உயிருக்கு கேடு தரும் செயற்கை உணவு நிறமூட்டிகள் (Food colour)
உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானம், ஸ்வீட், ஜாம், கேக் வகைகள் பிஸ்கெட்டுகள், ரோஸ்மில்க், பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் குழந்தை உணவுகள், கேசரி போன்றவற்றில் அளவுக்கு அதிகம் நிறமூட்டிகள் (Food colour) சேர்க்கப்படுகிறது.
இந்த நிறமூட்டிகள் (Food colour) பெரும்பாலும் நிலக்கரி தாரிலிருந்தும், பெட்ரோலில் இருந்தும் பிரித்து எடுக்கப்படு வது பலரும் அறியாததே.
இவைகளை தொடர்ந்து நீண்ட காலம் சாப்பிட்டு வந்தால் உயிருக்கு பேராபத்தாக மாறிவிடும் அபாயம் உள்ளது.
விற்பனை யுக்தியாக கண்கவர் வண்ணங்களில் சில கம்பெனிகள் தங்களது கெமிக்கல் நிறம் கலந்த குளிர்பானங்களை விற்பதற்காக கிரிக்கெட் வீரர்கள், சினிமா நடிகர்கள், நடிகைகள், அந்த குளிர்பானங்களை குடித்து தான் உற்சாகமாக இருப்பது போல் காட்டி பிழையான விம்பத்தை உருவாக்குகிறார்கள்.
நிறமூட்டிகளால் கேன்சர், ஆஸ்துமா, சோரியாசிஸ், தோல் அலற்சி, நரம்பு மண்டலம் பாதிப்பு, குடல்புண், குடல் புற்றுநோய், சிறுநீரக கோளாறு, வயிற்றுவலி, சைனஸ், சிறுநீரக கட்டி, ரத்தக்குழாய் சுருங்குதல், வாந்திபேதி, மூளையில் கட்டி, ரத்த அழுத்தம், குறை பிரசவம், ஆட்டிசம், குறைபாடான குழந்தை பேறு போன்ற நோய்கள் உண்டாகிறது.
ஒரு சில ஸ்வீட் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஸ்வீட்களில் கணக்கு வழக்கில்லாமல் கெமிக்கல் பொடியை கலந்து பலவிதமான நிறங்கள் உள்ள இனிப்புகள் தயார் செய்யப்படுகின்றன.
அதை போன்றே கேக் வகைகளிலும் நிறத்துக்காகவும் மென்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் தோல் பாதிப்பு, செரிமான கோளாறு போன்றவற்றை உண்டாக்கும்.
சல்பர் டை ஆக்சைடு என்ற கொடிய விஷ வாயுவை பயன்படுத்தி வாழைப்பழம், பப்பாளி, மாம்பழம், ஆஸ்திரேலிய ஆரஞ்சு போன்ற பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்றது. இந்த முறையால் பழங்களை பழுக்க வைத்தால் பழங்களில் உள்ள விற்றமின் பி1 சத்து முற்றாக அழிக்கப்பட்டு விடும்.
பழங்களுக்கு கவர்ச்சியான நிறம் வேண்டும் என்பதற்காக இந்த ஆபத்தான முறையை சில நிறுவனங்கள் கையாள்கின்றன. பெரும்பாலான கடைகளில் விற்கப்படும் சிக்கன் 65, மீன் வறுவல்கள் பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்று சுண்டி இழுக்கும் வண்ணம் செயற்கை நிறம் சேர்த்து வைத்திருப்பர்கள்.
இந்த சிவப்பு நிறத்துக்காக அளவுக்கதிகமாக கேசரி பவுடர் சேர்க்கப்படுகிறது.
சில இடங்களில் பஜ்ஜி, போண்டாவிலும் அழகுக்காக நிறம் சேர்க்கப்படுகிறது. இவைகளை சாப்பிட்டால் குடல் கேன்சர், சோரியாசிஸ் ஆஸ்துமா போன்றவை உண்டாகும்.
இப்படி கெமிக்கல் சேர்க்கப்பட்ட உணவு பொருட்களை சாப்பிடுவது சொந்த செலவில் சூனியம் வைப்பதுஎன்பார்களே,இது தான் அது.
வண்ண வண்ண கிரீம் கேக் (Colourful Cakes with Food colour)
குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் உற்சாகமானதாக இருக்கும்.
குழந்தைக்கு கெமிக்கல் நிறம் (Food colour) கலந்த கிரீம் கேக்கை தான் ஊட்டுகிறோம் என்பதை அறியாமலேயே பிறந்த நாள் கொண்டாட்டத்தில் உறவினர்களும் நண்பர்களும் ஆசையாக போட்டி போட்டுக்கொண்டு ஊட்டி மகிழ்வார்கள்.
அறியாமலே நம் குழந்தைகளுக்கு நாமே நஞ்சை ஊட்டிவிடுகிறோம்.
குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் போன்ற நோய்களை உண்டாக்கி விடும். சில குழந்தைகளை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி விடும்.
கேக் வெட்டுவது மேலை நாட்டு கலாச்சாரம். இல்லாத ஒன்று நம் மேல் திணிக்கப்பட்டு ஆரோக்கிய சீர்கேட்டுக்கு ஆளாகுகிறோம்.
நாம் நமது குழந்தைகளுக்கு சர்க்கரைபொங்கல்,லட்டு,அதிரசம், சத்துமாவை ஊட்டி உணர்வுப்பூர்வமாகவும், குழந்தையின் உடல் நலத்தை கெடுக்காமலும் கொண்டாடலாம்.
குறைந்த செலவில் நிறைய டீ போட வேண்டும் என்ற பேராசையால் டீத்தூளில் கெமிக்கல் சாயம் சேர்க்கப்படுகிறது. இந்த கெமிக்கல் கலப்பட டீயை தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்மை குறைவு உண்டாகும்.
கேன்சர், குடல்புண், சைனஸ், ஆஸ்துமா, தூக்கமின்மை போன்ற கோளாறை உண்டாக்கும்.கடைசியில் மரணத்தில் தள்ளி விடும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் குளிர்பானங்களை சாப்பிடும்போது பிறக்கும் குழந்தை, ஆட்டிசம் மற்றும் மளவளர்ச்சி குறைபாட்டுடன் பிறக்கும் வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உயிருக்கு உலைவைக்கும் செயற்கை கலர் கலந்த உணவை தவிர்த்து,எலுமிச்சை,கரட்,பீற்றூட்,ஆரஞ்சுபழம் போன்ற இயற்கை கலர்களை பயன்படுத்தலாம்.
பணத்திற்காக எதையும் செய்யும் உலகம் இது.பணத்தை கொடுத்து அர்ரோக்கியகேட்டை வாங்காமல் நாம் தான் கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும்.