அதிக உடற்சோர்வு ஏற்பட காரணம் என்ன? (Fatigue)
வேலை, பயணம், நிலையான வாழ்க்கை, வயது போன்றவற்றுடன், ஒரு சில ஆரோக்கிய பிரச்சனைகளான நீரிழிவு, இதய நோய், தைராய்டு, ஆர்த்ரிடிஸ் போன்றவைகளும் எப்போதும் சோர்வுடன் (Fatigue) இருப்பதற்கான காரணங்களாகும்.
உற்சாகமான உடலும், குதூகலமான மனமும் வாழ்க்கையைப் பிடிப்புடனும் நம்பிக்கையுடனும் ஆரோக்கியத்துடனும் நகர்த்திட மிக மிக அத்தியாவசியம். இவற்றைச் சிதைக்கும் அலுப்பு, சோர்வு ஆகியவை உடல் மற்றும் மனதின் நோய்களாகவும் இருக்கக்கூடும்.
தற்போது சோர்வு என்ற ஒன்று பலரையும் தொற்றி, எதையும் நிம்மதியாக செய்யவிடாமல் தடுக்கிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.எனவே சோர்வு எதனால் ஏற்படுகிறது, அதிலிருந்து விடுபடுவது எப்படி என தெரிந்து சோர்வில் இருந்து விடுபட்டு, உடலின் ஆற்றலை அதிகரித்து சந்தோஷமாக வாழுங்கள்.
சோர்வு (Fatigue)அதிகம் இருப்பதால், உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், விருந்தினர்கள் போன்றவர்களுடன் சந்தோஷமாக நேரத்தை கழிக்கவிடாமல் செய்வதோடு, அலுவலகத்தில் கூட எளிதான வேலையைக் கூட விரைவில் செய்ய முடியாமல் போகும்.
சோர்வுக்கான காரணங்கள் (Fatigue – Causes )
உற்சாகமான உடலும், குதூகலமான மனமும் வாழ்க்கையைப் பிடிப்புடனும் நம்பிக்கையுடனும் ஆரோக்கியத்துடனும் நகர்த்திட மிக மிக அத்தியாவசியம். இவற்றைச் சிதைக்கும் அலுப்பு, சோர்வு ஆகியவை உடல் மற்றும் மனதின் நோய்களாகவும் இருக்கக்கூடும்.
இவை தவிர, ரத்தசோகை இருந்தாலோ, தைராய்டு சுரப்பு அளவுக்குக் குறைவாக இருந்தாலோ காலை நேரம் உற்சாகமாக இல்லாமல் அலுப்பு, சோர்வு ஏற்படுத்துவதாக அமைந்துவிடும்.
மலச்சிக்கல் உடலையும் மனதையும் மந்தப்படுத்தும் முக்கியக் காரணி. அதோடு, சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்களுக்காக சிகிச்சை எடுக்கும்போது, மருத்துவர் பரிந்துரைத்திருக்கும்
உயிர்ச்சத்து, ஆன்டிஆக்சிடன்ட் மாத்திரைகளைச் சரிவரச் சாப்பிடாமல் இருப்பதும் உடல் சோர்வைத் தரும். சில மருந்துகள் ஜீரணத்தில் இடையூறு ஏற்படுத்துபவை.
காய், கனிகளில் இருந்து சத்துக்களை உடல் பிரித்தெடுக்கும் தன்மையைத் தடுக்கக்கூடியவை. இதன் காரணமாக, நோய் கட்டுப்பாட்டில் இருந்தாலும், உடல் சோர்வு அலுப்பு இரண்டும் இருந்துகொண்டே இருக்கும்.
பெண்களுக்கு மாதவிடாய் முடிவிரும் காலத்தில் ஹார்மோன்கள் குறைவதால் ஒருவித எரிச்சல், படபடப்பு, பய உணர்வு, திடீரென்று வியர்த்துப் போதல் ஆகியவை நடப்பதும் அலுப்பு, சோர்வு ஆகியவற்றுக்கு முக்கியக் காரணங்கள்.
அலுப்பு, சோர்வுக்கு உடல் நோய்க்கு இணையான உளவியல் காரணமும் உண்டு. சவால்கள் இல்லாத ஒரே வேலையைப் பல ஆண்டுகளாகச் செய்து வருவதில் ஏற்படும் சலிப்பு, செய்கிற வேலைக்குச் சின்னதாக ஒரு பாராட்டுதல்கூட கிடைக்காததால் ஏற்படும் அலுப்பு.
பிடிக்காத பணியை போலிப் புன்னகையுடன் செய்வதால் ஏற்படும் சோர்வு… என பல உளவியல் காரணங்கள் அலுப்பு, சோர்வு ஆகியவற்றுக்கு உண்டு.
சோர்வைப் போக்கும் உணவுமுறை
இரத்த சர்க்கரையின் அளவு கூடினாலும் சோர்வாக இருக்கும். அதேநேரம் நெடுநேரம் உணவின்றி இருப்பது ரத்தத்தில் சர்க்கரை அளவினை குறைத்துவிடும்.
சிறிது சிறிதாக க பலமுறை சாப்பிடவும். மற்றும் சிறு இடைவெளியில் ஏதேனும் ஆரோக்கியமான உணவுப் பொருளை சாப்பிட்டவாறு இருக்கவும்.
இதனால், உடலில் இரத்த சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
காலை உணவை தவறாமல் உட்கொண்டு வந்தாலேயே, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.
இரவில் நன்கு ஜீரணிக்கக்கூடிய, நல்ல உறக்கத்தைத் தரக்கூடிய உணவைத் தேர்ந்தெடுத்து உண்ணவேண்டியது அவசியம்.
அதிலும், கனி வகைகள் உங்கள் முதல் தேர்வாக இருக்கட்டும். பழங்கள், இறைவன் நமக்களித்த கசக்காத விற்றமின் மாத்திரைகள்.
குறிப்பாக, ஒரு நெல்லிக்கனி, காய்ந்த திராட்சை, உலர்ந்த அத்தி ஆகியவற்றை தினசரி காலை வேளையில் சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதையும் உற்சாகமாக வைத்திருக்க உதவும்.
ஒரு வேளை உணவு (காலை அல்லது இரவு) முழுமையாகப் பழ உணவாக இருப்பது சிறப்பு.
பழங்களில்,பப்பாளி, வாழை, மாதுளை, சீதாப்பழம், அன்னாசி ஆகியவை சிறப்பானவை.
பித்த உடல்வாகு கொண்டவர்கள், தினமும் காலையில் இஞ்சி, இரவில் கடுக்காய் சாப்பிடுவது அன்றைய தினம் முழுவதற்கும் உற்சாகம் தரும்.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், முருங்கைக்கீரை சூப், சர்க்கரை நோயாளிகள் ஆன்டிஆக்ஸிடன்ன்ட் நிறைந்த பால் கலக்காத கிரீன் டீ (Green Tea) என காலை பானமாக அருந்தலாம்.
அதிகம் புளி உள்ள, ஜீரணத்துக்குச் சிரமம் கொடுக்கும் எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கடலை உருண்டை, பொட்டு கடலை உருண்டை, எள் உருண்டை, கொட்டை வகைகள், இவற்றினை எடுத்துக் கொள்ளுங்கள்.
முழுதானிய உணவு. புரதம்-முட்டை, பாற்பொருட்கள் , கொட்டை வகை போன்றவைகலை அதிகம் உண்ணுங்கள்.சோர்வு பறந்து ஓடி விடும். நகராது ஒரே இடத்தில் வெகு நேரம் அமர்ந்து இருப்பது.
புகை பிடிப்பவராக இருந்தால் உடனடியாக அதனை நிறுத்துங்கள். நிறுத்திய நிமிடத்திலிருந்து அநேக நன்மைகளை உடலில் உணர்வீர்கள்.
சோர்வு அதிகம் இருப்பதால், உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், விருந்தினர்கள் போன்றவர்களுடன் சந்தோஷமாக நேரத்தை கழிக்கவிடாமல் செய்வதோடு, அலுவலகத்தில் கூட எளிதான வேலையை விரைவில் செய்து முடிக்காமல் செய்து, வாழும் வாழ்க்கையையே மோசமாக்கிவிடும்.
எனவே சோர்வு (Fatigue) எதனால் ஏற்படுகிறது, அதிலிருந்து விடுபடுவது எப்படி என அதைப் படித்து தெரிந்து சோர்வில் இருந்து விடுபட்டு, உடலின் ஆற்றலை அதிகரித்து சந்தோஷமாக வாழுங்கள்.
சோர்விலிருந்து விடுபட சில வழிகள் (Fatigue -Solution)
தேவையான உடற்பயிற்சி
தினமும் காலையில் ஏதேனும் ஓர் உடற்பயிற்சியை செய்து வந்தால், நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் செயல்படலாம்.
அன்றாடம் குறைந்தது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யவும்.யோகாசனம் செய்யுங்கள். உடலுக்கும் மனதிற்கும் நல்ல புத்துணர்ச்சி ஏற்படும்.
அதோடு ரன்னிங், வாக்கிங், சைக்கிளிங் போன்ற சிம்பிளான சில பயிற்சிகளை அன்றாடம் மேற்கொண்டு வாருங்கள். இதனால் நிச்சயம் நல்ல மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.
அசையாமல் வெகு நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது இருதயத்தினை வெகுவாய் பாதிக்கும். ஒரு மணிக்கொருமுறை 3-5 நிமிடங்கள் வரை நடங்கள். உடலில் ஆக்ஸிஜன் சக்தி கூடும்.சோர்வு நீங்கும்.
போதிய தண்ணீர்
உடலில் நீர் சரியான அளவில் இல்லாவிட்டால், உடலியக்கம் குறைந்து, மிகுந்த சோர்வை (Fatigue) உண்டாக்கும். இதனால் கவனச்சிதறலை அதிகரித்துவிடும்.
எனவே அவ்வப்போது தண்ணீரைக் குடித்து வாருங்கள். இதனால் எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.
தினமும் 2 – 2 1/2 லிட்டர் தண்ணீர் அருந்தவேண்டியது அவசியம்.
மிகவும் குறைவாகவே தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்,கையில் ஒரு பாட்டில் தண்ணீர் கண்டிப்பாய் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மணி நேரத்திற்கொரு முறை கொஞ்சம் தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். சோர்வு நீங்கும்.மேலும் உடலில் தேவையான நீர் சத்து இல்லை என்றால் பல பாதிப்புகள் ஏற்படும்.
சரியான தூக்கம்
தூக்கமின்மை சோர்வை உண்டாக்குவதோடு, ஆரோக்கியமும் பாதிக்கப்படும். எனவே தினமும் சரியான அளவு தூக்கத்தை மேற்கொள்வதோடு, ஒரே நேரத்தில் தூங்கி எழும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
இதனால் நாள் முழுவதும் உடலின் ஆற்றல் சீராக இருக்கும்.எந்த இடையூறும் இல்லாத 7 – 8 மணி நேர இரவுத் தூக்கம் இருந்தால், காலை அலுப்பில்லாமல் உற்சாகமாக விடியும்.
அதிக டீ ,காபி குடிக்கும் பழக்கம்
ஓரிரு முறை காபி குடிக்கும் பழக்கம் ஒரு ஊக்குவிப்பாக இருக்கும். ஆனால் அடிக்கடி காபி குடிக்கும் பழக்கம் கெடுதலைத் தரும்.
அதிக காபி, அடிக்கடி காபி, டீ இவை இரண்டும் உங்களை மிகவும் சோர்வாக்கி விடும். காலையில் காபி, டீ என மதியம் வரை வயிற்றில் ஆசிட் ஊற்றுவதும் உடலை வெகுவாய் பாதிக்கும்.
அதிகப்படியான எடை
உடல் எடை அளவுக்கு அதிகமாக இருந்தால், உடலில் ஆற்றல் குறைவாகவே இருக்கும். எனவே உடல் எடையைக் குறைக்க, சரியான டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொண்டு வாருங்கள்.
பூந்தோட்டம்,கடற்கரை, காடுகள் போன்ற இயற்கை அழகை ரசித்தபடி உலாவி வருதல் நல்ல உற்சாகத்தைக் கொடுக்கும்.
இவையெல்லாம் இருந்தாலும் கூட தெளிந்த மனம், அக்கறை, அன்பு, சிரிப்பும் சோர்வை நீக்கும் முக்கிய மருந்துகள்.