சர்க்கரைவியாதி உள்ளவர்கள் எவற்றை எல்லாம் சாப்பிடலாம்? (Foods for diabetes)
சர்க்கரை நோய் என்பது உண்மையில் ஒரு நோயல்ல.அது ஒரு குறைபாடு தான்.
சர்க்கரை வியாதி உருவாக காரணங்கள்
- சரியான உடற்பயிற்சி இன்மை
- ஆரோக்கியமான உணவு பழக்கம் இல்லாதது
- நிறைய மசாலா உணவுகள்
- குளிர்பானங்கள்
- உடல்பருமன்

சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவும் உணவுகள் (Foods for diabetes)
பனங்கற்கண்டு,பனங்கட்டி சேர்த்த க்ரீன் டீ, மூலிகை தேநீர், சீமை சாமந்தி தேநீர், ஆகியவை நல்லது. சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைத்திருக்கும்.சர்க்கரைக்கு பதிலாக தேன், பனங்கருப்பட்டி,பனங்கற்கண்டு, பேரிச்சம் பழம் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
பொட்டாசியம் அதிகம் நிறைந்த நட்ஸ், வாழைப்பழம், கிவி, ஆப்பிள் சைடர் வினிகர், பட்டாணி அகியவற்றை சாப்பிடுங்கள். அதுபோல், பார்லி அரிசி, ஓட்ஸ், பாதாம், எல்லா வித பீன்ஸ் வகைகள் ஆகியவை சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்லது செய்யும்.
தினசரி அசைவம் சாப்பிடும்போது, நம் உடலுக்கு கொழுப்புச்சத்து அளவுக்கு அதிகமாகக் கிடைக்கிறது. இந்தக் கொழுப்பு அப்படியே நம் உடலில் தங்கும்போது உடல்பருமன் ஏற்படுகிறது. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், இதய நோய்கள் போன்றவற்றுக்கு உடல்பருமன் தான் முதன்மைக் காரணம்.
கோதுமை மற்றும் தவிடு நீக்காத அரிசியில் அதிக அளவு உள்ள நார்சத்து (fiber content) சக்கரையின் அளவு இரத்தத்தில் ஒரே சீராக சேரச் செய்கிகிறது. இதனால் நீரிழிவு நோயின் தாக்கம் குறைகிறது.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடிய காய்கள் பழங்கள்
காய்கள்,பழங்களை சேர்த்துக்கொள்ளும் போது நார்பொருள் உள்ளவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது.
பப்பாளி, வெள்ளரிப் பழம், கிவி, கொய்யாப் பழம், நாவற்பழம் போன்றவற்றையும் ஏனைய பழங்களை அளவாகவும் சாப்பிடலாம்.
அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளான பட்டாணி, பீன்ஸ், ப்ராக்கோலி மற்றும் கீரை வகைகளை உணவோடு சேர்க்க வேண்டும். இந்த வகையான காய்கறிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும்.
முருங்கைக் கீரையை நாள் தவறாமல் ,சாப்பிட்டுவர சர்க்கரை நோயாளிக்கு உடம்பில் சர்க்கரை நோய் நீங்கி, சுகம் பெறலாம்.
வெங்காயம், இன்சுலினைத் தூண்டும் சக்தி வாய்ந்தது. வெங்காயத்தை பச்சையாக சாப்பிடவேண்டும்.
வெங்காய பச்சடி, வெங்காய சம்பல் , செய்து சாப்பிட லாம். நீராகாரம், கேழ்வரகு, கோதுமை போன்ற கஞ்சிகளில் கலந்தும் சாப்பிடலாம்.
கத்தரிக்காய், அவரைக்காய், பாகற்காய், வெண்டைக்காய், கொத்தவரங்காய், வெண்பூசணி, வெள்ளை முள்ளங்கி, புடலங்காய், பலாக்காய், காலிபிளவர், முட்டை கோஸ், வாழைத்தண்டு, வாழைப்பூ, சிவப்பு முள்ளங்கி, சுரைக்காய் போன்றவை சாப்பிடலாம்.