அல்சருக்கு நல்ல மருந்தாகும் அத்திக்காய் (Figs cure ulcers)

வயிற்றுப்புண்ணையும்  (அல்சர் ) சரி செய்யும் வல்லமை அத்திக்காய்க்கு (Figs cure ulcers) உண்டு.

அத்தி மரப்பட்டை, வேர், அத்திக்காய், அத்திப்பழம், உலர் அத்திப்பழம் (dry figs) என எல்லாமே சிறந்த மருத்துவ குணங்களை உள்ளடக்கி உள்ளது. மாதம் ஒருமுறை அத்திக்காயை வைத்து கூட்டு, பொரியல் வைத்து சாப் பிட்டால் வாய் வேகாளம், வாய் எரிச்சல், வாய்ப்புண்ணை நிரந்தரமாக குணமாக்கும்.

‘கண்டு காய் காய்க்கும் காணாமல் பூ பூக்கும்’

என்று அத்திக்காய் குறித்து ஒரு பழமொழி.

சிறந்த மருத்துவ குணமுள்ள  இயற்கை உணவாக அத்திக்காயை சொல்லலாம்.நேரத்துக்கு உணவு எடுத்துக்கொள்ளாமல் அவசரத்தில் கிடைத்ததை உண்டு சாப்பிட்டு செல்வோர்கள் தங்களையும் அறியாமல் அல்சருக்கு அடித்தளம் அமைக்கிறார்கள்.

அதனால் அல்சர் குணமாக ( Figs cure ulcers) அத்திக்காயை அவ்வப்போது உணவில் கூட்டு,பொரியல்,கறியாக சேர்த்து வர நல்ல  பலன் கிடைக்கும்.

அத்திக்காய் பொரியல் செய்முறையை வீடியோவில் காணலாம்.

குடல்களின் இயக்கம் சீரற்று வயிற்றில் புண்ணை உண்டாக்கினாலும் வாய்ப்புண் வந்தபிறகே நோயின் தீவிரத்தை உணர்கிறோம்.அதனால் தான் நோய் வரும் முன்பே மருத்துவகுணமுள்ள உணவுகளையும் அவ்வபோது சேர்த்து வர வேண்டும் என்று கூறியதோடு அதைக் கடைப்பிடித்தும் வந்தார்கள் நம் முன்னோர்கள்.

அவற்றில் ஒன்று அத்திக்காய்.சிறந்த மருத்துவ உணவாக  பரிந்துரைக்கப்படுகிறது. 

figs cure ulcers,annaimadi.com,benefits of figs

துவர்ப்பு சுவைக்கு ரத்த சுத்திகரிப்பு, நரம்புகளை சிறப்பாக இயங்க வைப்பது உள்ளிட்ட சக்தி உள்ளது. அத்திக்காயின்  துவர்ப்புசுவை காரணமாக சித்த வைத்தியத்தில் அது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக அதிகபட்சம் உணவில் சேர்த்துக் கொள்ளும் துவர்ப்பு சுவையுள்ள பொருள் வாழைப்பூ  ஒன்றே . அத்திக்காயை பொரியல் செய்து சாப்பிடுவதும் நல்ல பலன் அளிக்கும்.
அத்திக்காயை மாமிசத்திற்கு இணையான, மிக வலிமையான பொருளாக அதர்வண வேதம் கூறுகிறது. இரும்புச் சத்து குறைபாடு உள்ளவர்கள் அத்திக்காயை சாப்பிடுவதன் மூலம்  இரும்புச்சத்தைப் பெறலாம்.

natural hermal medicine ulcer,annaimadi.com,cure ulcerதினசரி சாப்பிட முடியாவிட்டாலும், மாதத்திற்கு ஒருமுறையாவது அத்திகாயை உணவில் சேர்த்துக் கொள்வது உடல்நலத்திற்கு ஏற்றது. 

அத்திக்காயையும் பருப்பையும் சேர்த்து குழம்பு வைக்கலாம். அத்திக்காயில் பொரியல் செய்யலாம். இதில் வைட்டமின் A யும் சுண்ணாம்புச் சத்து மற்றும் இரும்பு சத்தும் அதிக அளவில் இருக்கின்றன.
 
figs cure ulcers,annaimadi.com,rich in ironஅத்திக்காயைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். வெள்ளை  நிறுத்தும். சீதபேதியை குணமாக்கும். வாயுவைப் போக்கும். இரத்த மூலத்தை குணப்படுத்தும் வல்லமை உடையது. உடலிலுள்ள ரணங்களை ஆற்றக் கூடியது. வெட்டை நோயை குணப்படுத்தும். அத்திக்காய் வயிற்று புண்ணுக்கு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
வயிற்றில் புண் இருக்கும் காலங்களில் இதை உணவுகளில் சேர்த்துக்கொண்டாலே போதும் நல்ல பலனை உணரலாம்.
அத்திக்காயில் இரும்புச்சத்து, விற்றமின் சி, சுண்ணாம்புச்சத்து ஆகியவைகள் உள்ளன. மாதம் ஒருநாளாவது அத்திக்காய் அவியல் சாப்பிடுவதால் மலக்குடல் சுத்தமாகும். மூலநோய் வராமல் தடுக்கும்.

அத்திக்காய் கிடைக்காதவர்கள் இயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட அத்திக்காயை (dry Organic Figs ) வாங்கியும் பயன் பெறலாம்.

benefits of figs,annimadi.com,rich in iron

Leave a Reply

Your email address will not be published.