உணவு அலர்ஜி ஏற்படுவது ஏன் (Food Allergy)

 ஒருவரின் உடலின் தன்மைக்கேற்ப உணவு ஒத்துழைக்காமல் போகும் நிலை தான் உணவு அலர்ஜி (Food Allergy). எல்லோருக்குமே சாப்பிடுவது என்றாலே பேரானந்தம். சுவையான அனுபவம்! ஆனால் சிலருக்கு உணவு அலர்ஜி (Food Allergy) காரணமாக சில உணவுகளைக் கண்டால் பயம் ஏற்படும் நிலை .

அதிகமானோருக்கு உணவு அலர்ஜி (Food Allergy), உணவு சகிப்பின்மை (food intolerance) இருக்கிறது.

உணவு அலர்ஜி ஏற்படுவது ஏன்? (Why do food allergies occur?)

அலர்ஜி( Food Allergy) வருவதற்கு உணவில் இருக்கும் புரதம் கூட ஒரு காரணம். உடலில் இருக்கும் நோய் எதிர்ப்புசக்தி,   ஒருவகையான புரதத்தை ஆபத்தானது என்று தவறாக நினைத்துக்கொள்கிறது.

அந்த புரதம் நம் உடலுக்குள் போகும் போது அதை தாக்குவதற்காக IgE என்ற ஆன்டிபாடியை (Antibody) நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்குகிறது.

நாம் திரும்பவும் அந்த புரதத்தை எடுத்துக்கொள்ளும் போது ஏற்கெனவே உருவான  ஆன்டிபாடி, ஹிஸ்டமைன் போன்ற வேதிப்பொருள்களை உருவாக்குகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியில் இருக்கும் ஹிஸ்டமைன் பொதுவாக ஒருவருக்கு நன்மை தான் செய்யும். ஆனால், IgE என்ற ஆன்டிபாடி இருப்பதாலும் ஹிஸ்டமைன் சுரப்பதாலும் சிலருக்கு அலர்ஜி உண்டாகிறது.

ஏதாவது ஒருவகை புரதம் ஒருவருடைய உடலுக்கு ஒத்துக்கொள்ளாமல் இருக்கும்போது இப்படிப்பட்ட அலர்ஜி உண்டாகிறது.

அதனால் தான் சில உணவு வகைகளை முதல் தடவை சாப்பிடும் போது எதுவும் ஆவதில்லை. ஆனால் அடுத்த தடவை அதை சாப்பிடும்போது அலர்ஜி வரலாம்.

” ‘னக்கு கத்திரிக்காய்னாலே அலர்ஜி. என்னைக்காச்சும் எண்ணெய்க் கத்திரிக்காயை கொஞ்சமா சாப்பிட்டாக்கூட அன்னைக்கு முழுக்க தோல் அரிச்சுக்கிட்டே இருக்கும்’, ‘மீன் எனக்கு ஒத்துக்காது, ஒரு துண்டு சாப்பிட்டாக்கூட வயிறு வலிக்க ஆரம்பிச்சுடும்’… இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் உணவால் அலர்ஜி ஏற்படலாம்.

 ஃபுட் அலர்ஜியை முழுமையாகத் தவிர்க்க முடியாது. என்றாலும், சில உணவுமுறை மாற்றங்கள் மூலம் அவை நம்மை நெருங்காமலிருக்க வைக்கலாம்.

“ஒவ்வொருமுறை உடல் ஒவ்வாமையால் பாதிக்கப்படும் போதும், நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி அதை எதிர்த்துப் போராடத் தொடங்கும்.

உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருந்தால், தொடர்ந்து ஒவ்வாமை ஏற்படும்.

உணவு அலர்ஜி இருந்தால் என்னென்ன அறிகுறிகள் இருக்கும்?

உணவு அலர்ஜி ஏற்படுவது ஏன் ,Food Allergy,அன்னைமடி,Allergy,உணவு அலர்ஜி எப்படி தடுக்கலாம்,உணவு அலர்ஜி அறிகுறிகள்,உணவு அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகள்,annaimadi.com,causes for food allergi,how to avoid food allergi

ஒருவருக்கு ஏதாவது ஒரு உணவு அலர்ஜியாக இருந்தால் உடலில் அரிப்பு ஏற்படலாம். உடலில் ஆங்காங்கே தடிப்புதடிப்பாக ஆகலாம். தொண்டை, கண் அல்லது நாக்கில் வீக்கம் ஏற்படலாம்.

குமட்டல் , வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படலாம். சிலருக்கு இன்னும் மோசமானால் இரத்த அழுத்தம் குறையலாம், தலை சுற்றலாம்,மயக்கம் வரலாம். அல்லது மாரடைப்பு வரலாம்.

இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி உயிருக்கே ஆபத்தாகிவிடலாம்.

அலர்ஜி அதிகமானால் அதற்கான அறிகுறிகள் சீக்கிரமாக தெரியும்.

எந்த உணவுகளால் அதிகமாக அலர்ஜி ஏற்படுகிறது?(Foods cause the most allergies?)

நமக்கு அலர்ஜி வருவதற்கு எந்த உணவு வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். ஆனால் தக்காளி,கத்தரிக்காய், பால், முட்டை, மீன், நண்டு, இறால், வேர்க்கடலை, சோயாபீன்ஸ்,  பருப்பு வகைகள்(Nuts), கோதுமை போன்றவை அதிக அலர்ஜியை உண்டாக்கும்.

எந்த வயதில் வேண்டுமானாலும் ஒருவருக்கு அலர்ஜி வரலாம். இதில் மரபணுக்களுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

பெற்றோருக்கு அல்லது அவர்களில் ஒருவருக்கு அலர்ஜி இருந்தால் கூட பிள்ளைக்கும் வரும் வாய்ப்பு இருக்கிறது.

