அனுஷ்காவின் உடற்பயிற்சி ரகசியங்கள் (Fitness Secrets of Anushka)
39 வயதிலும் சிக்குன்னு இருக்கும் நடிகை அனுஷ்கா, ஆரம்ப காலத்தில் யோகா மாஸ்டராக (Fitness Secrets of Anushka) பணியாற்றினார். பின் திரையுலகில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்க, தனது நடிப்புத் திறமையால் அதை சிறப்பாக பயன்படுத்தி, தற்போது பலரது கனவு கன்னியாக உள்ளார்.
பெண்களை மையமாகக் கொண்ட பல சிறப்பான பாத்திரங்களில் நடித்து சிறந்த திரை ஒரு நட்சத்திரமாக ஒளிர்ந்து வருகின்றார் அனுஷ்கா ஷெட்டி. நேர்மையாக, அவர் எந்தவொரு படத்திற்கும் கடுமையான திறமையான உழைப்பின் மூலம் நியாயம் செய்கின்றார்.
ஆனால், அனுஷ்கா ஷெட்டி ஒரு நட்சத்திரத்தை விட அதிகம், அவர் மேற்கோள்காட்டியது உடற்பயிற்சியைத் தான் .
உடற்பயிற்சி என்பது மெல்லிய மற்றும் மெலிந்த உடல் வகையை குறிக்காது. உடற்பயிற்சி என்பது ஆரோக்கியமான மற்றும் வலுவான உடல் என்று பொருள்,ஒரு உடலின் வடிவம் அதன் ஆரோக்கியத்துடன் எந்த தொடர்பும் கொண்டிருக்கவில்லை.
என கூறுகிறார்.அனுஷ்கா ஒரு பெரிய யோகா ஆர்வலர் மற்றும் பல டோலிவுட்(Tollywood) பிரபலங்களுக்கு பிரபல யோகா பயிற்றுவிப்பாளராக (Yoga instructor) இருந்து வருகிறார். அது தவிர அனுஷ்கா வாரத்தில் பல முறை ஜிம்மிற்கு செல்கிறார்.
அவர் வழங்கிய உடற்பயிற்சி அறிவுரைகள் இதோ (Fitness Secrets of Anushka)
1. யோகா (Yoga)
அனுஷ்கா யோகா பயிற்றுவிப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் இளம் வயதிலிருந்தே யோகாவின் தீவிர பின்தொடர்பவர். திரையுலகிற்கு நுழைவதற்கு முன்பு, யோகா என்பது தான் இவருக்கு எல்லாமே.
2. கடுமையான பயிற்சி (Workout rigorously)
அனுஷ்கா கடுமையாக உழைப்பவர் அவர் திரைத்துறையில் நுழைந்ததால், அவரது சகிப்புத்தன்மை (stamina level)மேம்படுவதை உணர்ந்தார். ஆகையால், தினமும் 30 நிமிடங்கள்தொடர்ச்சியான தனது யோகா பயிற்சியில் இருந்து தனது சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்கிறார்.
3.அதிக நீர்அருந்தும் பழக்கம் (drinkinglot of water) ஆரோக்கியமான உடல், தோல் மற்றும் கூந்தலுக்கான ஒரே வழி அதிக தண்ணீரை குடிக்க வேண்டும் என அனுஷ்கா நம்புகிறார். ‘இவர் நாளைக்கு ஆறு லிட்டர் தண்ணீர் குடிப்பதாக கூறப்படுகிறது.
4. ஆரோக்கியமான உணவு தான் எல்லாமே (Healthy eating is everything)
அவருடைய ஒளிரும் தோலுக்கான ரகசியம் என்னவென்றால், தினமும் காலையில் வெற்று வயிற்றில் தாராளமாக தேன் ( honey) குடிக்கிறார். அல்லது அவர் சாப்பிடும் பாணில் தேன் பூசி சாப்பிடுகிறார்.
ஏனெனில் சரும மேற்பூச்சு சிகிச்சைக்கு (topical treatment) தேன் மிகவும் பிரபலமானது.
இது சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்கிறது.
5.நேரத்தைக் கடைப்பிடிப்பது (Adhering to time)
அனுஷ்கா தினமும் தனது இரவு உணவை இரவு 8 மணியளவில் சாப்பிடுவதை கடைப்பிடிக்கிறார்.
படுக்கைக்குச் செல்வதற்கு 2-3 மணி நேரத்திற்கு முன் உங்கள் இரவு உணவை முடிப்பது ஆரோக்கியமானது.
இது ஒரு நல்ல செரிமான அமைப்பு மற்றும் வலுவான ஒட்டுமொத்த உடற்திறன் (overall fitness) சேர்க்கிறது.
இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெற்று, உடல் ஃபிட்டாக இருக்குமாம். மேலும் நல்ல நிம்மதியான தூக்கம்( deep sleep) கிடைக்குமாம்.
அனுஷ்கா பின்பற்றும் ஃபிட்னஸ் ரகசியங்கள் ( Fitness secrets of Anushka)
நடிகையாக இருந்தால், நன்கு ஃபிட்டாக இருக்க வேண்டியது அவசியம். அனுஷ்கா எப்போதும் தான் ஃபிடடாக இருக்க வேண்டுமென, அன்றாடம் உடற்பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.
உடற்பயிற்சியின் மூலம் உடல் அமைப்பை சிறப்பாக பராமரிக்க முடியும் என்பதை நன்கு அறிந்தவர்.
யோகாவின் நன்மைகள் குறித்து அனுஷ்காவிற்கு நன்கு விரிவாகத் தெரியும். ஆகவே தினமம் தவறாமல் யோகா பயிற்சியை மேற்கொள்வாராம்.
இதை தனது அன்றாட செயல்படுகளுள் முதன்மையான ஒன்றாக கருதி மேற்கொள்வாராம். சொல்லப்போனால் இவரது அழகிற்கு யோகாவின் பங்களிப்பும் முக்கியமானதாக கூறுகிறார்.
அனுஷ்கா தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சியை மேற்கொள்வாராம். இது அவரது ஸ்டாமினாவிற்கு காரணமாகவும் கூறுகிறார்.
மேலும் தினமும் 30 நிமிட உடற்பயிற்சியானது அழகிய உடலமைப்பைப் பெற உதவுவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்டுத்துகிறதாம்.
அனுஷ்கா காய்கறிகள், பழங்கள் மற்றும் நீரை அதிகம் உட்கொள்வாராம். நல்ல உணவுப் பழக்கம் ஆரோக்கியமான உடலைப் பெற உதவுவதாக அனுஷ்கா நம்பிக்கை கொண்டுள்ளார்.