அத்திப்பழத்தின் சிறந்த பயன்கள் (Benefits of Fig fruit)
அத்திப்பழத்தில் (Fig fruit) செய்யப்படும் அடை காஞ்சி காமாட்சியம்மன் கோயில் நெய்வேத்ய பூஜையில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதர்வண வேதத்தில் அத்திக்காய் (Fig fruit) அப்பத்தை யாகத்தில் இடும் போது அதீத பலன் கிடைக்கும். அத்திக்காயை மாமிசத்திற்கு இணையான, மிக வலிமையான பொருளாக அதர்வண வேதம் கூறுகிறது.
இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அத்திக்காயை (Fig fruit) சாப்பிடுவதன் மூலம் நலம் பெறலாம்.
வீடுகளில் தோஷம் ஏற்பட்டாலும், வீட்டின் பின்புறம் தென்திசையில் அத்தி மரத்தை வளர்த்தால் பலனளிக்கும். அத்தி மரத்திற்கு மனத்தை ஒருமுகபடுத்தும் சக்தி உள்ளது.
தியானம் செய்யப் பயன்படுத்தப்படும் ஆசனங்களை (அமரும் பலகை) அத்தி மரத்தில் செய்வதன் மூலம் தியானசக்தியை அதிகம் பெற முடியும்.
தினசரி சாப்பிட முடியாவிட்டாலும், மாதத்திற்கு ஒருமுறையாவது அத்திக்காயை உணவில் சேர்த்துக் கொள்வது உடல்நலத்திற்கு ஏற்றது. கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய விருட்சம் அத்திமரம்.
பழங்காலத்தில் தாயம் விளையாடப் பயன்படும் பலகைகள், தாயக்கட்டைகளை அத்தி மரத்தில் செய்ததாக நூல்கள் கூறுகின்றன.
மேலும் அதனை தெய்வப் பொருளாகவும் அதனைப் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. முருகனுடைய அம்சமாகவும் அத்தி மரம் கருதப்படுகிறது.
சங்க காலத்தில் ஆயுதப் பிரயோகத்திலும் அத்தி மரம் இடம்பெற்றுள்ளது. அத்தி மரத்தில் குத்திப் பார்க்க வேண்டும் என்பது போன்ற பழமொழிகளும் பிரசித்தம்.
போர்ப் பயிற்சி பெறும் மாணவர்களின் அம்பு எய்யும் திறன், வாள்வீசும் திறன் ஆகியவற்றை அறியஅத்தி மரம் பயன்படுத்தப்பட்டதாகவும் சான்றுகள் இருக்கின்றன.
அத்தி மிக உறுதியான மரம் என்பதால் இது போன்ற பயிற்சிகளுக்கும் உதவியது.
அத்திக்காயின் மருத்துவ தன்மை (medicinal value of fig fruit)
அத்திக்காய்க்கு (Fig fruit) உள்ள துவர்ப்பு சக்தி காரணமாக சித்த வைத்தியத்தில் அது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
உணவுப் பொருட்களில் வாழைப்பூ,நெல்லிக்காய் உள்ளிட்ட சில பொருட்கள் தவிர துவர்ப்பு சுவையுள்ள பதார்த்தங்களை சேர்த்துக் கொள்ளவது குறைவே.
துவர்ப்பு சுவைக்கு ரத்த சுத்திகரிப்பு, நரம்புகளை சிறப்பாக இயங்க வைப்பது உள்ளிட்ட சக்தி உள்ளது. அத்திக்காயை பொரியல் செய்து சாப்பிடுவதும் நல்ல பலன் அளிக்கும்.
இந்தக் காயின் சுபாவம் குளிர்ச்சி. அதனால் அத்திக்காய் உடம்பு சூட்டுக்கு மிகவும் நல்லது.
அத்திப்பழம் (Fig fruit), அத்திப்பிஞ்சு, அத்திக்காய் மூன்றையும் சமைத்துச் சாப்பிடலாம்.இதனையும், பருப்பையும் சேர்த்து சமைத்து சாப்பிடுவது நலம். முற்றின காயாக இருந்தால் மலத்தைப் போக்கும். ஆனால் பிஞ்சுக் காயாக இருந்தால் மலத்தை கட்டி விடும்.
இதனால் மேகம், வாதம், உடல் வெப்பம், புண் ஆகியவை போகும். இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. புதினாக் கீரையை இதனுடன் சேர்த்து சமைக்கும் வழக்கமும் இருக்கிறது.
அத்திப் பிஞ்சினால் மூல வாயு, மூலக்கிராணி, ரத்தமூலம்,வயிற்றுக் கடுப்பு, ஆகிய அனைத்து விதமான பிரச்சினைகளும் குணமாகும். மேலும் இது பத்தியத்திற்கு ஏற்றது ஆகும்.
இது மூலம், இரத்த மூலம், வயிற்றுக்கடுப்பு, சீதபேதி, வெள்ளைப் பாடு, வாதநோய்கள், மூட்டுவலி, சர்க்கரை நோய் தொண்டைப் புண், வாய்ப்புண்ணுக்கு நல்ல மருந்தாகும்.
மாதம் ஒருநாளாவது அத்திக்காய் அவியல் சாப்பிடுவதால் மலக்குடல் சுத்தமாகும். மூலநோய் வராமல் தடுக்கும்.
இது தசைகளை இறுக்கும் குணம் படைத்தவை. பழங்களை இடித்து, அதன் சாற்றைச் சாப்பிடுவதால் சிறுநீரக நோய்களைக் குணப்படுத்த முடியும்.

தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.நாள்பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.