வெந்தயக்கீரை வறை (fenugreek leaves)
வெந்தயக்கீரையானது (fenugreek leaves) வெந்தயத்தைப் போல அனைத்து நற்குணங்களையும் தன்னகத்தே கொண்டது.வெந்தயக்கீரை உடலுக்கு குளிர்ச்சியூட்டக் கூடியது.உடற்சூட்டால் கண்கலில் எரிச்சல்,வீக்கம் உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து.
உயிர்ச்சத்து ஏ(Vitamin A) அதிக அளவில் உள்ளது. கண் பார்வைக் கோளாறை நீக்கும். இரும்புச் சத்தும், கல்சிய சத்தும் கூடவே இருப்பதால் அனைவருக்கும் நல்லது. முக்கியமாக வளரும் குழந்தைகளுக்கு, மூல நோய் இருப்பவர்களுக்கு, அதிகமாக வெள்ளைபடும் பெண்களுக்கு, நீரிழிவு நோயாளிகளுக்கு வெந்தயக் கீரை நல்லது. இது உடல் சூட்டைத் தணித்து, உடலுக்கு வலுவையும் ஊட்டும். உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கவல்லது.
இப்படி ,ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்ட இந்தக்கீரையை அடிக்கடி வெந்தயக்கீரை குழம்பு, வெந்தயக்கீரை கூட்டு, வெந்தயக்கீரை வறை ஆகவும் உணவில் சேர்த்துக் கொள்வோம்.
வெந்தயக்கீரையில் வறை செய்வது எப்படி என்று வீடியோவில் காணலாம்.
சிறுநீர்ப் பெருக்கியாகவும், மலமிளக்கியாகவும் மூப்படைந்த தசைகளை இறுக்கி இளமையை காத்திடக்கூடிய ஓர் உன்னத மூலிகையாகத் திகழ்கிறது.அதாவது வெந்தயக்கீரை எளிதாக மல ஜலம் கழிய வழி செய்திடும்.
வெந்தயக்கீரையைக் கூட்டு வைத்துப் பகலில் சாப்பிட்டால் வாய்வு தொல்லை அகன்றுவிடும்.மூன்றே நாட்களில் வாயு முழுவதையும் கலைத்து விடும். வயிற்று உப்பிசம் இருந்தால் தணிந்து விடும்.
வெந்தயக்கீரையினால் (fenugreek leaves) கிடைக்கும் மேலதிக பயன்கள்
- வெந்தயக்கீரை (fenugreek leaves) வயிற்றுப்பொருமலை தவிர்க்கக் கூடியது.
- ஜூரத்தை குறைக்கக் கூடியது.
- இருமல்,சளி போன்ற கப கோளாறுகளை சீராக்கக் கூடியது.
- ஜீரண சக்தியை தூண்டக் கூடியது.
- வயிற்றுப்போக்கை தவிர்க்கக் கூடியது.
- நரம்புகளுக்கு வலுவூட்டக் கூடியது.
- முடி உதிர்வை தவிர்க்கக் கூடியது.
- வெந்தயக் கீரையின் இலைகள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தக் கூடியது. கீரையில் உள்ள அமினோ அமிலம் உடலில் இன்சுலின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இதனால் எப்போதும் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.
இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறுங்கள்.
-
வயதுக்கு வரும் பெண்கள் இதைச்சாப்பிட்டால் இரத்த விருத்தியுண்டாகும்.