உணவு அலர்ஜி ஏற்படுவது ஏன் ,Food Allergy,அன்னைமடி,Allergy,உணவு அலர்ஜி எப்படி தடுக்கலாம்,உணவு அலர்ஜி அறிகுறிகள்,உணவு அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகள்,annaimadi.com,causes for food allergi,how to avoid food allergi

உணவு அலர்ஜி ஏற்படாமல் எப்படி தவிர்க்கலாம் (How to avoid food allergies

உங்கள் உடலுக்கும் செரிமானத்துக்கும் எந்தெந்த உணவுகள் ஒவ்வாமை ஏற்படுத்துகின்றனவோ, அவற்றைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். சில தினங்களுக்கு அந்த உணவுகளை முழுமையாக தவிர்த்துவிட்டு, சில நாள்கள் கழித்து சாப்பிட்டுப் பாருங்கள். ஒவ்வாமைப் பிரச்சனை மீண்டும் ஏற்படாவிட்டால், அவற்றைத் தொடரலாம்; இல்லாதபட்சத்தில் அவற்றை முழுமையாகத் தவிர்த்துவிடலாம். இதை ‘எலிமினேஷன் டயட்’ (Elimination Diet) என்பார்கள்.

ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகளை `எலிமினேஷன் டயட்’ மூலம் ஒதுக்கும் போது, ஊட்டச்சத்து விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

உங்கள் உணவில், 40 சதவிகிதம் காய்கறி; 30 சதவிகிதம் புரதச்சத்து உணவுகள்; 20 சதவிகிதம் நல்ல கொழுப்பு அதிகமுள்ள உணவுகள்; 10 சதவிகிதம் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.

உணவில் காலிஃப்ளவர், புரோக்கோலி, வெள்ளரிக்காய், மஷ்ரூம், முள்ளங்கி, பெருஞ்சீரகம், தேங்காய்ப்பால், நல்ல கொழுப்பு அதிகமுள்ள தேங்காய் எண்ணெய், எள் எண்ணெய் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இஞ்சி… ஆன்டிபயாடிக் உணவு. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, நோய்த் தொற்றுகளில் இருந்தும் உடலைப் பாதுகாக்கும்.

அன்றாட உணவில் இஞ்சி சேர்த்துக்கொள்வது நல்லது. இரண்டு கிராம்பை அரைத்துச் சாப்பிடுவது, கூடுதல் சிறப்பு.

எலுமிச்சை உடலிலுள்ள சத்துகளையும், நோய் எதிர்ப்புச் சக்தியையும் சீர்படுத்தும். தினமும் எலுமிச்சை கலந்த தண்ணீரைக் குடித்துவந்தால், நீர்ச்சத்து பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

காலிஃப்ளவர், புரோக்கோலி, வெங்காயம், கிரீன் டீ, சிட்ரஸ் பழங்களிலிருக்கும் `குவார்செடின்’ (Quercetin) எனப்படும் பாலிஃபினால் ஃபுட் அலர்ஜியைத் தடுக்க உதவும்.

புரோ பயாடிக் உணவுகளை (Pro Biotic அதிகம் உட்கொண்டால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்; குடல் பிரச்னைகள் தீரும்.

நட்ஸ் வகைகளில் அலர்ஜி இருப்பவர்கள், அவற்றுக்குப் பதிலாக நல்ல கொழுப்பு மற்றும் தாதுச்சத்துகள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த வேர்க்கடலை, பாதாம், வெண்ணெய் போன்றவற்றைச் உட்கொள்ளலாம்.

சிலருக்கு ஒவ்வொரு காலத்திலும் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் போன்ற `சீசனல் உணவுகள்’ அலர்ஜியை ஏற்படுத்தும். அவர்கள், தினமும் சிறிதளவு தேன் குடித்துவந்தால், இந்தப் பிரச்சனை தீரும்.

அவரவர் உடல் அமைப்பைப் பொறுத்து, சில உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். அவற்றை முழுமையாகத் தவிர்த்துவிடுவது நல்லது.

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆன்டிபயாடிக் உணவுப் பொருள்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது மற்றும் உணவுமுறையில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் முடிந்தவரை ஃபுட் அலர்ஜி ஏற்படாமல் தவிர்க்கலாம்.

பரிசோதனையும் சிகிச்சையும்

ஓர் உணவு உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தினால், ஏன் ஏற்படுகிறது, அதற்கான காரணம் என்ன என்பதையெல்லாம் மருத்துவச் சோதனை மூலமாகத் தெரிந்துகொள்ளுங்கள். மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்.

சில உணவுகளை சாப்பிடாமல் இருக்க நீங்களாகவே முடிவெடுத்தால் உங்களுக்குத்தான் ஆபத்து. ஏனென்றால், உடம்புக்கு தேவையான ஊட்டச்சத்து தரும் உணவுகளையும் நீங்கள் எடுத்துக்கொள்ளாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

சில அலர்ஜிகளும், உணவு சகிப்பின்மையும் அந்தளவு மோசமாக இருக்காது. இருந்தாலும், அதற்கு காரணமான உணவுகளை அடிக்கடி சாப்பிடாமல் இருப்பதும் அதிகமாக சாப்பிடாமல் இருப்பதும் நல்லது.

ஆனால், ஒருவேளை உணவு சகிப்பின்மை அதிகமாக இருந்தால், அதற்கு காரணமான உணவுகளை மொத்தமாக தவிர்க்க வேண்டும் அல்லது கொஞ்ச நாளைக்காவது தவிர்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *