்த விஷயங்களில் நம்மில் சிலர் மட்டுமே, அதிலும் பெண்கள் மட்டுமே பெரும்பாலும் கடைப்பிடித்து வருகின்றனர்.

விரதம் (Fasting) என்பதை பண்டைய காலத்தில் நமது முன்னோர் ‘உபவாசம் இருப்பது’ என்றுதான் சொல்லியுள்ளார்கள். உபவாசம் செய்வதன் நோக்கம் உடல், மனம் இரண்டையும் சுத்தப்படுத்துவது.

மாதம் ஒருமுறை உபவாசம் இருப்பது, நம் வாழ்க்கை முறையில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். இன்னும் சிலர் உபவாசம் இருப்பதை எதுவும் உண்ணாமல் இருப்பது என்று நினைக்கிறார்கள். அது தவறு.

எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக ஏற்படும்.விரதம் இருப்பதனால் நன்மைகள் உண்டா? Benefits of Fasting,Fasting diet,Fasting methods,Fasting foods,அன்னைமடி,விரதம் இருப்பதன் நோக்கம்,விரதம் பிடிப்பதால் ஆரோக்கிய நன்மைகள் ,விரதம் ஏன் பிடிக்க வேண்டும், annaimadi.com,

விரதம் இருப்பதால் ஏற்படும் நன்மைகள் (Benefits of Fasting)

விரதம் (Fasting) இருப்பதன் நோக்கம் உடல், மனம் இரண்டையும் சுத்தப்படுத்துவது. மாதம் ஒரு முறை விரதம் (Fasting) இருப்பதால் நம் உடல் ஆரோக்கியத்தில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

முறையான விரதத்தினால் போதுமான நீர்சத்துகள் உடலில் தங்கும். ஜீரண உறுப்பு மண்டலம் நலமுடன் இருக்கும். உடலில் உள்ள கழிவுகள் வெளியேறிவிடும். வாயுத் தொல்லை, குடல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாது. மாதம் ஒருநாள் உபவாசம் இருந்தாலே போதும்.

முகம் புத்துணர்வுடன் இருக்கும். தோல் மெருகேறும். பலவிதமான நோய்களை வராமல் தடுக்க முறையான உபவாசம் வழிவகுக்கும்.

விரதம் இருப்பதனால் உங்களது உடல் மற்றும் மன நிலையில் அமைதி ஏற்படும் மற்றும் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். உடலில் உள்ள செல்கள் புத்துயிர் பெறுவதனால், உங்களது நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. இது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
விரதம் இருப்பதனால் ஏற்படும் மற்றுமொரு சிறந்த பயன் என்னவெனில் உங்களது உடல் எடை குறைய இது பெருமளவில் உதவும்.
மனநிலை மேன்மையடையும். நீங்கள் விரதம் இருப்பதனால் உங்களது ஞாபகத்திறன் அதிகரிக்கிறது. கவனம் ஒருமுகப்பட விரதம் இருப்பது சிறந்த முறையில் பயனளிக்கும்.
 அது உடலில் சில செல்களை வளர்ச்சியடைய செய்யும். பழுதடைந்த செல்கள் புத்துயிர் பெறும்.

விரதம் இருப்பதனால் நன்மைகள் உண்டா? Benefits of Fasting,Fasting diet,Fasting methods,Fasting foods,அன்னைமடி,விரதம் இருப்பதன் நோக்கம்,விரதம் பிடிப்பதால் ஆரோக்கிய நன்மைகள் ,விரதம் ஏன் பிடிக்க வேண்டும், annaimadi.com,

விரத உணவு முறைகள் (Fasting diets)

விரதம் இருக்கும் போது நீர்ச்சத்து உள்ள பானங்களை நிறைய எடுத்துக் கொள்ளாவிட்டால் உடலில் உள்ள கழிவுகள் அப்படியே தங்கி நோய்களை ஏற்படுத்தும். விரதத்தின் போது குளுக்கோஸ் தண்ணீர், மூலிகை தேநீர் , சூப் போன்றவையும் பருகலாம்.

போதுமான அளவு காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்வது உடலுக்குத் தேவையான விற்றமின்கள், தாதுச்சத்துகள் கிடைக்க வழி செய்கிறது.

முறையான விரதத்தில் 5 வகை காய்கறிகள், 5 வகை பழங்கள், தேவையான அளவு தண்ணீர் எடுத்துக்கொண்டு, அரைமணி நேரம் நடைப்பயிற்சியோடு, 8 மணி நேர தூக்கமும் பெற்றால், உடல் புத்துணர்வு பெறும்.  

சிலர் விரதம் இருக்கிறேன் என சோறு சாப்பிடாமல் காபி அல்லது டீ மட்டுமே குடிப்பார்கள். 
இது தவறான முறை.

‘தண்ணீர் கூட குடிக்காமல் விரதம் இருக்கிறேன்’ என்பதும் சரியானது அல்ல. இதனால் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறாமல் தங்கிவிடும். இது பல நோய்கள் வரக் காரணமாக அமையும்.

விரதம் இருக்கும் நாளில் எண்ணெயில் செய்யப்படும் உணவுகளை முழுமையாக தவிர்த்து விடுவது நல்லது. 
காலை முதல் மாலை வரை தண்ணீர் கூட குடிக்காமல் இருந்துவிட்டு விரதத்தை முடிக்கும்போது பழச்சாறு அருந்தினாலும் பெரிய பயன் இருக்காது. மலச்சிக்கல், வயிற்றுப்புண், தலைவலி, எரிச்சல் போன்றவை ஏற்படக் கூடும்.

பழச்சாறு, மோர், பானகம், எலுமிச்சைச்சாறு, இளநீர் போன்ற நீர்ச்சத்துக்கள் உள்ள பானங்களை போதுமான இடைவேளைகளில் அருந்திக் கொள்ளலாம்.

வேக வைத்த காய்கறிகளை சாப்பிடலாம். முளை கட்டிய தானியங்களை சாப்பிடலாம். சோயா பீன்ஸ், சுண்டக்கடலை, நவதானியங்கள் போன்ற நல்ல கலோரி அளவுள்ள உணவுகள் எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு கப் கஞ்சி குடிக்கலாம். உடலுக்கு சக்தி இழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

முறையாக எப்படி விரதம் இருக்க வேண்டும்?

தினமும் அடுத்த வேளை உணவுக்கு இடையில் போதிய இடைவெளி கொடுப்பது கூட விரதம் தான்.  வாரம் ஒருமுறை ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வாரம் ஒரு முறை விரதமிருப்பது சரியானது. 
மூக்கு முட்ட உண்பது தவறு வாரத்தில் எல்லா நாள்களும் மூன்று வேளைகளும் வயிறு முட்ட சாப்பிட்டு பழகிவிட்டு, திடீரென ஒரு நாள் விரதத்தை கடைப்பிடிப்பார்கள். அது தவறு.

உபவாசம் இருப்பதன் முக்கிய நோக்கமே தன்னைத்தானே அகத்தாய்வு (introspection) செய்து கொள்ளவும், நேர்மறை எண்ணங்களை (Positive thoughts) வளர்த்துக் கொள்ளவும், மனதை புதிப்பிக்கவுமே விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

மாதத்தின் ஒருநாள் செய்தித்தாள் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, சினிமா பார்ப்பது, செல்போன் பேசுவது போன்ற அன்றாட நடவடிக்கைகளை முற்றிலும் தவிர்த்துவிட்டு மனதுக்கும் உடலுக்கும் ஓய்வளிக்க வேண்டும்.

எதிர்மறை எண்ணங்கள் எதுவும் அந்த நாளில் வராமல் பார்த்துக் கொள்வது அவசியம். முழுமையாக பட்டினி இருக்கக்கூடாது.

விரதம் இருப்பதனால் நன்மைகள் உண்டா? Benefits of Fasting,Fasting diet,Fasting methods,Fasting foods,அன்னைமடி,விரதம் இருப்பதன் நோக்கம்,விரதம் பிடிப்பதால் ஆரோக்கிய நன்மைகள் ,விரதம் ஏன் பிடிக்க வேண்டும், annaimadi.com,

விரதம் பல வகைகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. சிலருக்கு ஒரு வேளை, சிலருக்கு 2 வேளை உணவு, வெறும் பழங்களை சாப்பிடுவது, உப்பு தவிர்த்து இனிப்பு மட்டும் எடுத்துக் கொள்வது, அசைவம் மட்டும் தவிர்ப்பது என்று விரதங்கள் உள்ளது.

 விரதத்துக்கு 2 நாள்களுக்கு முன்பிருந்தே காரம், குறைவான பருப்பு சாதம் மாதிரி நன்கு வெந்த உணவுகளையும், ரசம் சாதம், மோர் மற்றும் பழங்களையும் சாப்பிட வேண்டும்.

 வாரமோ, மாதமோ ஒரு நாள் குறைந்த அளவு உணவை எடுத்துக் கொண்டு விரதம் இருப்பது புத்துணர்ச்சி கொடுக்கும்.

போதுமான பயிற்சி இருப்பவர்கள் வாரம் ஒருமுறை கூட உபவாசம் இருக்கலாம். விரதம் (Fasting) இருப்பவர்கள் அதை முறையாகக் கடைப்பிடிப்பது அவசியம். 

உபவாசம் இருக்கும் நாளில் ஆன்மிகச் சிந்தனையுள்ள புத்தகங்களை படிப்பதும் நல்ல மனநிலையைக் கொடுக்கும்.

உணவு, பசி, மனம் மூன்றுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எந்த வகையான உணவுகள் உண்ணுகிறோமோ அதற்கேற்ற எண்ணங்களே வரும்.

வயிறு காலியாக இருக்கும் போது தான் பொறாமை, கோபம், அகத்தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். உங்கள் முகபொலிவையும் பாதிக்கும்.

தேவையான இயற்கை உணவுகள் எடுத்துக்கொண்டு உபவாச பயிற்சியை மேற்கொள்வது சிறந்தது.

 நாம் சாப்பிடுகிற உணவு செரித்து, உணவில் உள்ள கொழுப்புகள் ஆற்றலாக மாற்றப்பட குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் தேவை.
ஆனால் இடைவேளை கொடுக்காமல் அடுத்த வேளை சாப்பாட்டை உள்ளே தள்ளுவதால் உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பானது, உடல் இயக்கத்திற்குத் தேவையான ஆற்றலாக மாறாமல் தடுக்கப்பட்டு அப்படியே தேங்கி விடுகிறது.இதுவே விரதம் அனுட்டிப்பதன் பிரதான நோக்கம்.
 
குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பணி பெண்கள், கடுமையான வேலைகள் செய்பவர்கள், அடிக்கடி வெளியூர் செல்பவர்கள், தாய்ப்பால் கொடுப்பவர்கள் விரதம் இருப்பத்தைத் தவிர்த்தல் நல்லது.
நோயாளிகள் ,தொடர்ந்து மருந்து உட்கொண்டு வருபவர்கள்,நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்கள்,சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள், நீரிழிவுநோய் உள்ளவர்கள் உடல்நிலையைப் பொறுத்து  குறைந்த அளவில் விரதத்தை அனுட்டிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *