ஐந்து மாத குழந்தைக்கு ஏற்ற உணவு (Food for five month old baby)
ஐந்து மாதம் நிரம்பிய குழந்தைக்கு ஏற்ற உணவு (Food for five month old baby) தாய்ப்பால் தான். அது தான் சிறந்ததும்!!
பிறந்து 6 மாதம் வரை கட்டாயம் தாய்ப்பால் தான் கொடுக்க வேண்டும்.பிறந்த குழந்தைக்கு முழுமையான ஊட்ட உணவு தாய்ப்பால்.குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.
தாய்-குழந்தை இடையே நல்ல பாசப்பிணைப்பை ஏற்படுகிறது. மூளை வளர்ச்சிக்குத் தேவையான கொழுப்பு அமிலங்கள் உள்ளன. புத்திக் கூர்மையை உயர்த்தும்.
தாய்ப்பால் ஆன்டிபாடிகளை குழந்தைக்கு வழங்குகிறது.பல நோய்த் தொற்றுகளிலிருந்தும் குழந்தையைப் பாதுகாக்க உதவுகிறது. குழந்தைக்கு ஒவ்வொரு 3மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.
பிறந்த குழந்தைக்கு மார்பகத்தின் இரு பக்கங்களில் இருந்தும் குறைந்தது 10நிமிடத்திற்கு ஒரு முறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இவ்வாறு அடிக்கடி உணவளிப்பதால் தாய்ப்பால் ஆரோக்கியமானதாகவும், அதிகப்படியான கொழுப்புச் சக்தி இல்லாததாலும் விளங்குகிறது.
முறையான பாதுகாப்பு முறைகள் பின்பற்றிய பிறகு சுகாதாரமான முறையில் பாலூட்ட வேண்டும்.
தாய்ப்பால் அதிகமாக சுரக்க
- தினமும் 6–8 கப் நீர், பால், புதிய பழச்சாறு போன்ற திரவங்கள் குடிப்பது நல்லது.
- மேலும் பச்சை காய்கறிகள், முட்டை, பூண்டு போட்டு காய்ச்சிய பால், வெங்காயம், திராட்சை சாறு, கோழி மற்றும் இறைச்சி சூப்கள் தாய்ப்பால் அதிகரிக்க உதவும்.
- அத்துடன் சால்மன் மீன் மற்றும் ஆளிவிதை போன்ற ஒமேகா—3 நிறைந்த உணவுகள் நல்லது.
- வெந்தயம்,ஓட்மீல், பெருஞ்சீரகம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தாய்-குழந்தை ஒருவரோடொருவர் இணையும் போது ஏற்படும் தோல்-க்கு-தோல் தொடர்பு குழந்தையின் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
மேலும் சுவாசத்தை மேம்படுத்துகிறது. உடல் வெப்பநிலையை ஒழுங்கு படுத்துகிறது.
அதிக தாய்ப்பால் சுரக்கவும் உதவுகிறது.
தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் பல நன்மைகள் ஏற்படுகின்றன. அதாவது தாய்ப்பால் கொடுக்கும் போது தாய் உடனடி கர்ப்பம் தரிப்பது தவிர்க்க உதவுகிறது. மார்பக ப் புற்றுநோய் வருவது குறைவு.
தாயின் தேவையற்ற உடல் எடை குறையும். ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் தருவது மிகவும் அவசியம்.
அதற்குப் பிறகும் கூட பாதுகாப்பான, ஆரோக்கியமான திட உணவுகளுடன் சேர்த்து தாய்ப்பால் கொடுப்பதையும் தொடரலாம்.
5 மாதத்திலிருந்து தாய்ப்பாலோடு (Food for five month old baby), பசும் பால், ஏதேனும் பழச்சாறு, கரட் போன்ற காய்கறிகளை வேக வைத்து எடுத்த சாறு , பருப்பு வேகவைத்து எடுத்த சாறு (Filling Station for semi-Solid Food for Babies) போன்றவை கொடுக்கலாம்.
6 மாதத்திற்கு பிறகு
இட்லி, வேகவைத்து மசித்தகாய்கறிகள்,பழக்கூழ், வாழைப்பழம், வேகவைத்த ஆப்பிள், நன்றாக பிசைந்த பருப்பு சாதம் ஆகியவை தரலாம்.
இதனுடன் சிறிது பட்டர் அல்லது நெய் சேர்த்து பிசைந்து கொடுத்தால் சுவையாகவும்,குழந்தைக்கு தேவையான கொழுப்புசத்தும் கிடைக்கும். ஆரம்பத்தில் காய்கறிகளாக கரட், உருளைக்கிழங்கு, கீரை பயன்படுத்தலாம்.