உடல் உணர்விற்கான தீர்வு தான் மருந்து (The feeling of the body is the medicine)

உடலுக்குத் தண்ணீர் தேவை (Feeling of the body) என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.

எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை ஏனைய உறுப்புகளுடன் பேசுகிறது.

உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும். வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.

இப்படி உடலுக்குத் தேவையானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும் போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.

பசிக்கிறது என்றால் வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?

இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?

வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது உடலுக்கு தேவையற்றவற்றைக் கழிக்கவே. இதையும் நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?

சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறிய வைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?

சிந்தியுங்கள்!

The feeling of the body is the medicine,Body feeling,அன்னைமடி,annaimadi.com,உடலின் உணர்வு தான் மருந்து,உடலின் உணர்வு ,உடலின் மொழி

சுகருக்கான மருத்துவம் குறித்து ஒரு சுவாரஸ்யமான பதிவு.

சர்க்கரைநோய் என வைத்தியரிடம் சென்றால் ,அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet கொடுக்கிறார்.ஒரு வருஷம் கழித்து சுகர் அதிகமானால் 2 mg tablet கொடுக்கிறார்.மறுபடியும் சுகர் அதிகமானால் 2 விதமான மாத்திரைகள் கொடுக்கிறார்.

திரும்பவும் ம் சுகர் அதிகமானால் இன்சுலின் போட சொல்கிறார்.அப்புறம் சுகர் கூட கூட  இரத்த அழுத்தம் (BP ) கொலஸ்ட்ராலும் வரலாம், எனவே அதற்கும்  மாத்திரைகளை பாவிக்க சொல்வார்.இப்படியே போய்க் கொண்டிருக்க 

சுகரும் கூட மாத்திரைகளும் அதன் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே இருக்கும்.

விளைவு??

அப்புறம் கால் sepdtic ஆகிவிட்டது என்று காலை வெட்டி எடுக்கும் நிலைமை.சொன்ன Diet சரியாக கடைபிடிக்கவில்லை என்பது மருத்துவரின் வாதம்.

இவ்வளவு ஆனாபிறக்கும்,எந்த இடத்துலயும் நோயாளி மருத்துவரை திட்டுவதோ, குறை சொல்வதோ இல்லை.

1.தினம் தினம் எடுத்துக் கொள்ளும்  மாத்திரைகள் மீதும்  சந்தேகம் வரவில்லை.

2.மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே போகுதேனு ஒருதரமேனும் யோசிக்கவில்லை

3.ஒரு நோய் வந்து அப்புறம் பல நோய்கள் ஆகிடுச்சே என்று  அவன் சிந்திக்கவில்லை.

4.வாரம் அதிக பணத்தை செலவளிப்பதும் அறியவில்லை, மாத்திரை சாப்பிட்டா போதும் அவ்வளவு தான்.

இந்த மாத்திரைகளை சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும் என்று  அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிப்பதும் இல்லை. அந்த மாத்திரைகளின்  பக்க விளைவை பத்தி அவன் சிந்திக்கிறதும் இல்லை.

சர்க்கரைநோயை குணமாக்க மாற்றுவைத்தியத்தில் வாய்ப்புஇருக்கிறது என்று கூறினால் நம்புவதும் இல்லை. 

கடைசி வரைக்கும் சித்தமருத்துவம், அக்கு பஞ்சர், இயற்கை மருத்துவம்,ஹோமியோபதி,யோகா இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு ஏதோ நிபுணர் மாதிரியே பேசிவிட்டு அவதிபடுவார்.எங்கே நல்லது இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனபக்குவம் இருத்தல் நலம்.

மனம் கெட்டால் உடல் கெடும்.உடல் கெட்டால் மனம் கெடும். அதனால் மனதுக்கும், உடலுக்குமான,முறையான மன அமைதிக்கான தியானமும், உடல் நலனுக்கான யோகாசனமும் உடற்பயிற்சியும் தொடர்ந்து செய்து வந்தாலே ஒருவர் தன்னை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.

சிந்திப்பவர்கள் மட்டுமே அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடுவர்.ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்.

தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாடே இருப்பதால்  நஞ்சு உள்ளே சென்றுவிடும்! அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.

மூளையின் கட்டளைகள்

1.உடம்புக்குக் ஆகாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.

2.இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது, அவர் உடனே டாக்டரை நாடி மாத்திரை ஒன்றைப் போட்டு அதனை தடுத்து விடுவார்.The feeling of the body is the medicine,Body feeling,அன்னைமடி,annaimadi.com,உடலின் உணர்வு தான் மருந்து,உடலின் உணர்வு ,உடலின் மொழி

3.இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.

4.நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.

5.ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.

6.உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.

7.வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார். அவரும் அதற்கு இன்னொரு மாத்திரையைக் கொடுத்து அதையும் தடுத்ஹ்டு விடுவார்.

8.உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை, குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.

9.மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.

10.அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி “இருமல் மருந்து” (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.

11.நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.

12.சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது “தோல் மருந்து” (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் தடுத்து விடுவார்.

வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.

உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

உடலின்பாஷை(Feeling of the body)

அது “மூளை கேன்சர் கட்டி” (Brain Tumour) ஆக மாறும் அபாயம் ஆகும்.

எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் (Feeling of the body) மூளை சொல்லும்.அதனை அலட்சியப்படுத்தக் கூடாது.The feeling of the body is the medicine,Body feeling,அன்னைமடி,annaimadi.com,உடலின் உணர்வு தான் மருந்து,உடலின் உணர்வு ,உடலின் மொழி

மூக்கில் நீர் வடிதல் ,சளி பிடித்தல், இருமல்,காய்ச்சல், இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!

இவைகள் நம் உடல் முழு ஆரோக்கிய நிலையில் இயங்கவதை காட்டும் சிக்னல்கள் !

இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!

மருத்துவம், உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,உடற் கழிவுகளை தங்கவைத்து, மேலும் சேர்த்து,நோய்களை பெரிதாக்கி புற்றுநோய் வரை கொண்டு செல்லும்!

இனியாவது ,எந்த நோய்க்கு மருத்துவம் தேவை என்பதை உணர்ந்து செயற்படுவோம்.

இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்ற உதவும் அற்புத இறைசெயல்!

உடல் மொழியை (Feeling of the body)  புரிந்து கொள்வோம். உடலின் உணர்விற்கு உணவளிப்பது  (Feeling of the body) தான் மருந்து.

உணவே மருந்து !

உள்ளிருக்கும் இறைசக்தியோடு ஒத்துழைப்போம்!

இயற்கையுடன் இணைந்து வாழ்வோம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *