பெண் மலட்டுத் தன்மையை உருவாக்கும் பிசிஓடி(Female infertility)

இன்றைக்கு பெண் மலட்டுத்தன்மையை (Female infertility) உருவாக்கும் காரணிகளுள் முதன்மையாக இருப்பது  பிசிஓடி (PCOD).

PCOD என்பது பெண் ஆணாகும் தன்மை.அதாவது பெண்களுக்கு மீசை தாடி முளைப்பது, ஒழுங்கற்ற மாதவிடாய் அல்லது வராதிருப்பது, குழந்தை பெற்றுக்கொள்ளமுடியாமல் இருப்பது,(Female infertility)

தற்போதைய காலங்களில் வளரிளம் பெண்களிடையே PCOD மிகவும் அதிகரித்து வருகிறது. கீழ்க்காணும் முக்கிய அறிகுறிகள் மூலம் PCOD இருப்பதை அறிந்திட முடியும்.

  1. மாதவிடாய் கோளாறுகள்
  2. தேவையற்ற இடங்களில் முடி முவளருதல்
  3. உடல் பருமனாகுதல்

கழுத்துப்பகுதியின் பின்புறம், கக்கம் போன்ற பகுதிகளில் கருநிறத்தில் தோலில் கோடுகள் போன்று தோன்றும். இது இன்சுலின் எதிர்ப்பு நிலையின் வெளிப்பாடாகும். 

PCOD ஆல் ஒரு பெண்ணின் உடல் ஏற்படும் மாற்றம் (Female infertility)

ஒரு பெண்ணின் சினைப்பையில் இருந்து அதிக அளவில் பெண்மையின் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜெனும் (Estrogen) சிறிய அளவில் ஆண்மையின் ஹார்மோனான ஆண்ட்ரோஜெனும் ( Androgen) சுரக்கும்.

ஆனால் நார்மலாக இருக்கும் பெண்களில், அவளது ஓவரிகள் சுரக்கும் டெஸ்டோஸ்டிரோனை இன்ஹிபின் (inhibin) எனும் பொருளால் மழுங்கடித்துக்கொண்டே இருக்கும். அதனால் நார்மல் பெண்களில் இந்த இன்ஹிபின் நன்றாக வேலை செய்யும்.

PCOD இருக்கும் பெண்களில் அந்த இன்ஹிபின் சரியாக வேலை செய்யாது. அதற்கு பதிலாக ஏக்டிவின் (activin) எனும் பொருள் சுரந்து ஆண்மைக்கான ஹார்மோனை வீரியமாக்கும்.PCOD ஆல் ஒரு பெண்ணின் உடல் ஏற்படும் மாற்றம் ,Female infertility,குழந்தையின்மைக்கான காரணம்,PCOD,உடல் பருமன் உள்ள பெண்களுக்கு,உடல் எடையைக் குறைக்கும் வழிகள்,easy ways to reduce weight,nature ways to reduce weight,இயற்கையாக உடல் எடையைக் குறைக்க,அன்னைமடி,annaimadi.com

மேலும், PCOD இல் இன்சுலின் வேலை செய்யாமல் போவதால் பெரும்பாலும் 90% பெண்கள் உடல் பருமனுடன் இருப்பார்கள்.

இன்சுலின் வேலை செய்யாமல் இருப்பதால், கல்லீரல் இந்த ஹார்மோன்கள் இயங்கத் தேவையான புரதமான ஐ குறைவாக சுரக்கும்.

இந்த அதிகமான டெஸ்டோஸ்டிரோன் தான், PCOD உள்ள பெண்களுக்கு ஆண்களைப் போல மீசை, தாடி, அக்குள் பகுதிகளில் முடிகள் வளர காரணம்.

இந்த நிலை முற்றினால் தலை சொட்டை (androgenic alopecia) விழவும் வாய்ப்பு இருக்கிறது. ஆண்களுக்கு சொட்டை விழக் காரணமும் இந்த டெஸ்டோஸ்டிரான் தான்.

இப்படி பெண் ஹார்மோன் ரத்தத்தில் அதிகமாக இருப்பதால், பெண்ணின் மூளையில் உள்ள ஹைபோதலாமஸில் gonadotrophic releasing hormone(GnRH) அளவுகளை தாறுமாறாக கூட்டியும் குறைத்தும் சுரக்கும்.

இது மேலும் பிரச்சனையை அதிகரிக்கிறது. இந்த பிரச்சனைகளால் தான் PCOD பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சரியாக மாதவிடாய் வராமல் இருப்பதற்கு காரணம் தெரிந்துவிட்டதா??

மாதவிடாய் சுழற்சியில், முட்டையே வெளியேறாமல் எப்படி கரு உருவாக முடியும்? அதனால் தான்.. PCOD பாதிக்கப்பட்ட பெண்கள் கர்ப்பம் தரிக்காமல் இருக்கின்றனர்.

இந்த பிரச்சனை அனைத்திற்கும் மூலக் காரணம், ‘இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ்’. அதை சரி செய்தால், இந்த ஹார்மோன் குளறுபடிகள் அனைத்தும் படிப்படியாக சீராகிவிடும்.PCOD ஆல் ஒரு பெண்ணின் உடல் ஏற்படும் மாற்றம் ,Female infertility,குழந்தையின்மைக்கான காரணம்,PCOD,உடல் பருமன் உள்ள பெண்களுக்கு,உடல் எடையைக் குறைக்கும் வழிகள்,easy ways to reduce weight,nature ways to reduce weight,இயற்கையாக உடல் எடையைக் குறைக்க,அன்னைமடி,annaimadi.com

உடல் பருமன் உள்ள பெண்களுக்கு

உடல் பருமன் உள்ள பெண்களுக்கு, அவர்களது உடல் எடையை சரி செய்தால், இன்சுலின் ரெசிஸ்டெண்ஸ் முழுமையாக குணமாகிவிடும்.

பெண்களில் உடல் பருமன் இல்லாதவர்களுக்கும் PCOD வருகிறது.

இன்சுலின் நன்றாக வேலை செய்வதால், சினைப்பையில் இருந்து கருமுட்டை வெளியேறுவதில் பிரச்சனை இருக்காது.

உடம்பு ஃபேட் பர்னிங் மோடிற்கு மாறிவிட்டதால், adipose tissue எனும் ஊளைச் சதை சேராது. உள்ளுறுப்புகளில் சேர்ந்த கொழுப்பும் கரைக்கப்படும். ஆகவே தேவையில்லாமல் ஈஸ்ட்ரோன் உருவாகாது.

இவை போக, PCOD உள்ள பெண்களுக்கு மெட்ஃபார்மின் (metformin) மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுவது, இன்சுலினை வேலை செய்ய வைப்பதற்குத் தான். நீரிழிவு இருப்போருக்கும் இன்சுலினை வேலை செய்ய வைக்கவே மெட்ஃபார்மின் பயன்படுகிறது.

உடல் எடை குறைத்தல், இன்சுலின் அளவுகளை ரத்தத்தில் கட்டுக்குள் வைத்தல், ரத்தத்தில் இருக்கும் இன்சுலினை சரியாக வேலை செய்ய வைத்தல் ஆகியவை,தான் இந்த இரு நோய்களையும் தீர்க்கும் தாரக மந்திரங்கள்.

உடல் எடையைக் குறைக்கும் வழிகள்

முதலில் எடை அதிகமாக உள்ள PCOD பெண்களுக்கான டயட். இவர்கள் PCOD பிரச்சனைக்கு முழு முதல் தீர்வு – அவர்களது உயரத்துக்கு ஏற்ற எடைக்கு இறங்கச் செய்வதே தலையாய சிகிச்சை முறை.

அதனுடன் தேகப்பயிற்சியையும் மேற்கொள்ளும்போது,  உடல் எடை குறைய ஆரம்பிக்கிறது. எடை குறைய இன்சுலின் சொல் பேச்சு கேட்க ஆரம்பிக்கும்.

எடை அதிகமாக இருக்கும் பெண்கள் எடை குறையுமட்டும்/ குழந்தைப்பேறு அடையுமட்டும் குறைந்த மா உணவுகளையும் வு நிறைந்த  கொழுப்பு உணவுகளையும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

அதிக மாவுச்சத்துள்ள உணவுவகைகளை உடல் எடை குறையும் தருணத்தில் தவிர்த்து விடுதல் நல்லது. பால் பருகுவதை தவிர்த்தல் நலம்.

ஜங்க் ஃபுட்ஸ், குளிர் பானங்கள் , எண்ணெயில் பொரித்த உணவுகள் கட்டாயம் சாப்பிடக்கூடாது. தினமும் உடற்பயிற்சி, நடை பயிற்சி செய்ய வேண்டும்.

மோனோ அன்சேச்சுரேட்டட் கொழுப்பு உணவுகள் (கறி, முட்டை) , ஒமேகா 3 கொழுப்பு அதிகம் ( மீன்கள்) உள்ள உணவுகளை அதிகம் உண்ண வேண்டும்.

காய்கறிகள், பழங்கள், கொட்டைகள் (nuts) போன்றவற்றை அதிகம் உண்ணவேண்டும்.

LEAN PCOD மக்களுக்கு அவர்கள் தங்களது எடையை மெய்ன்டெய்ன் செய்ய தேவைக்கேற்ற மாவுச்சத்தை கஞ்சி வடிகட்டப்பட்ட சாதம், பழங்கள், காய்கறிகள், கீரைகளை அதிகமாக உண்டு பெற வேண்டும். நல்ல உடற்பயிற்சி தேவை.

PCOD என்பது மிக எளிதாக சரிசெய்யக்கூடிய பெண் மலட்டுத்தன்மையை (Female infertility) உருவாக்கும் நோயாகும். தேவை நல்ல உணவு முறையும் சரியான சிகிச்சையும் தான்.

உணவு முறை மற்றும் உடற்பயிற்சியுடன் கூடிய வாழ்வியல் பிசிஓடிக்கான தீர்வை வழங்கவல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *