ஞாபகசக்திக்கு அற்புத உணவுகள் (foods for memory)
படித்ததை ஞாபகம் வைப்பதற்கும் மறக்காமல் இருப்பதற்கும் அற்புத உணவுகள்(wonderful foods for memory)
மூளை வேகமாக செயல்படுவதற்கு நாம் சாப்பிடும் உணவு மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது. நமது உடம்பில் உள்ள மிக அற்புதமான உறுப்பு தான் மூளை. நல்ல ஒரு ஆரோக்கியமான மூளை வேகமாக செயல்படும்.மூளைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் (foods for memory) எல்லாம் கிடைக்கும்போது நமது மூளை மிக ஆரோக்கியமாக செயற்படும்.
அதோடு நம்முடைய சிந்திக்கும் திறன், ஞாபகசக்தி அதிகரிக்கப்படும்.
சில பிள்ளைகளுக்கு படிப்பதை ஞாபகம் (Memory power) வைத்திருப்பது என்பது மிகக் கஷ்டம்.அதுவும் ,தேர்வு நெருங்க நெருங்க இன்னும் அதிகமாகின்றது.
ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் வயது முதிர்ச்சியாலும், மன அழுத்தத்தினாலும் சோர்வடைவதே. அதனால் மூளை சரியாக எதையும் ஞாபத்தில் வைத்துக் கொள்ள முடியாதநிலை ஏற்படுகிறது.
எனவே பிள்ளைகள் நன்றாக படிக்க, அவர்களுக்கு மூளை வளர்ச்சியைத் தரக் கூடிய நல்ல உணவுகளை கொடுக்க வேண்டும்.
உணவின் மூலம் (foods for memory) ஞாபக சக்தியை எவ்வாறு அதிகரிப்பது என்பதை கீழேயுள்ள வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்வோம்.
பொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும்.பசலைக் கீரை, லெட்யூஸ், ப்ராக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் முளைகட்டிய பருப்புவகை போன்றஉணவுகள் ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
