முதியோருக்கேற்ற உணவு (Food for elders)

முதியோர்கள் தங்கள் உடல் நலனை பாதுகாத்து கொள்ள நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவை (Food for elders ) சாப்பிட வேண்டும். அதாவது முதுமை காலத்தில் ஏற்படும் உடல்நல பிரச்சனைகளை சமாளிக்க நாம் சரியான உணவு முறையை பின்பற்ற வேண்டும். வயதான காலத்தில் சரியாக சாப்பிடாமல் இருந்தால் உடலில்  எதிர்ப்பு சக்தி குறையும். எடை குறையும். அதன் காரணமாக பல நோய்களால் வருந்த நேரும்.

முதுமை காலத்தில் முக்கியமாக தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள் புரதம், வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் ஆகும். இந்த ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை முதியவர்கள் அதிகம் சாப்பிடுவது அவசியம். அதேவளை, உணவில் சர்க்கரை,கொழுப்பு, உப்பு, புளிப்பு  அளவை உடல்நிலைகேற்ப குறைப்பது நலம் தரும்.

முதியோர்கள் 6 வேளை அளவாக சாப்பிட வேண்டும். தானியங்கள், பயிறுகள், பருப்புகள், காய்கறி, பழங்கள், முட்டை, மீன் போன்ற அசைவ உணவுகள் என அனைத்தையும் உடல்நிலையைப் பொறுத்து நன்றாக சாப்பிடலாம்.

Food for elders, healthy foods for elders,anutious food,fiber content,no added sugar foods,no fast foods,annaimadi.com

வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள்

வயதான காலத்தில் நல்ல கண்பார்வைக்கு வைட்டமின் ஏ நிறைந்த கரட், ஆரஞ்சு, தக்காளி, சர்க்கரை வள்ளி கிழங்கு,  மீன் போன்ற உணவுகளை சாப்பிட வேண்டும்.

ரத்த சோகை ஏற்படாமல் தடுக்க இரும்புச் சத்து நிறைந்த கீரைகள், சுண்டைக்காய், பேரிச்சம்பழம் ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.

செல்களின் அழிவை தடுக்கவும் புத்துணர்ச்சியுடன் இருக்கவும் வைட்டமின் சி அவசியம். அதற்கு ஆரஞ்சு, மாம்பழம், எலுமிச்சை, பப்பாளி, நெல்லிக்காய், காலிபிளவர் ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.வயதான காலத்தில் நோய்கள் எளிதாக தாக்கும்.

எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் ஈ, மகனீசியம், துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை முதியோர்களுக்கு கொடுக்க வேண்டும்.

முதியோர்களை அதிகமாக பாதிக்கும் பிரச்சனை உடல் சோர்வு மற்றும் கை, கால் மூட்டுவலி தான். உடலில் ஹார்மோன்கள் சுரப்பு குறைந்து ,எலும்புகளுக்கு தேவையான கல்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றின் உற்பத்தி குறைவதே ஆகும்.

உணவில் கல்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த கீரை, பால், தயிர், கேழ்வரகு, நல்லெண்ணெய், மீன், இறைச்சி, முட்டை போன்ற உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

Food for elders, healthy foods for elders,anutious food,vitamin content,,annaimadi.comநார்ச்சத்து உணவுகள்

முதுமை காலத்தில்  இயல்பாகவே உடல் உழைப்பு குறைவதால், பலருக்கு உடல் எடை கூடி அதன் விளைவாக பல பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம்.

இந்த பிரச்சனையை தவிர்க்க முதுமை காலத்திலும் முடிந்த வேலைகளை,உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். நார்ச்சத்து நிறைந்த, கொழுப்பு குறைவான உணவுவகைகளை சாப்பிட வேண்டும்.

பயிறுகள், பருப்புகள், பச்சை காய்கறிகள், கீரைகள், பாதாம், முந்திரி, வாழைப்பழம், கொய்யா, திராட்சை, ஆரஞ்சு போன்ற பழவகைகளை நன்கு சாப்பிட வேண்டும். பழத்தை பழரசமாக குடிக்காமல் பழமாக சாப்பிட வேண்டும்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்

கானாங்கெளுத்தி மீன், மத்தி மீன், வால்நட், சோயாபீன்ஸ், காளிபிளவர், கடுகு எண்ணெய் போன்றவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் (Omega 3 fatty acid) உள்ளன.

இந்த கொழுப்பு அமிலங்கள் வயதான காலத்தில் ஏற்படும் ஞாபக மறதியை(Dementia) தடுத்து மூளையின் செயல்பாட்டை பாதுகாக்கும்.

மேலும்  இது கண்பார்வை குறைபாடு, ரத்த கொழுப்பு, இதய நோய், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் முதியோர்களை காப்பாற்றும். Food for elders, healthy foods for elders,anutious food,vitamin content,no added sugar foods,no fast foods,annaimadi.com

வேகவைத்த உணவுகள்

கிழங்கு, கரட், பீன்ஸ், பீட்ரூட், கீரைகள், சக்கரை வள்ளி கிழங்கு போன்ற பலவகையான காய்கறிகளை உப்பு போட்டு வேகவைத்து சாப்பிடலாம்.

அல்லது விரும்பினால் ல் ஒரு டீ ஸ்பூன் எண்ணெயில் லேசாக கடுகு,வெங்காயம் ,கருவேப்பிலை, மிளகாய் சேர்த்து தாளித்து சாப்பிடலாம்.

அதே போல் கோழி, மட்டன், மீன், முட்டை போன்ற அசைவ உணவுகளையும் எண்ணெயில் வறுக்காமல் அவற்றை குழம்பில் போட்டு சாப்பிடலாம்.

மீனை பொரித்து சாப்பிடுவதை தவிர்த்து  மசாலா தடவி வாழை இலையில் மடித்து குக்கர் அல்லது இட்லி சட்டியில்  வேகவைத்து சாப்பிடலாம்.

சிறுதானியங்கள் 

நமது பாரம்பரிய சிறுதானியங்களான சாமை, வரகு, திணை, கம்பு, சோளம், குதிரைவாலி ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

இவற்றில் அரிசி கோதுமையை விட ஊட்டச்சத்துகள் அதிகம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் சிறுதானியங்களை சாப்பிடுவது நலம்.

food for elders,mega 3 supplementCheck Price

குறைத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் 

வயதான காலத்தில் ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, போன்ற பலவகையான உடல்நல பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புக்கள்  இருப்பதால், அதிக உப்பு, காரம் நிறைந்த பாக்கெட் உணவுகளையும்  கொழுப்பு நிறைந்த துரித உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள்,சர்க்கரைக்கு பதிலாக பனை வெல்லம்,பனங்கற்கண்டு,கருப்பட்டி போன்றவற்றை சேர்த்து கொள்ளலாம்.

சாக்லேட் மற்றும் ஐஸ்கீரிமை அளவாக சாப்பிடலாம். இனிப்பான மில்க் சாக்லெட்டுக்கு பதிலாக சிறிது கசப்பு தன்மை கொண்ட டார்க் சாக்லெட் (Dark Chocolate) சாப்பிடுவது நலம்.

டார்க் சாக்லெட்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் உடலின் செல்களை பாதுகாக்கும். மேலும் ரத்த ஓட்டத்தை சீர் செய்து இதயத்துக்கு நன்மை அளிக்கும்.  

Leave a Reply

Your email address will not be published.