குழந்தைகள் காயமடைந்தால் செய்ய வேண்டியவை(First aid for children)

குழந்தைகள் இருக்கும் வீடென்றாலே குறும்புத்தனத்திற்கும் சேட்டைகளுக்கும் குறைவே இருக்காது.பயமின்றி ,ஏறி தாவி குதித்து விளையாடும் போது சிறார்களுக்கு சிறு காயம் ஏற்பட்டால் செய்யும் முதல் உதவி (First aid ) தொடர்பாக அனைவரும் அறிந்திருப்போம். எனினும், அவற்றை சரியான முறையில் செய்கின்றோமா என்பது பற்றி பார்ப்போம்.

சிறுகாயங்களுக்கான  முதலுதவி (First aid for small injuries)

சுத்தம் மிக முக்கியம்

குழந்தைக்கு அடிபட்டால் , காயத்துக்கு மருந்து போட முன் அடிபட்ட இடத்தை நன்கு கழுவிக்கொள்ள வேண்டும். குறிப்பாக மண், கல், புற்தரைகள் ஆகியவற்றில் விழுந்து காயம் ஏற்பட்டால் காயத்தை முதலில் (First aid ) நன்கு கழுவிக்கொள்ள வேண்டும்.First aid for children,annaimadi.com,Wound cleansing,சிறுகாயங்களுக்கான  முதலுதவி ,First aid for small injuries,அன்னைமடி

அதோடு மருந்துப் பொருட்களை நன்கு சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும்.

சுத்தம் இல்லாத மருந்தும் கூட காயங்களின் தீவிரத்தை அதிகரிக்கும்.

பொதுவாக மருந்தகங்களிலும் வைத்தியசாலைகளிலும் மருந்துகளை எவ்வாறு சுத்தமான இடங்களில் வைத்திருப்பார்களோ, அதேபோல நமது வீட்டிலும் சுத்தமான இடத்தில் சிறுவர்களுக்கு எட்டாத இடத்தில் வைத்திருப்பது நல்லது. 

 இரத்தம் சிந்துவதை தடுத்தல் (Preventing bleeding)

முதலில் இரத்தம் வெளியேறுவதைத் தடுத்தல் வேண்டும்.கால்களில்  காயங்கள் ஏற்பட்டால் குழந்தையை சாய்த்து கால்களை உயர்த்தி வைக்க வேண்டும்.

காரணம் பெரிய காயமாக இருந்தால் அவற்றிலிருந்து அதிகமாக இரத்தம் வெளியேறக்கூடும். இப்படி செய்வதன் மூலம் இரத்தம் சிந்துவதை குறைக்க முடியும்.

அதன் பின்னர் காலை உயர்த்திப் பிடித்து இரத்தம் வடிவதை நிறுத்துவது சிறந்தது. சாதாரணமாக கீழே விழுந்த காயம் என்றால் காயத்தை கைகளால் மூடி அழுத்தும் போது சில வேளைகளில் இரத்தம் வடிவது நின்றுவிடும்.First aid for children,annaimadi.com,Wound cleansing,சிறுகாயங்களுக்கான  முதலுதவி ,First aid for small injuries,அன்னைமடி

காயத்தை சுத்தப்படுத்தல் (Wound cleansing)

காயத்தினை குளிர்ந்த நீரினால் சுத்தம் செய்வது நல்லது. இரசாயானங்கள் கலந்த SPIRIT போன்றவற்ரைப் பயன்படுத்துவதை தவிர்க்க வண்டும்.

ஏனெனில் குழந்தைகளின் சருமங்கள் மிகவும் மென்மையானது என்பதால்  காயங்களின் தீவிரம் அதிகரிப்பதுடன் வலியையும் ஏற்படுத்தும்.

காயத்தை பக்டீரியாக்கள் மேலும் தீவிரமடைய செய்துவிடுகின்றன. அவற்றைத் தடுக்கவே இந்த கிறீமை( ANTIBIOTIC CREAM ) வைத்தியசாலைகளில் உபயோகிக்கின்றனர்.

சிறுவர்களின் சருமத்திற்கு ஏற்ற கிரீமை வைத்தியரின் அறிவுறுத்தலின் படி பயன்படுத்த வேண்டும்.

காயத்தை பற்றி புரிய வைத்தல் வேண்டும்

குழந்தையை திட்டாமல் காயம் தொடர்பாக அவர்களுக்கு கற்பிக்க வேண்டியது அவசியம். பின்னர் குழந்தை காயத்திலிருந்து விலகி இருக்கும்.

இல்லையெனில் சிறுவர்கள் காயத்தைத்  தீண்டி பெரிதாக்கி விட வாய்ப்பு உள்ளது. அல்லது காயத்தை சரியாக  மூடி மறைப்பது முக்கியம். குழந்தையை பற்றி புரிந்துகொண்டு காயத்தைத் திறந்து வைத்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

காயத்தினை ஆராய வேண்டும்

சிறுவர்களுக்கு காயம் ஏற்பட்டவுடன் அவை விரைவாக குணமடைந்து விடுமா என்பதனை பார்க்க வேண்டும். சிறிய கீறல் காயம் காலில் ஏற்பட்டாலும் அவை மீண்டும் மீண்டும் அதே இடத்தில் படக்கூடியதாக இருக்கலாம்.

காயத்தின் நிறம் மாறி, அதைச் சுற்றி வீக்கம் ஏற்பட்டால், காத்திருக்காமல் ஒரு மருத்துவரைப் பார்ப்பது நல்லது. மருந்தின் சரியான அளவை குழந்தைக்கு வழங்குவதும் முக்கியம்.First aid for children,annaimadi.com,Wound cleansing,சிறுகாயங்களுக்கான  முதலுதவி ,First aid for small injuries,அன்னைமடி

காயம் வெறுமனே உலர்ந்தவுடன், மருந்துகள் நிறுத்தப்பட்டால் பக்டீரியா மீண்டும் வளரக்கூடும். அதனால் அந்த காயத்தின் தடயங்கள் நீங்கும் வரை மருந்துகளை கொடுப்பது சிறந்தது. 

 பெரிய காயம்

மேலே குறிப்பிட்டுள்ளபடி, சிறிய காயங்கள் உள்ள பகுதிகளில் அதனை சுத்தம் செய்து சிகிச்சையளிக்க முடியும். காயத்தை நாம் காணாவிட்டால் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.

சில குழந்தைகள் மேலிருந்து கீழே குதித்து காயமடையக்கூடும். அவர்களின் எலும்புகள் சில வேலை உடைந்திருக்கக்கூடும். வெளியே சிறு காயமாக இருந்தாலும் சில தசையிழையங்கள் கிழிந்திருக்கலாம்.

விளையாடும் போது ஒரு குழந்தைக்கு காயம் ஏற்பட்டதா, அல்லது பார்க்கும் போது வேறு யாராவது காயமடைந்திருக்கிறார்களா என்பதையும், விபத்து ஒரு கீறல் காயமா என்பதையும் பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டும்.First aid for children,annaimadi.com,Wound cleansing,சிறுகாயங்களுக்கான  முதலுதவி ,First aid for small injuries,அன்னைமடி

சில குழந்தைகள் பெற்றோரிடம்  இருக்கும் அச்சம் காரணமாக, விபத்து குறித்து பெற்றோர்களிடம் உண்மையைச் சொல்வதில்லை. பெரிய காயங்களை மறைத்து, சிறிய காயங்களே ஏற்பட்டதென கூறலாம்.

சிறியோரின் காயங்கள் பொதுவாக பெரியவர்களை விட வேகமாக குணமாகும். இருப்பினும், சில நேரங்களில் காயத்தின் தன்மை மற்றும் பிற காரணிகள், குணமடைவதை தாமதமாக்கலாம்.

அதிகமானோர் கைமருந்து செய்வார்கள்.சிறிய காயங்களுக்கு இது பொருத்தமானதே.ஆனால் பெரிய காயம் என்றால்,விரைவில் வைத்திய உதவியை நாடுவது சிறந்தது. சிறு பிள்ளைகளிருக்கும் வீட்டில் பிளாஸ்டர், பஞ்சு, அண்டிபயாடிக் கிரீம் போன்றவற்றை வைத்திருப்பது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *