நீரிழிவுநோய்க்கான உணவுமுறை (Food for diabetes)

நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிடக் கூடிய  உணவுகள் (Food for diabetes)

நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் (diabetes) என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது உணவுக் கட்டுப்பாடு தான்.

ஆனால் உணவுக் கட்டுப்பாடு என்பதைவிட உணவுமுறையில் மாற்றம் செய்யவேண்டும் என்பதே உண்மை.

அதாவது,உணவுக் கட்டுப்பாடு என்று வயிற்றைப் பட்டினி போட்டு வருந்தவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் ,உண்மையில்

நீரிழிவு  என்பது ஒரு நோய் அல்ல. அது ஒரு குறைபாடு.

இதனால் தான் சர்க்கரையின் அளவை  உணவின் மூலம் கட்டுப்படுத்தக் கூடியதாக உள்ளது. 

அதிக பக்கவிளைவுகளை தரும் மருந்துகளை குறைத்து ,சரியான உணவு, உடற்பயிற்சி,யோகாசனம் மூலம் படிப்படியாக சரி செய்யலாம்.

குறிப்பாக ஆரம்பகட்டத்தில் உள்ளவர்கள் சரியான உணவு, நல்ல உடற்பயிற்சி, சலபாசனம், தனுராசனம் போன்றவற்றால் விரைவாக இல்லாமல் செய்யலாம்.

பொதுவாக எல்லோரும் ஒரே விதமாகச் சாப்பிடுவது இல்லை.அவரவர் வேலைக்குத் தகுந்தாற் போல சக்தி தேவைப்படுகிறது. எனவே, செலவிடும் சக்திக்கு ஏற்றாற்போலத்தான் சாப்பிட வேண்டும்.

நாள் முழுவதும் உட்கார்ந்த இடத்தில் வேலை செய்யும் ஒருவருக்கு குறைந்த அளவு உணவே போதுமானது.அவர் அதிக உணவு சாப்பிட்டால்  கொழுப்புச்சத்து உடலில் சேர்ந்து விடும். இதனால் சர்க்கரை நோய் தானாகவே வந்துவிடும்.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு தனியாக வீட்டில் சமைப்பது என்பது  சற்று சிரமம் தான். அதனால் அனைவருக்கும் தயார் செய்வதையே நீங்களும் அளவோடு பிறருடன் சேர்ந்து உண்ணலாம்.

இடையிடையே உங்களுக்கு தேவையான உணவுகளை (food for diabetes) உங்களுக்கு ஏற்றவாறு சமைத்து சாப்பிடுவது நலம்.

இந்த புத்தகத்தில் (Cook book /Food Lists for Diabetes) சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கான உணவுகள் அவற்றை சமைக்கும் முறைகள் அழகாக தரப்பட்டுள்ளது.

நார்சத்து அதிகமுள்ள காய்கறிகளான  புடலங்காய்,கத்தரிக்காய்,பயற்றங்காய்,பாகற்காய், என  எல்லாவற்றையும் அன்றாடம்  சேர்ப்பதால் சர்க்கரையின் அளவு, கொழுப்புச்சத்தின் அளவு இரண்டையும் குறைக்கச் செய்யலாம்.

கிழங்கு வகைகளை அளவோடு எடுத்துக் கொள்ளலாம். எல்லா  கீரை வகைகளையும் தாராளமாகசாப்பிடலாம்.

கோதுமையும் ராகியும் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அல்ல.அளவுடன் தான் உண்ண வேண்டும். அரிசி உணவிற்குப் பதிலாக  சிறு தனியமான தினை (millet),சாமை சேர்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *