வெந்தயக்கீரைக் கூட்டு (Fenugreek leaves curry)
வெந்தயக்கீரை உடலுக்கு நல்ல குளிர்ச்சியைக் கொடுக்கும். உடற்சூட்டால் வருந்துபவர்கள் வெந்தயக் கீரையில் குழம்பு (Fenugreek leaves curry), கூட்டு, வெந்தயக்கீரை வறை சமைத்து உண்டு வ,ர உடம்பு குளிர்ச்சி அடைவதோடு, மலச்சிக்கல் குறையும் நீங்கும். இந்தக்கீரையில் கல்சியம், இரும்புச்சத்து, தாமிரச்சத்து போன்றவை தாராளாமாக உள்ளது.
வெந்தயக்கீரையை சப்பாத்தி மாவுடன் சேர்த்து குழைத்து சப்பாத்தி செய்யும் சப்பாத்தி அதிக வாசனையுடன் சுவையாக இருக்கும்.
ஆரோக்கியமான பல்,எலும்பு வளர்ச்சிக்கு வெந்தயக்கீரை மிக நல்லது.
தேவையான பொருட்கள்
- வெந்தயக்கீரை – 4 கட்டு
- துவரம்பருப்பு – 100 கிராம்
- தக்காளி – 2 (நறுக்கவும்)
- வெங்காயம் – ஒன்று (நறுக்கவும்)
- மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
- உப்பு – தேவைக்கேற்ப

தாளிக்க
- எண்ணெய் – 2 டீஸ்பூன்
- கடுகு – அரை டீஸ்பூன்
- வெந்தயம் – அரை டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்
- பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
செய்முறை
துவரம்பருப்பைக் கழுவி குக்கரில் சேர்த்து, ஒரு டம்ளர் தண்ணீர்விட்டு, அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும்.
பின்பு கீரையை நன்கு ஆய்ந்து, கழுவி, பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், பெருங்காயத்தூள் தாளித்து, நறுக்கிய வெந்தயக்கீரை, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு வேகவைத்த பருப்பை நன்கு மசித்து, கீரையில் கலந்து ஒரு கொதிக்க விடவும்.
பாரம்பரியமான சுவ்யும் சத்தும் நிறைந்த வெந்தயக்கீரைக் கூட்டு (Fenugreek leaves curry) தயார்.
வெந்தயக்கீரைக் கூட்டு வீடியோ செய்முறை இங்கே.
வெந்தயக்கீரை மோசமான கல்லீரல் நோய்,அஜீரணம் ,வயிற்றுக்கடுப்பு,வயிற்றுபோக்கு போன்றவற்றை குணப்படுத்துகின்றது.
இரத்த கொழுப்பின் அளவை கட்டுபடுத்துகின்றது.
வெந்தயக்கீரையை மேத்தி (Methi leaves) இல்லை என்றும் சொல்வார்கள்.வெந்தயக்கீரை கிடைக்காதவர்கள், உலர்ந்த வெந்தயக்கீரை(Dry Methi leaves) விற்பனையில் உள்ளது. வாங்கி வெந்தயக்கீரையின் பலனை பெறலாம்.
வெந்தயக்கீரையில் நார்ச்சத்து ,தாது உப்புகளும் வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன.
இரப்பை, குடல் சம்பந்தமான எல்லா பிரச்சனைகளுக்கும் வெந்தயக் கீரை சிறந்த மருந்து.மேலும் வெந்தயக்கீரையை உணவில் அடிக்கடி சேர்த்து வர , சர்க்கரை நோய்கட்டுக்குள் வரும்.
பல நன்மைகளை கொண்டிருக்கும் வெந்தயக்கீரையை உண்டு ஆரோக்கியம் பெறுவோம்!